25 May 2017

காதலிக்கும் போது சொன்னது என்னாச்சு :)

சிஸ்டத்தை சரி செய்ய ரஜினியால் முடியுமா :)

             ''வெளிநாட்டுக்குப்   போறேன்னு சொன்னாலே போதும் , கம்ப்யூட்டர்  வாங்கி வரச் சொல்றாங்களே ,ஏன் ?''
            ''இங்கே சிஸ்டம் சரியில்லேன்னு  ரஜினி சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டவங்களா  இருக்கும் !''


காதலிக்கும் போது சொன்னது என்னாச்சு :)

        '' பிள்ளையை உடனே பெத்துக்க மாட்டேன்னு  காதலிக்கும் போது சொல்லிட்டு ,இப்போ ஏன் உடனே வேணும்னு சொல்றே ?''

        ''ஒரு பேரப் பிள்ளையைப் பார்த்துட்டா, நிம்மதியா  போய் சேர்ந்துடுவேன்னு  உங்கம்மா சொல்றாங்களே !''

படிக்கிற காலத்திலேயே அப்படின்னா ...:)

        ''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிரூபிக்க ,தலைமை ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''

        ''அப்போதே கஞ்சா அடித்து வந்ததால்,  டி சி கொடுத்ததை  மறக்க முடியாதுன்னு   சொல்லிட்டாரே !'' 


உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா :)

           '' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்றதைப் பார்த்தா , அவர் போலி டாக்டர் போலிருக்கா  ,எப்படி !''

            ''பொணத்து இடுப்புலே கிச்சுகிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''


வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)

          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை  ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''

          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''


புரியுது ,ஆனா புரியலே :)             

            ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும், புரியுதா ?''

             ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''


இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461112 செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

43 comments:

 1. வந்துட்டன் ஜீ வந்துட்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. நீங்க வந்த பின்னாலும் பதிவு தமிழ் மணத்தில் சேர தாமதமாகுதே ....ஐம்பது பதிவுகள் மேல் முகப்பில் வராமலே நிற்குதே ஜி :)

   Delete
  2. அடடா, என்னாச்சு ஜீ? தமிழ்மணம் தான் அடிக்கடி மக்கர் ஆகுதாமே.. இன்னிக்கு என்னாச்சோ?

   Delete
 2. ஓட்டுப் போடாம கொமெண்ட் போட கூடாது எண்டு கண்ணதாசன் சொல்லி இருக்கார் :)

  ஸோ வெயிட்

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் சொல்லிட்டு போயிட்டார் ,இங்கே தமிழ் மணமே கோமா ஸ்டேஜிலே இருக்கே ! ஒட்டு விழுவதற்குள் விடிந்து விடும் போலிருக்கே ஜி :)

   Delete
  2. பரவாயில்லை ,உங்க வாக்கு பலித்து விட்டதே :)

   Delete
  3. பால்போல வெள்ளை மனம் கொண்ட அப்பாவியின் வாக்கு பலிக்கும் ஜீ :)

   Delete
  4. #'பால்'போல வெள்ளை மனம் #
   பால் என்றால் பூஜாருக்கும் புரிந்து இருக்கணுமே ,வரட்டும் பார்ப்போம் :)

   Delete
 3. ரஜினியின் சிஸ்டம் - ஹாஹா

  பேரப்பிள்ளை ஜோக் - டாப் டக்கர் :)

  தலைவர் ஜோக் - அடப்பாவிகளா? :)

  போலி டாக்டர் - ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. சிஸ்டத்தை சரி செய்ய ரஜினியால் முடியுமா ஜி :)

   மாமியார் இம்புட்டு பாசமா :)

   அடப்பாவிகளா? களா கிடையாது :)

   இதுவும் ஒரு வகை ஷாக் ட்ரீட்மெண்டா:)

   Delete
 4. அந்த கடைசி ஜோக் - அச்சசோ :) ;)

  ReplyDelete
  Replies
  1. உண்மையைக் கக்கிட்டாரா:)

   Delete
 5. ஸிஸ்டம் சரி இல்லே... ஹா ஹா ஹா

  அம்மாவின் ஆசை! உனக்கும் உண்டு எதிர்காலம், மாமியாராக!

  கிச்சுகிச்சு - சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மக்கள் புரட்சி வராமல் சிஸ்டம் சரியாகாது ,சரியா ஜி :)

   அதை யார் நினைக்கிறா :)

   டாக்டர் உங்களைத் தொட்ட மாதிரியிருக்கா :)

   Delete
 6. Replies
  1. கண்ணாடியில் தெரியும் குழந்தையின் அழகையும் தானே :)

   Delete
 7. சிஸ்டம் அஹஹஹஹஹஹ்

  கிச்சுகிச்சு மூட்டியது எங்களையும் மூட்டியது!!! ஹஹஹ

  அனைத்தும் ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. சிஸ்டம் சரி செய்ய யாரால் முடியும் ஜி :)

   டாக்டர் இதில் எக்ஸ்பெர்ட் :)

   Delete
 8. வெளிநாட்டுக்குப் போனவங்க... வேலை காலியானதால... சும்மா இருக்கிற அவுங்க கம்ப்யூட்டர வாங்கி வரச் சொல்லி இருப்பாங்க...!

  மாமியாவின் கடைசி ஆசையை நிறைவேத்தலைங்கிற குறை எனக்கு வந்திடக்கூடாதில்ல...!

  யாரு கஞ்சா அடித்து வந்தது...?!

  பரவாயில்லை... இதான் அதிர்ச்சி வைத்தியங்கிறது... பயப்படமா கிச்சு கிச்சு மூட்டுறாரே...!

  நல்லாப் பாருங்க... அது பருப்பு இல்ல... கோதுமை...!

  ‘அடிக்கிற கைதான் அணைக்கும்...!’ புரியுதா...?!

  த.ம. 6  ReplyDelete
  Replies
  1. சிஸ்டம் போய் எல்லாமே லேப் டாப் ஆயிடிச்சே :)

   பிரசவம் என்பது மறு ஜென்மம் ,ஞாபகத்தில் வைச்சுக்கோ:)

   பிஞ்சில் பழுத்த தலைவர்தான் :)

   எதுக்கு பயம் ,கொன்னதே அவர்தானே :)

   பருப்பு நிற கோதுமையா :)

   அடி வாங்கவா தாலியைக் கட்டிக்கிறது :)

   Delete
 9. இவன் அரசியலுக்கு வர்றானோ... இல்லையோ.. பதிவர்களுக்கு ஒரு கோமாளி கிடைச்சாச்சு.

  ReplyDelete
  Replies
  1. நிறைய மீம்ஸ் எதிர்பார்க்கலாம் இல்லையா ஜி :)

   Delete
 10. http://www.gifmania.co.uk/Animated-Letters-Animated-Gifs/Animated-Animal-Letters/Alphabet-Cats/Black-Cats-Alphabet/black-cat-number-6-12745.gif

  ReplyDelete
  Replies
  1. பகவான் ஜீக்கு என் வன்மையான கண்டங்கள்:)

   Delete
  2. #வன்மையான கண்டங்கள்:)
   ரீலாக்ஸ் ,ரீலாக்ஸ்....கோபத்தில் 'ன'வை விட்டுட்டீங்களே:)

   Delete
 11. Replies
  1. துயரம் பருப்பு டேஸ்ட்டா இருக்கா ஜி :)

   Delete
 12. ரஜனியே சொல்லியாச்சா
  எப்படியாவது அம்மா போகணும்
  தன் வினை தன்னைச் சுடும்
  இடுப்பில் ஏதாவது கட்டியிருக்கிறாரா என்று பார்த்து உருவவும் இருக்கலாமோ.
  பருப்பெல்லாம்துயரம் பருப்பாகுமா பதிவெல்லாம் ஜோக்காளி எழுதுவது போலாகுமா
  என்கேள்விக்கென்ன பதில்

  ReplyDelete
  Replies
  1. அவர் மட்டும்தான் பாக்கியிருந்ததா :)
   வாழ்க்கையில் இதை விட எதுவும் முக்கியமில்லை :)
   ஹும், ஹெஸ் எம் எப்படி அடி வாங்கினாரோ :)
   டாக்டருக்கு உயிர் காசிலே தானா :)
   மொக்கை போடவும் தனித் திறமை வேணும் அப்படித்தானே :)
   பதில் சொல்ல முடியாத கேள்வியா இருக்கே :)

   Delete
 13. முதல் ஜோக்,முதல் தரம்

  ReplyDelete
  Replies
  1. அடுத்து அடுத்து அடுத்த தரமில்லை தானே :)

   Delete
 14. ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !//

  கல்யாணம் பண்ணிக்காம காதலியைக் கைகழுவிடுவாரோ?!


  ReplyDelete
  Replies
  1. சபாஷ் , அவர் ஐடியாவை நீங்க புரிஞ்சிகிட்டீங்களே :)

   Delete
 15. Replies
  1. அருமைன்னு நீங்க சொல்றது ,எனக்கு பெருமையா இருக்குது அய்யா:)

   Delete
 16. அன்று
  துவரம் பருப்பு
  இன்று
  துயரம் பருப்பு
  எல்லாம்
  ரேஷன் கடையான்
  வேக மாட்டேங்கிறதால
  அப்ப
  தண்ணியில பிழையில்லை

  ReplyDelete
  Replies
  1. தாயையும் ,தண்ணியையும் குறை சொல்ல முடியுமா :)

   Delete
 17. ரஜினி சொன்ன சிஸ்ட்ம் இதானா?! நாடு எங்க உருப்படப்போகுது

  ReplyDelete
  Replies
  1. அந்த ரஜினியே வந்தாலும் உருப்படாது :)

   Delete
 18. முதல் ஜோக்கே அருமை முழுவதும் பெருமை

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யா சொல்ல நினைத்ததை நீங்க சொன்ன மாதிரியிருக்கே :)

   Delete
 19. ஆசைக்கு ஒன்னு என்பது மாதிரி நிம்மதிக்கு ஒன்னு என்று நிணைத்துக் கொள்ள வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. மாமியார் இல்லைன்னாதான் மருமகளுக்கு நிம்மதியா,அந்த நிம்மதிக்கு அவசரமா பெத்துக்கணுமா:)

   Delete