21 May 2017

அன்று 'தேவதை 'மனைவி ,இன்று 'தேவைத் தானா' :)

            ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும்  குரைக்குதே,ஏன் ?'' 
            ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் தெரியுமாம் ,அதனால் ஆயிருக்கும் !''

பையன் நல்லா வருவான் போலிருக்கா :)
                ''அளவுக்கு மீறினால்  நஞ்சுன்னு சொல்றது உண்மைதான் ,அதுக்கென்னடா இப்போ ?''

                 ''அதனால்தான்  எல்லா பாடத்திலும்  பார்டர் மார்க் வாங்கி பாஸ்  ஆகியிருக்கேன்பா  !''

மகுடிக்குப் பதிலா ராகமா :) 
              ''மகுடி உடைஞ்சு போனதுக்கு ,சங்கீத வித்வான் நான்...  உனக்கு எப்படி உதவ முடியும் ?''
            ''நீங்க புன்னாகவராளி ராகத்தை பாடினா பாம்பு வரும்னு சொல்றாங்களே !''

சப்பை மூக்கு என்றாலும் அழகிதானே :)
              ''சீனாவில் ...நம்ம நாட்டில்  விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட  விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா  இருக்கும் போலிருக்கே !''
             ''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு அவங்களுக்கு மூக்கே இல்லையே !''
அனுமந்து OK ,1/2விந்து NO:)
          ''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம்,  ,நாங்க செலக்ட் செய்த 'அரவிந்து 'ங்கிற பெயர்தான்னு எப்படி சொல்றீங்க,டாக்டர் ?''
          ''அரவிந்த்ன்னு கூட சரியா சொல்லத் தெரியலையே !''

கண்ணாடி சொல்லும் உண்மை :)
வெளியே தெரிவதை என்னால் காட்டமுடியும் ...
உள்ளே உள்ளதை நீதான் பார்த்துக்கணும் !

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460642 >>>இந்த லிங்க் எதுக்குன்னா ,இன்னும்  'தம'ன்னா  வோட்டு போடாத இருவருக்காக :)

45 comments:

 1. முதலில் கண்ணாடி சொல்லும் உண்மை... வாவ்வ்வ்வ்வ்..!!

  ReplyDelete
  Replies
  1. வாவ்னு சொல்லிகிட்டே கண்ணாடியைப் பார்த்தீங்களா :)

   Delete
 2. மனைவியை 'பேய்' அப்டீன்னு சொல்லிட்டாரு நம்ம ஜீ..! இன்னிக்கு என்னாகப் போகுதோ..?? :)

  ReplyDelete
  Replies
  1. சாத்தானைப் பார்த்து பேய் பயப் படாது ஜி :)

   Delete
 3. அளவுக்கு மிஞ்சினால்.... அடச்சே இவ்ளோ நாளும் இது தெரியாமப் போய்ச்சே..! அந்தக் காலத்துல நானெல்லாம் கஷ்டப்பட்டுப் படிச்சு, டாப் மார்க்ஸ் வாங்கி.... :)

  டைம வேஸ்ட் பண்ணிட்டனே :)

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் வேஸ்ட் ஆகலே ,நீங்கதான் வெள்ளைக் காரன் நாட்டுக்கு போய் அவங்களுக்கே ஆங்கிலம் சொல்லித் தர்றீங்களே ஜி :)

   Delete
 4. சைனா - மூக்கு = ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. இது சைனாக் காரன் காதுக்கு போகாம இருக்கணும் ,ஏற்கனவே பாடர்லே வம்பு பண்றான் :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அனுமந்து ,1/2விந்து சரிதானே ஜி :)

   Delete
 6. Replies
  1. கண்ணாடி சொல்லும் உண்மையையும் தானே :)

   Delete
 7. Replies
  1. பையன் பாஸ் ஆனதில் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே :)

   Delete
 8. கண்ணாடி உண்மையே பேசும்.

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் எல்லோரும் அடிக்கடி பார்த்துக் கொள்கிறார்களோ :)

   Delete
 9. ஒனக்கு நாற்பது வயதாயிடுச்சிங்கிறது நாய்க்கும் தெரிஞ்சு போச்சு போல...!

  வீணா ஏன் நஞ்ச விரயமாக்கனும்...!

  ஒடம்பு புண்ணாகிடும்... ஓடிப்போயிடு...!

  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டியதுதான்...!

  அரவிந்து ஆசிரம் ஆரம்பித்து விடுவார்...!

  பரவாயில்லை... ஸ்கேனில் பார்த்துக் கொள்கிறேன்...!

  த.ம. 7  ReplyDelete
  Replies
  1. நாயோட குணம் நாய்க்குத்தானே தெரியும் :)

   அதுக்காக குடிக்கவா முடியும் :)

   புண்னாகவரலியா அது :)

   ஆமாம் ,டைரெக்டா சூரியனை பார்க்கக் கூடாதே :)

   விந்து பாங்க் மாதிரியா :)

   தலைஎழுத்தும் அதில் தெரியுமா :)

   Delete
 10. நாய்கக்கு மட்டும் எப்படி தெரியுதுன்னே தெரியல பாஸ்

  ReplyDelete
  Replies
  1. நாய் ஜென்மம் எடுத்து பார்க்கவா முடியும் :)

   Delete
 11. அரவிந்த் அரை விந்து ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. முழு விந்து என்றால் முழுதாய் இருக்கும் என்பது உண்மைதானே :)

   Delete
 12. எல்லாமே ஜோக்குதான்

  ReplyDelete
  Replies
  1. சொல்வதெல்லாம் உண்மைன்னா நான் சொன்னேன் :)

   Delete
 13. மீ தான்ன்ன்ன் லாஸ்ட்டில 1ஸ்ட்டூஊஊஊஊஊ:).. பகவான் ஜீ மேடைக்கு வரவும்... வி ஐ பி எல்லாம் சினிமால இருக்கிற சீட் லாஸ்ட் சீட் டாத்தானே இருக்கும்:).. அதுபோல இன்னொன்று, குழல்புட்டில கடேசியாப்போடும் புட்டுத்தான் முதேல்ல வெளில வருமாம்.. அதனால.. நீங்க கீழ இருந்து மேல 1ஸ்ட்டா இருக்கிற எனக்குத்தான் பதில் 1ஸ்ட்டாக் குடுக்கோணும் சொல்லிட்டேன்ன்.. இல்லையெனில் தண்ணியில்லாத அந்த கங்கையில தள்ளி விட்டிடுவேன்.. பீ கெயார்ஃபுல்[ ஹையோ இது எனக்குச் சொன்னேன்:)].

  ReplyDelete
  Replies
  1. வைகையில் தள்ளிடுவேன்னு சொல்லியிருந்தா வருத்தப் பட்டிருக்க மாட்டேன் ,எப்பவும் தண்ணி ஓடுற கங்கையை சொல்லிட்டீங்க ,அதனால 1ஸ் உங்களுக்கே பதில் சொல்றேன் !
   புட்டு மூலமா அரிய தத்துவமே சொல்லிட்டீங்க ,அதிராவுக்கு இம்புட்டு அறிவான்னு அசந்து போனேன் :)

   Delete
  2. ஹா ஹா ஹா முச்சந்திச் சாத்திரியார் அப்பவே சொன்னார்ர்.. ”பெயரை மாத்தினால்.. பிள்ள நீ எங்கயோ போயிடுவாய் என”:) அது சரியாத்தான் இருக்குது போல:)...

   Delete
  3. முச்சந்திச் சாத்திரியாரை நம்பாதீங்கோ ,அதிராவுக்கு இப்போ என்ன குறைச்சல் :)

   Delete
 14. நான் அன்று தேசிக்காய் தந்தேன் கட்டிவிடுங்கோ கண்படாமல் இருக்கட்டும் என:) நீங்க இன்விஸிபிளா கட்டினீங்களா?:) இப்போ மகுடம் இன்விஸிபிளா இருக்குது போலிருக்கே.. கர்:).. என்னவாவது பண்ணுங்கோ.. 29 ம் திகதி மகுடம் அதிராவுக்கே:)

  ReplyDelete
  Replies
  1. அதிரா எங்கள் ப்ளாகிற்கும் ஒரு தேசிக்காய் கட்டிடுங்க....அவங்க பெட்டி எங்களுக்குத் தெரிவதே இல்லை...ஓட்டு போட்டாலும் சுத்திக்கிட்டே இருக்கு...ஹஹ
   கீதா

   Delete
  2. வெயில் அதிகமாய் இருக்குதேன்னு மகுடத்தை இறக்கி வச்சேன் ,இப்போ விசிபிளா தெரியுதா ?எலியைப் பிடிக்கணும்னா பொறுமையா இருக்கணும்னு பூசாருக்கு சொல்லியாத் தரணும் :)
   மண் குடம் ,சாரி சாரி ,மகுடம் 29 ம் தேதி உங்க தலையிலே ஏறும் ,நான் கியாரண்டீ:)
   கீதா மேடம் ஆசைப் படுறாங்க , தேசிக்காயை உங்க கையாலே கட்டிடுங்கோ :)

   Delete
  3. சகோ ஸ்ரீராம் லிங் போட்டமையால் இன்று மகுடம் சூடிட்டார்ர்:) ஆனா லிங் போடமாட்டேன் என அடம் புய்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  4. கர்ர்ர்ர்ர் எனக்கு வைரம் பதிச்சதுதான் வேணும் பகவான் ஜீ:).. சொல்லிட்டீங்க இல்ல... இனி நேக்கு நோ கவலை:)

   Delete
 15. ''அளவுக்கு மீறினால் நஞ்சுன்னு சொல்றது உண்மைதான் ,அதுக்கென்னடா இப்போ ?''

  ''அதனால்தான் எல்லா பாடத்திலும் பார்டர் மார்க் வாங்கி பாஸ் ஆகியிருக்கேன்பா !''

  ReplyDelete
  Replies
  1. சரிடா மகனே ,உன் அறிவுக்கு நீ பாசானதே பெரிய விஷயம்னு அப்பா சொல்லியிருப்பாரோ :)

   Delete
 16. உங்கள் ஓட்டுப் பெட்டி கண்ணுக்கும் தெரிகிறது....ஓட்டும் வேகத்தில் விழுந்துவிடுகிறது பெரும்பாலும்....எங்கள் ப்ளாக் பெட்டிதான் தெரிவதில்லை....ஓட்டு போட்டாலும் சுத்துது...ஹஹஹ்

  முதல் மற்றும் சப்பை மூக்கும் அஹ்ஹஹ அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. உங்க பிரச்சினைத் தீர ஒரே வழி ,நம்ம அதிரா விற்கிற தேசிக்காய் வாங்கி கட்டுவதுதான் :)

   சப்பை மூக்கிடம் ஜாக்கிரதையா இருக்கணும் ,இல்லைன்னா நம்ம மூக்கு சப்பளிஞ்சு போகும் :)

   Delete
  2. தேசிக்காய் பகவான் ஜீ க்கு வேலை செய்யுது போலத்தான் இருக்கு:)

   Delete
  3. அநியாயமா வேலை செய்யுது ,நாளைக்கு வரவேண்டிய மகுடம் இன்னைக்கு வந்துடுச்சே :)

   Delete
  4. வாழ்த்துக்கள்... என்வலப்புக்குள் பவுண்ட்ஸ் இருக்கு:)

   http://weclipart.com/gimg/009D3ACF20F6B423/f5e5c87df3f022ffbf437e10a6bfe9fb.jpg

   Delete
  5. வெம்பர்லி பார்க் மைத்துனர் வீட்டுக்கு வர வேண்டியிருக்கு ,அப்போ யூஸ் பண்ணிக்கிறேன் :)

   Delete
 17. தமிழ் அணம் -13
  தமிழ் மணம் -13
  சப்பை மூக்கு....கண.ணாடி நிற்காது...ஆகா..கா
  முகம் பார்க்கும் கண்ணாடி என்று ரசித்தென் சகோதரா....
  https://kovaikkavi.wordpress.com/
  https://kovaikkothai.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை,காண்டாக்ட் லென்ஸ் எல்லோரும் போட்டுக்குவாங்களோ:)
   அதுவும் ரசம் இருக்கும் வரைக்கும் தான் காட்டும் :)

   Delete
 18. வணக்கம் ஜி !

  இந்தமுறை எல்லாமே நூறு மார்க் வாங்கி இருக்கு ஆனா ஒரே ஒரு வருத்தம் சைனா மூக்கை சப்பை என்று சொல்லிட்டீங்க தாங்கல்ல பாஸ் ( காரணத்தைக் கேட்காதீங்க அது நயன ரகசியம் ) அரைவிந் என்றால் ஐந்து மாசத்தில்தானே பிறக்கணும் ஜி என்ன குழப்புறீங்க ? அவ்வ்வ்வ்

  தமன்னா வோட் மேலும் ஒன்று !

  ReplyDelete
  Replies
  1. இப்போ மணி ஒண்ணரை,தூங்கிக்கிட்டிருந்த என்னை உசுப்பிருச்சு உங்க நயன ரகசியம் !சரி ஜி காலையில் பார்ப்போம் ...ரகசியத்தைத் தெரிஞ்சிக்காம தூக்கம் வருமான்னு தெரியலே :)

   Delete