28 May 2017

காதலன் ,காதலி என்றாலும் தப்பு தப்புதான் :)

படித்ததில்  இடித்தது :)
              ''லக்னோவில் இருக்கும் உன் தம்பி ,பெட்ரோல் பல்க்  பக்கத்தில்  ஹெல்மெட் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறானா ,ஏன் ?''
              ''  அங்கே ஹெல்மெட் போட்டுட்டு வரலைன்னா பெட்ரோல் போட மாட்டாங்களாமே !''
இடித்த செய்தி ....ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

பெண்கள் ,சிறகுகள் இல்லா தேவதைகளா :)
                 ''சிறகுகள் இல்லாமலே, பெண்களை தேவதைகளாக்கும்
வல்லமை புடவைகளுக்கு உண்டுன்னு  சொன்னவருக்கு...  கல்யாணம் ஆகியிருக்காதுன்னு  எப்படி சொல்றீங்க ?''

                ''இப்படி சேலைக் கட்டிட்டு பெண்டாட்டி வெளியே வந்தா அப்படிச் சொல்லி யிருக்க மாட்டாரே ?''
நன்றி... கவிதை சொன்ன முகமறியா 'வாட்ஸ் அப் ' நண்பருக்கு !

மறக்காம 'சிம்'மையும்  புதைத்து இருப்பார்களா :)              
              ''செத்ததுக்கு பிறகு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த உன் புருஷன் ஆவி ,வராம இருக்க என்னடி செய்தே ?''
               ''அவரைப் புதைத்த இடத்திலேயே அவரோட செல்போனையும் புதைச்சுட்டேன்  !''

புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு  போதுமா  :)
         ''கடையை பூட்டப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட்  பண்ணுங்க !''
           ''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் , திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''

பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா :)
          ''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
          ''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''

காதலன் ,காதலி என்றாலும்  தப்பு தப்புதான்  :)
இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461486செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

37 comments:

 1. இலவச ஆட்டோவில் பிறப்பதும் தவறா ?

  ReplyDelete
  Replies
  1. தவறே இல்லை ,இங்கேதான் பிறப்பேன் என்று வேண்டிக் கொண்டா பிறக்க முடியும் :)

   Delete
 2. இதென்ன இது இண்டைக்கே ஆரும் வோட் போடல்லியோ?:) நான் ஞாயிற்றுக்கிழமை போஸ்ட்டுக்குத்தானே போட விடமாட்டேன் என்றேன்ன்:) மீக்கு ஒரே கொயப்பமாக் கிடக்கே... பகவான் ஜீ யும் இப்போ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
  Replies
  1. இன்று நான் முதல் வோட் போட்டிட்டேன்ன்ன்ன்.. :)..

   Delete
  2. Naan 2nd 😄😃😄😃

   Delete
  3. நேக்கு வெளியே பயமாக்கிடக்கூஊஊஊ என் கூக்குரலால்தான் பகவான் ஜீ எல்லோரையும் வோட் போட விடாமல் கொன்றோல் பண்ணி வச்சிருக்கிறார் என:) ஆனா உள்ளே பயங்கர மகிச்சியாக இருக்கு... என் வேண்டுகோளுக்கு எனக்காக இப்படி எல்லாம் ஒத்துழைச்சு சப்போர் பண்ணுகிறாரே என கண்கள் கலங்குது..

   ரமணி அண்ணனின் கவிதையின் கடசி வரிகள் உண்மையாகுது இங்கே...

   ///ஆயினும்
   போட்டிப் பொறாமையின்றி
   ஒருவர் நலத்தில்
   ஒருவர் அக்கறை கொள்வதிலும்
   பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்///

   Delete
  4. #மீக்கு ஒரே கொயப்பமாக் கிடக்கே... #
   எனக்கும் கொயப்பம்தான் ,நான் விட்டுக் கொடுத்தாலும், மற்றவர் உங்க தலையில் மகுடம் வைக்க விடமாட்டார் போலிருக்கே :)

   Delete
  5. #இன்று நான் முதல் வோட் போட்டிட்டேன்ன்ன்ன்.. :)#
   இதைகூட நீங்கள் தாமதப் படுத்தி இருக்கலாம் :)

   Delete
  6. AngelinSun May 28, 01:03:00 am
   Naan 2nd 😄😃😄😃
   நீங்களும் கூட உங்க தோழியின் மகுடத்துக்காக,போட்டியாளருக்கு வோட் போடாமல் இருந்திருக்கலாம் !
   உங்களிடம் பூசார் எதுவும் சொல்லவில்லையோ :)

   Delete
  7. பகவான் ஜீ நான் வந்திட்டேன்ன்ன்ன்ன் ஸ்லோ மோசனில் ஸ்பீட்டாப் போகிறமாதிரி ஒரு ஃபீலிங் வருதூஊஊஊஊஉ.. அதுதான் எதுக்கும் கையில தூக்கிட்டேன்ன்:)

   இல்ல உங்களுக்கு டக்குப் பக்கென வோட்ஸ் வரும் நேற்று வன் அவராகியும் எதுவும் வராததால் ஒரு மாதிரிப் போயிட்டுது, அந்தரமா இருந்துது, அதனால நான் தான் என் ஆயுதத்தைக் காட்டி அஞ்சுவையும் போட வச்சேன்ன்ன்...

   ஆனா இண்டைக்கு நோஓஓஓஓஓஒ விடமாட்டேன்ன்ன்ன்ன்... வோட் பொக்ஸ் க்கு நேரே பிடிப்பேன்ன் டொல்லிட்டேன்ன்ன்:).. ஹையோ எனக்கு இப்பூடி வேர்க்குதே:)..

   http://media.moddb.com/images/groups/1/3/2392/glamorous-funny-cat-with-guns.jpg

   Delete
  8. ஆயுதத்தை இப்போ கீழே போடலாமே:)

   Delete
 3. ஹாய் ஜீ, ஹல்லோ ஜீ

  இன்னிக்கு இங்கு செம வெய்யில்... தாங்கவே முடியல.. பார்க்குல படுத்து தூங்கிட்டேன் :) அதான் லேட்டு :)

  ReplyDelete
  Replies
  1. 'பார்க் 'கிலா ,தூக்கம் வந்ததா ?அங்கேயும் அக்னி நட்சத்திர வெயில் வாட்டுதா :)

   Delete
 4. வழக்கம் போல அசத்திட்டீங்க ஜீ... புடவை ஜோக் டாப்

  ReplyDelete
  Replies
  1. காதைப் பக்கத்துலே கொண்டாங்க ,சேலை உடுத்தினால் தேவதை தான் பெண்ணும் ...சும்மா காமெடி பண்ணேன் :)

   Delete
 5. அப்புறம் தத்துவம் - அட ஆமால்ல... :)

  ReplyDelete
  Replies
  1. பிரபலமான கம்பெனி பூட்டுக்கு ஒரு டூப்பு சாவி செய்து தரச் சொன்னேன் ,ஒரிஜினல் சாவி செய்ய ஆகும் நேரத்தை விட குறைந்த நொடியிலேயே ரெடி செய்து கொடுத்து விட்டார் ...அசந்து போனேன் ,ஒரிஜினல்கள் ஜாக்கிரதையா இருக்கணும் :)

   Delete
 6. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  தம இரண்டு மூன்று நாட்களாக டமால் டுமீல்னு விழுந்துடுது. கண்ணு படப்போகுது. சுத்திப் போடோணும்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம் எனக்கும் கை வைப்பதற்குள் டமால்னு விழுந்துருது...

   கீதா

   Delete
 7. Replies
  1. தேவதைகளையும்தானே :)

   Delete
 8. செல்போன் புதைத்தல், சாரி தேடல்..ஓசி பிரசவம் அனைத்தும் ரசித்தோம்... ஜி...

  ReplyDelete
  Replies
  1. செல்லுக்காக ஆவி அலைபாயுமா ஜி :)

   Delete
  2. அலைந்தாலும் அலையலாம்...ஜி...

   Delete
  3. செல்லுக்காக கொலை கூட நடக்குதே ஜி :)

   Delete
 9. ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்பது பெட்ரோல் பங்க் முதலாளியின் கைவரிசையா
  எப்படிப் புடவை கட்டினாலும் புடவைகள் பெண்களை தேவதைகளாகக் காண்பிக்கும்
  நல்ல மனைவி
  நல்ல சாவிகளும் பூட்டைத் திறக்குமே

  ReplyDelete
  Replies
  1. அரசு அறிவிப்பு அய்யா அது ,இடித்த செய்தியை க்ளிக் செய்து படிக்க வில்லையா :)
   அப்படிப் போடு :)
   புருஷன் குணம் அறிந்த மனைவியாச்சே :)
   நல்ல சாவி திறப்பதில் என்ன அதிசயம் :)

   Delete
 10. ஆட்டோ ஜோக் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. 108ல் பிறந்தவன் எப்படியோ :)

   Delete
 11. ரசித்தேன். அனைத்தும்

  ReplyDelete
  Replies
  1. கள்ளச் சாவிகளை ரசிக்க முடியாதே ஜி :)

   Delete
 12. ரசிக்கும்படி இருந்தன...
  நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. தேவதைகளாக்கும்வல்லமை புடவைகளுக்கு உண்டா ஜி :)

   Delete
 13. கள்ளச்சாவிகள் - கொஞ்சம்
  வெள்ளம் போல உலாவ
  வீட்டில குழப்பம்...

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரிலே வெள்ளம் என்று கேள்விபட்டேனே :)

   Delete
 14. பூட்டு இல்லாத இல்லறத்தை கெடுப்பது.எந்தச்சாவி..????

  ReplyDelete
  Replies
  1. பூட்டே இல்லைன்னா சாவி எதுக்கு :)

   Delete