20 May 2017

மாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்கணுமா :)

டிக்கெட் எடுத்ததற்கு என்ன மரியாதை :)
              ''ரயில் டிக்கெட் எடுத்து ,ஏண்டா வந்தோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
              ''செக்கர் யாருமே வரலையே !''

சேர்த்து வைச்சு என்ன புண்ணியம் :)           
           '' உங்க அப்பா, செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரியா ,எப்ப
டி ?''
           ''அவரோட உயில் அமுலுக்கு வர ,அவரே  தற்கொலை பண்ணிகிட்டாரே !''

மாத்திரை முழுங்க  மனைவியிடம் கேட்கணுமா  :)
         '' மாத்திரையைச் சாப்பிடலாமான்னு என்கிட்டே ஏன் கேட்கிறீங்க ?''
          ''அரை மணி நேரத்திலே சாப்பாடு  ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
மனுஷன் இப்படி செய்யலாமா :)
          ''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை , உங்க நாயே ஏன் கடிச்சது ?''
         '' தெரியாத் தனமா அதோட பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டேனே !''

புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை :)
ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

48 comments:

 1. ஹாய் ஜீ, மாத்திரை, ரயில் டிக்கட் செம செம :)

  ReplyDelete
  Replies
  1. மனைவிக்கு எப்படியெல்லாம் பயப்பட இருக்கு இல்லையா ஜி :)

   வித்தவுட்டில் வந்தால் மாட்டிக்க வேண்டியிருக்குன்னு டிக்கெட் எடுத்தால் இப்படியா செக்கர் ஏமாற்றுவது :)

   Delete
  2. அதானே ஜீ... டிக்கட் எடுக்காத நேரமா பார்த்து செக்கர்ஸ் வருவாங்க... எப்புடித்தான் கண்டுபுடிக்காய்ங்களோ..? :)

   ஓட்டு போட்டாச்சு ஜீ

   Delete
 2. மனுஷன் இப்படிச் செய்யலாமா..? //

  அதானே :)

  ReplyDelete
  Replies
  1. மன்சனுக்கு எப்படியெல்லாம் ஆசை வரும்னு சொல்ல முடியலை ஜி :)

   Delete
 3. தத்துவம் சிந்திக்க வைச்சது..! புத்தரின் போதனையை மதித்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காதே..!!

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவின் ஒரு பகுதியை தன் பகுதி என்பதும் ,தமிழரின் நிலங்களை எல்லாம் அபகரித்து தன் பகுதியென்று புத்தமத இரு நாட்டார் கொக்கரிப்பது வேதனையை தருதே :)

   Delete
 4. முதல் வாக்கு ?
  நானா ?

  நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. முதல் வாக்கு நீங்க தான். ஆனா முதல் கமெண்ட் என்னோடது. ஸோ, பரிசு எனக்கே :)

   Delete
  2. ஒரு வாக்கு ,இருவர் அதை தங்கள் வாக்கு என்கிறார்கள் ...மறுபடியும் சாலமன் கதை தொடரவில்லை ....மகிழ்ச்சி ராஜீவன் ராமலிங்கம் ஜி,mathu ஜி :)

   Delete
  3. ஹாஹா :) நாந்தான் ரெண்டாவது வாக்கு

   Delete
  4. அது சரி அதிரா எங்க போனாங்க.....வாக்கு...மீ பார்ஸ்டுஊஊஊனு வருவங்களே..

   கீதா

   Delete
  5. அதிராவை நினைத்தால் ஒரே கலவரமா இருக்கு , தேம்ஸ் ரிவர்லே குதிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருத்தாங்களே:)

   Delete
  6. நான் இல்லாமலே கலவரமா?:) இருந்தாத்தானே கலவரம் ஆகும்:) இது எப்பூடி?:)

   Delete
  7. #asha bhosle athira#
   இதென்ன புது அவதாரம் :)

   Delete
  8. //இதென்ன புது அவதாரம் :)/// ஹா ஹா ஹா அது யாருமே பயப்பிடீனம் இல்லை:) என்னோட இன்னொரு முகத்தை இனித்தானே பார்க்கப்போறீங்க நீங்க:) இனி பாடியே மிரட்டப்போறேன்:)...[ காதைக் கொண்டு வாங்கோ ... இது பழைய அவடாரம்தான்:) இடைக்கிடை வந்து போவதுண்டு:)]

   Delete
 5. பிஸ்கட் சாப்பிட்டவர் செரினா வில்லியம்சோட அண்ணன் போலிருக்கு :)
  கர்ர்ர்ர் :) சாப்பாட்டை மாத்திரைனு சொன்னதுக்கு தெளிவா சத்து விட்டமின் மாத்திரைனு சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. அந்த அண்ணன் இப்படி சாப்பிட்டதா தகவல் ஏதும் வந்திருக்கா :)

   Delete
  2. ஹாஹா :) அது செரினா வில்லியம்ஸ் இத்தாலியன் ஓபன் டென்னிஸ்க்கு போனப்போ ஹோட்டலில் அவங்க செல்ல doggie க்கு ஹோட்டலில் தனியா தந்த dog food கொஞ்சம் சாப்பிட்டாங்களாம் ..அதை சொன்னேன் :)
   சாப்பிட்டதில் அம்மணிக்கு வயிறு வலியோட டென்னிஸ் ஆடி முடிச்சி கோப்பையும் எடுத்து

   Delete
  3. எதைச் சாப்பிட்டாலும் செரிக்கும் ,செரினாவாச்சே :)

   Delete
 6. கணவ்ர் கேட்டது சுகர் மாத்திரைய்யா நான் என்னவோ வேற் மாத்தீரை போட அனுமதி கேட்கிறாரோ என்று நினைத்துவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. மொத பல்பு நீங்கதானா :)

   Delete
 7. Replies
  1. ரயில் பயணியின் ஆதங்கம் நியாயம்தானே :)

   Delete
 8. மாத்திரை. சாப்பாடு - ரசித்தேன்.

  ரயில் டிக்கெட் - அதானே! எடுக்கும் என்றாவது ஒருநாள். அதுவும் அஃநாலட்ஜ் செய்யப்படாவிட்டால் எப்படி!

  ReplyDelete
  Replies
  1. மனைவி ,மாத்திரை என்றால் அதுதான் ஞாபகம் வருமா :)

   செக்கர் மட்டுமா வரலே ,டீ காப்பி கூட வரலே :)

   Delete
 9. ஆம் செக்கர் வராத நாளிலெல்லாம்
  எல்லோருக்கும் வரும் எண்ணம்தான்
  நாய் பிஸ்கெட் விஷயம் அருமை
  தொடர நல்வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. செக்கர் வருவார் என்று தூங்காமல் காத்துக் கிடந்தால் இப்படி செய்யலாமா :)

   விசுவாசம் கூடட்டும் என்று மனைவியே பிஸ்கட்டை மாற்றி வைத்திருப்பாரா :)

   Delete
 10. புத்தர் சிந்தனை அருமை ஜி...

  ReplyDelete
  Replies
  1. சீனாவில் புத்தரிஷமும் இல்லை ,கம்யுனிஷமும் இல்லை :)
   இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் இல்லை :)

   Delete
 11. டிக்கெட்டுக்கு மரியாதை.

  ReplyDelete
  Replies
  1. இந்த அலட்சியத்துக்கா இரண்டு மாதம் முன்னாடியே டிக்கெட் புக் செய்தது :)

   Delete
 12. செக்கர் யாருமே வரலைன்னா... யாருமே டிக்கெட்ட பார்க்கலைன்னா... வேஸ்ட்தானே...!

  உயில்ல மகனுக்கு எந்த சொத்தும் கொடுக்கக்கூடாதின்னு எழுதிவச்சிட்டில்ல... தற்கொலை பண்ணிக்கிட்டாராம்...!

  அதானே பார்த்தேன்...!

  ‘தனக்கு மிஞ்சிதானே தான தர்மம்’ அந்த நாய்க்குத் தெரிஞ்சிரிக்கு...!

  ‘மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
  மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது...!’-இந்தப் பாட்டை சீனமொழியிலும் சிங்கள மொழியிலும் மொழிபெயர்த்து போட்டுக் காட்ட வேண்டியதுதானே...!

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. டிக்கெட் எடுத்த தெம்பிலே 'நீ வருவாய் என 'காத்திருந்தது வீணாய் போச்சே :)

   செத்தும் கெடுத்தானா இந்த சீதக்காதி:)

   நீங்களும் பல்பு வாங்கின மாதிரியிருக்கே :)

   போட்டிக்கு இப்படி இரண்டுகால் நாய் வரும்னு அதுக்கு தெரியலை :)

   கவிஞர் வைரமுத்துவோட பாடலை மொழி பெயர்க்குமா மத்திய அரசு :)

   Delete

 13. புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை :)
  சிங்களவர்களின் மண் ஆசையால்
  ஈழத் தமிழர்
  கடலில் வீழ்ந்து சாகவேண்டிய நிலை!

  ReplyDelete
  Replies
  1. என்று தீருமோ இந்த துயரம் :)

   Delete
 14. மண்ணாசை யோசிக்க வைத்தது

  ReplyDelete
  Replies
  1. சம்பந்தப் பட்ட நாடுகள் யோசிக்க மாட்டேங்குதே :)

   Delete
 15. தலையைப் பிராண்டி பின்னூட்டம் இட்டால் மறு மொழிகளில் காணோமே

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ரயில் டிக்கெட் எடுத்த அன்று செக்கர் வராத கதைதான் .காபி எடுத்தால் சரியாக வெளியாகிவிடும் :)

   Delete
 16. அனைத்து ஜோக்குகளும் நன்று

  ReplyDelete
  Replies
  1. மாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்பதில் தப்பில்லையே ஜி :)

   Delete
 17. மாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்கணுமா :)//

  வீடு திரும்பும்போது, ஓட்டலில் கொஞ்சம் வெட்டிட்டு வந்துடலாமே!

  ReplyDelete
  Replies
  1. மனைவியை ஏமாற்ற முடிந்தவருக்கு மனசாட்சியை ஏமாற்ற தெரியவில்லையே :)

   Delete
 18. மாத்திரை...சுகர் மாத்திரை...பாவம் கணவர்...

  அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்நாள் முழுவதும் எப்படி சமாளிக்கப் போறாரோ :)

   Delete
 19. வேறு வழி இல்லாதவுங்க கேட்டுத்தானே ஆகனும்...

  ReplyDelete
  Replies
  1. கேட்கலைன்னா அப்புறம் புவ்வாவுக்கு லாட்டரி அடிக்கணுமே :)

   Delete