26 May 2017

பார்க்க மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)

நியாயமான கேள்விதானே இது :)
         ''இன்னும் பத்து ரூபாய் கொடுங்க ,இரண்டடி டியூப் லைட் விலை முப்பது ரூபாய் !''
         ''அதெல்லாம் முடியாது ,நாலடி  டியூப் லைட் விலையே நாற்பதுன்னுதானே சொல்றீங்க !'' 

தமிழகத்தில் வேறெங்கும் இல்லா கொடுமை :)          
            ''என்ன  சொல்றீங்க ,வேலூர்லே வெயிலும் ஜாஸ்தி ,பெயிலும் ஜாஸ்தியா ?'' 

            ''ஆமா ,உச்சபட்ச வெயிலும் அங்கேதான் ,குறைந்த பட்ச தேர்ச்சி விகிதமும் அங்கேதானே !''

சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்காதுதான் :)
                ''கூலாய் இருக்கிறதை கைப்பிடி கிளாஸிலும்,சூடாய் இருப்பதை  சாதா கிளாஸிலும் குடிக்க  கொடுக்கிறது பொருத்தமில்லை தானே  ?''
                 ''உடம்பை முழுக்க மூடுற சுடிதாரை  வடநாட்டு உடைன்னும்  ,இடுப்பை மறைக்காத சேலையை நம் பாரம்பரிய உடைன்னு சொல்றதுகூட பொருத்தமில்லைதான்  ,என்ன செய்றது  ?''


பார்க்க மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)         
           ''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டிய சமையலை பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
            ''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''

டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது :)
             ''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா என்னாகும் ?''
              ''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461255செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

51 comments:

 1. ஹல்லோ ஜீ ஹவ் ஆர் யூ?

  ReplyDelete
  Replies
  1. ஃபைன், இவ்வளவு வேகமாய் நீங்க வரும் போது எனக்கென்ன குறை வரப் போவுது ஜி :)

   Delete
  2. எனக்கு ஜோக்ஸ்னா அவ்ளோ புடிக்கும் ஜீ.. அதோட நீங்க வேற அன்பா பேசுறீங்க.. அதான் முதலாவதா ஓடி வர்ரேன்

   Delete
  3. அடடா அப்படியா ,இத்தனை வருஷமா வராம போயிட்டீங்களே ஜி :)

   Delete
 2. அதானே? பார்க்க மட்டும் அழகா இருந்தா போதுமா? :)

  ReplyDelete
  Replies
  1. நீங்க சமையலைத் தானே சொல்றீங்க :)

   Delete
 3. நீங்க 26 ம் தேதி போட்ட பதிவுக்கு நான் 25 ம் தேதியே கமெண்டு போட்டுட்டேன். ( நம்ம நேரம் 8.30 )

  என்னைய வாழ்த்துங்க ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலே உங்களுக்கு அட்வான்ஸ் வாழத்துக்கள் ஜி :)

   Delete
 4. எல்லா ஜோக்ஸும் செம... கடைசி ஜோக் - கிச்சு கிச்சு :)

  ReplyDelete
  Replies
  1. டெலிவரி என்றாலே மகிழ்ச்சிதானே ஜி ?நேற்று தமிழ்மணம் கோமா ஸ்டேஜில் இருந்தது ,இப்போ பாருங்கோ ...உடனுக்குடன் முகப்பில் வருகிறது ,நொடியில் வாக்கும் விழுகிறது ,கமெண்ட்டும் உடனே டெலிவரி ஆகிறதே :)

   Delete
  2. தமிழ்மணத்துக்கு நன்றி சொல்வோம்.

   Delete
  3. இன்று போல் என்றும் வாழ்க தமிழ்மணம் :)

   Delete
 5. "சமைத்துச் சாப்பிடுவோம்
  மற்றும் பெண்கள் போஸ்ட் ஆபீஸ்"
  இரசித்துச் சிரித்தோம்
  வேலூர் விஷயமும் சூப்பர்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சொல்லப் போனால் ,சாப்பிடும் விதமாய் சமைப்போம் என்றுதான் இருக்கணும் :)
   மகளிர் மட்டும் போஸ்ட் ஆபீஸ் ,சாத்தியமில்லைதானே:)

   Delete
 6. //பார்க்க மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)//
  அதானே.. பழகவும் அயகா இருக்கோணுமாக்கும்:).

  //''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''///
  ஹையோ ஹையோ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது பகவான் ஜீ:).. சிசேரியன் செக்‌ஷனில் போட்டு.. முன்னே பின்னே ஆக்கிடலாம் டெலிவரியை:) ஹா ஹா ஹா:).. என்னமாதிரி எல்லாம் ஓசிக்கிறீங்க கர்ர்ர்ர்:).

  ReplyDelete
  Replies
  1. டெலிவரி, தபால் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துது..

   எங்கட அப்பாவின் ஒபிஸில், அப்பாவுக்கு கீழே வேர்க் பண்ணிய ஒருவர், ஊருக்குப் போயிருந்தாராம்.. அப்போ அவரது மனைவி பிரெக்னண்ட் ஆக இருந்திருக்கிறா 2 வது குழந்தைக்கு.. இவர் போன சமயம் டெலிவரி ஆகியிருக்கு...[ரெண்டாவது பிரசவம்] உடனே அப்பாவுக்கு தகவலாக தந்தி/ தபால் அனுப்பியிருந்தாராம்ம் லீவு தேவை என்பதற்காக இப்படி...
   My second wife's delivery...... haa haa haa:)

   Delete
  2. ///
   11/11 //

   நோஓஓஓஓஓஓ பகவான் ஜீஈஈஈஈஈஈஈஈ கர்ர்ர்ர்:) ஸ்பீட்டைக் குறைங்கோ சொல்லிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:) என்னை முந்திடப்போறாரே கர்ர்ர்:)

   Delete
  3. #சிசேரியன் செக்‌ஷனில் போட்டு.. முன்னே பின்னே ஆக்கிடலாம் டெலிவரியை:)#
   டெலிவரியை முன்பின் ஆக்கலாம் ,பேறுகால விடுமுறையை தள்ளிபோட முடியாதே :)

   Delete
  4. #My second wife's delivery....#
   அட சண்டாளா ,முதல் கல்யாணத்துக்கு அழைக்கவே இல்லை ,அடுத்த கல்யாணத்தைச் சொல்லவே இல்லையேன்னு வருத்தப் பட்டிருக்கணுமே :)

   Delete
  5. #ஸ்பீட்டைக் குறைங்கோ சொல்லிட்டேன்ன்ன் #
   ஆக்ஸிலேட்டர் என் காலில் இல்லையே ,உங்க கையிலேதானே இருக்கூஊஊ :)

   Delete
  6. பகவான் ஜீ.. இதை இங்கின வச்சிட்டுப் போறேன்ன்:) இண்டைக்கு வாணாம்ம்... 28 ம் திகதி இங்கின ஊஸ் பண்ணப்போறேன்ன்:) கொஞ்சம் பத்திரமாப் பார்த்துக்கொள்ளுங்கோ:)..

   http://68.media.tumblr.com/ae011c1daacec7ecec92832279ac9c07/tumblr_oab6n1QCmm1s6dcs3o1_500.jpg

   Delete
  7. உங்க கையிலே இதுவும் இருக்கா ,எனக்கு பயம்மா இருக்கே :)

   Delete
  8. ஹா ஹா ஹா சே..சே..சே.. நீங்க பயந்திடாதீங்கோ.. இது உங்களுக்கில்லே:) 27ம் திகதி இங்கின வோட் போட வருவோருக்கு:) ஹா ஹா ஹா ஹையோ ஏன் பகவான் ஜீ கண்ணாடியைக் கழட்டிட்டு முறைக்கிறார்:)... உங்களுக்கு தடிமன் காச்சல்கூட வந்துடக்குடா 27,28 ல என திருப்பதியில் வலது பக்கம் இருக்கும் வைரவருக்கு வடைமாலை போடுவதா வேண்டியிருக்கிறேன்:).

   Delete
 7. அப்படீனாக்கா... கால்அடி உள்ள குண்டு பல்பு எவ்வளவு ?

  ReplyDelete
  Replies
  1. குண்டு டைப்,நீள சைஸ் விலையில் வராதே:)

   Delete
 8. அடிக்கணக்குப் பார்த்து பல்ப் வானுபவரை அடித்தா திருத்த முடியும்!

  வெயிலூரின் பெருமை வெயிலில் மட்டுமே என்று நினைத்திருந்தேனே..

  பொறுத்தமில்லையே சரியில்லையே... பொருத்தமில்லைதான் சரி!

  இப்போல்லாம் தபால் யாருக்குங்க வருது?

  ReplyDelete
  Replies
  1. அதையும் டேப்'பினால் அளந்து வாங்கினாராம் :)

   வெயிலின் கொடுமை படிப்பையும் சுணங்க வைக்குதோ :)

   இதை நீங்க சுட்டியதில் எனக்கு ஏதும் வருத்தமில்லை ,திருத்திட்டேன் :)

   வரவில்லை என்றாலும் தபால் ஆபீஸ் இருக்கத்தானே செய்யுது :)

   Delete
 9. Replies
  1. நாலடி நாற்பது என்றால் ,இரண்டடி இருபது ரூபாய் தானே ஜி :)

   Delete
 10. முரண்டு பிடிக்காதிங்க... இரண்டடி வாங்கினாத்தான் பத்து ரூபாய் கொடுப்பீங்க போல இருக்கு...!

  வேலூர்ல மயிலும் ஜாஸ்தியோ... ? வேலும் மயிலும் துணை...!

  எந்த உடையும் பொருத்தமில்லையோ...?!

  செய்ததைப் பார்த்திக்கிட்டுத்தானே இருக்கேன்...!

  எப்படியும் டெலிவரி நிக்கப் போறது இல்லை...!

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதை செயல்லே காட்ட வச்சிறாதீங்க:)

   பக்கத்தில்தானே திருத்தணி மயிலோன் இருக்கார் :)

   வருத்தமில்லா வாலிபர்கள் அப்படி நினைக்கக் கூடும் :)

   டெலிவரி ஆகாமல் உள்ளே இருப்பது வெளியே தெரியாது :)

   பார்த்தால் பசி தீராதே :)

   உள்ளே இருப்பது தெரியணும்னா de

   Delete
 11. Replies
  1. சகோ .ராஜிக்கு உங்க தளத்தில் நான் கேட்டிருக்கும் கேள்வியை நீங்களும் டெலிவரி பண்ணிடுங்க சார் :)

   Delete
  2. ///தம ஓட்டுப்பட்டை தெரியுது. ஓட்டு போட்டாச்சு#
   என் தளத்தின் வோட்டுப் பட்டைமட்டும் , உங்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது :)///

   ஹா ஹா ஹா ஓடிப்போய்ப் படிச்சேன்ன்.. மீயும் மீயும் இதே கேள்வியைக் கேய்க்கேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா

   Delete
 12. வேலூரை இப்படி அசிங்கப்படுத்த வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ,உங்கட ஊர் அதுதானா ?

   சரி சரி ,கோவிச்சுக்காம http://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_25.html தளத்துக்குப் போய் ,உடனே என் கவலையைத் தீர்த்து வைங்க :)

   Delete
 13. Replies
  1. இடுப்பை மறைக்காத சேலையை//

   அது சேலையின் குற்றம் அல்லவே!!

   Delete
  2. சேலை உடுத்தும் பெண்ணின் குற்றமும் இல்லை :)
   அசட்டையாக இருந்தாலும் கூட , அங்கங்கள் தெரியும் பிரச்சினை இல்லாததால்தான் சுடிதாருக்கு பெண்கள் எல்லோரும் மாறுகிறார்கள் என்பதே உண்மை :)

   Delete
 14. Replies
  1. 'செய்து சாப்பிடுவோம்'நிகழ்ச்சி காலத்தின் தேவைதானே ஜி :)

   Delete
 15. பதிவு ரசித்தேன் சகோதரா
  தமிழ் மணம் 13
  என் பதிவு இங்கு தான் https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மாதவி பொன் மயிலாளை நானும் ரசித்தேன் :)

   Delete
 16. வேலூர்லே வெயிலும் ஜாஸ்தி ,பெயிலும் ஜாஸ்தியா?
  அதிர்ச்சியான செய்தி ஆச்சே!

  ReplyDelete
  Replies
  1. பெயிலும் கூட கூடும் குறையும் ,வெயில் குறையவே குறையாது போலிருக்கே :)

   Delete
 17. அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. பாரம்பரிய உடையும் நன்றுதானே :)

   Delete
 18. Replies
  1. ஐந்தில் எது சரிதான் :)

   Delete
 19. டெலிவரியை ரசித்தோம்....அனைத்தும் தான்!!!

  ReplyDelete
  Replies
  1. நாட்டிலே ஒரு டெலிவரி குறைந்து போச்சு ,இன்னொன்னு குறையவே இல்லை ,சரிதானா ஜி :)

   Delete