3 May 2017

நடிகை என்றாலும் கோபம் வரத்தானே செய்யும் :)

அவ்வையார்  இன்று கேட்டிருந்தால் :)
                 ''சுட்ட பழம்  வேணும்னு  கேட்டு வாங்கிட்டு ,இப்படி ஊதிஊதிச் சாப்பிடலாமா பாட்டி ?''
                ''சுட்ட பழமோ,சுடாத பழமோ ஒட்டியிருக்கிற மண்ணைச்  சேர்த்து சாப்பிட முடியாதே ...எடக்கு மடக்கா கேட்கிறதை விட்டுட்டு , கழுவுறதுக்கு  தண்ணீரைக் கொண்டு வா பேராண்டி !'' 

நடிகை என்றாலும் கோபம் வரத்தானே செய்யும் :)
             ''ஒப்பந்தத்தைப் படிக்காமலே நடிகை கிழித்து எறிந்து விட்டாராமே ,ஏன் ?''
           ''உடன்படிக்கை என்பதற்கு பதில் உடன்படுக்கை  என்று தலைப்பிலேயே  எழுதி  இருந்ததாம் ! ''
சின்ன வீடு  'தலையாரி வீடா ' போச்சே :)
            ''போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துக்கிட்டிருந்த தலைவரை 'சின்ன 'வீட்டிலே வைச்சுப்  பிடிச்சிட்டாங்களாமே !''
            ''பாவம் ,அவரால் 'தொடர்பு 'எல்லைக்கு அப்பால் போக முடியலை போலிருக்கு !''

மாமனாரின் அதிரடி முடிவு :)
          ''உங்க மாப்பிள்ளையை  தலை தீபாவளிக்கு அழைக்கப் போறதில்லையா ,ஏன் ?''
           ''என் பொண்ணைக் கொடுமை பண்ற அந்த 'முண்டத்'துக்கு எதுக்கு 'தலை ' தீபாவளி ?''

கணவனுக்கு நரகமே பழகிப் போச்சு :)
              ''என்னங்க ,நான் செத்தா ,சொர்க்கத்திற்கு போகணும்னு வேண்டிக்கிறீங்களே ,என் மேலே அவ்வளவு பிரியமா ?''
              ''அதெல்லாம் ஒண்ணுமில்லே,நரகத்திலேயாவது நான் நிம்மதியா இருக்கலாம்னுதான் !''

 சாதிக்கத் தூண்டும் நெருடல் :)
      நாட்காட்டித்தாளை  தினசரி  கிழிக்கும்போதும் ஒரு நெருடல் ...
       நேற்றும் என்ன செய்து கிழித்தோமென்று ?

38 comments:

 1. நடிகைக்கு உடன்படிக்கை ஒரு பிரச்சனையா ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. துன்பம் வரும்போது சிரிங்க:) எனப் பெரியவங்க சொல்லியிருக்கினம்.. அதுதான் சிரிச்சேன்ன்ன்:)

   Delete
  2. டியா ,டுவா என்பதுதான் பிரச்சினை :)

   Delete
  3. ஏன் சிரிக்க மாட்டீங்க ?வேறு யார் தலையிலும் 'தம'ன்னா மகுடம் இவ்வளவு நாள் இருந்ததில்லையே :)

   Delete
  4. அங்கு மகுடம் சூட்டிட்டேன் ஆனா இங்கு சூட்ட முடியல்லியே ஹா ஹா ஹா:) கில்லர்ஜி மின்னாமல் முழங்காமல் வந்திட்டுப் போயிடுறார்:)

   Delete
  5. ஆவ்வ்வ் பெயர் கரெக்ட்டா எழுதினேனா என டபிள் செக் பண்ண வந்தேன்:) இல்லை எனில் தெய்வக் குற்றம் ஆகிடுமாமே... கர்ர்ர்ர்ர்ர் :)

   Delete
 2. சுட்டபழம், நரகம் சொர்க்கம், கலண்டர் கிழித்தல்... அனைத்தும் சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. மண் ஒட்டவில்லை என்றாலும் சுட்ட பழத்தை ஊதுவதில் என்ன தப்பிருக்குன்னு உங்களுக்குப் புரியுதா :)

   Delete
  2. சரியாகப் புரியவில்லை ஆனாலும் பிடிச்சிருக்கு...

   Delete
  3. அவ்வை கேட்டது சுட்ட பழம் சுடாத பழத்தைக் கேட்டு ,அதை ஊதியிருந்தால் தானே தப்பு ?ஹிஹி ,வாழைப்பழக் கதையா இருக்கா :)

   Delete
 3. சூப்பர் ஜோக்குகள்!

  ReplyDelete
  Replies
  1. சின்ன வீடு 'தலையாரி வீடா ' போச்சே...அர்த்தம் புரிந்ததா :)

   Delete
 4. Replies
  1. கடைசியில் தத்துவம் வருவதுதானே முறை :)

   Delete
 5. நடிகையின் கோபத்தில் நியாயம் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இதுக்கெல்லாமா ஒப்பந்தம் என்பதால் வந்த கோபமா இருக்குமோ :)

   Delete
 6. Replies
  1. சுட்ட பழம்,சுடாத பழக்கதையில் லாஜிக் இடிக்கிறது ரசிக்க முடியுதா :)

   Delete
 7. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. சாதிக்கத் தூண்டும் நெருடலும் நகைப் பணியில் வருமா ,தோழரே :)

   Delete
 8. Replies
  1. 'தம'ன்னா மகுடம் சூட, ஊக்க்குவித்தமைக்கு நன்றி :)

   Delete
 9. மண் சோறு சாப்பிட்டதில்லையா...?!

  நீங்கதான் சீக்கிரம் முன்னுக்க வரணுமுன்னு சொன்னீங்க...!

  தொலை தொடர்பு... துரையாப் பாத்துச் சேர்க்க வேண்டியதுதானே...!

  நரகா சுரனை இல்லாதவனை அழித்து தீபாவளி கொண்டாடப் போறீங்களா...?!

  சொர்க்கத்தில இருக்கிறவங்க நரகத்தப் பார்க்க வேண்டுமுல்ல...!

  நேற்றும் இதைத்தானே செய்து கிழித்தோம்...!

  த.ம. 6  ReplyDelete
  Replies
  1. வேண்டுதல் என்றால் மண்ணைக் கூட சாப்பிடுவார்களே :)

   வயிறை முன்னுக்கு கொண்டுவந்து விடுவீர்கள் போலிருக்கே :)

   எந்த துரையா இருந்தாலும் பெண்டாட்டிக்கு பதில் சொல்லித் தானே ஆகணும் :)

   இருக்கிற காசை கரியாக்க காரணம் வேணுமில்லே :)

   இரண்டையும் பார்த்தால்தானே வித்தியாசம் புரியும் :)

   தினசரி இதையாவது ஒழுங்கா செய்றீங்களே ,உங்களைப் பாராட்டணும்:)

   Delete
 10. துட்டு கூடுதலாக இருந்தால் கோபம் காணாமல் போயிருக்குமே.....

  ReplyDelete
  Replies
  1. பசு என்பதற்கும் மாடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கில்லே :)

   Delete
 11. முருகன் ஔவையின் தமிழ் செருக்கை குறிவைதான் என்பார்கள் பாவம் அவ்வை புரியாமல் கலங்கினாள்
  தலைப்பையாவது படித்தாரே
  சின்ன வீடுதொடர்பு எல்லைக்குள்ளா
  அன்றொரு நாளாவது தலைக்குக் குளிக்க விடாமல் செய்து விட்டாரே மாமனார்
  இவருக்கு இதுவே சொர்க்கம்
  அதானே என்ன செய்து கிழிக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. குறி வைக்கட்டும் ,கேள்வி நியாயமா கேட்டிருக்கணுமே,பழத்தில் எது சுட்ட பழம் .சுடாத பழம் :)
   எழுத்துப் பிழை என்று சொல்லமுடியுமா :)
   கழுதைத் தப்பினா குட்டிச்சுவர் தானே :)
   முண்டத்துக்கு அது ஒண்ணுதான் குறைச்சல் :)
   நினைப்புதான் பிழைப்பைக் கேடுக்குமாமே:)
   ஆனாலும் நேரம் போதலேன்னு அலட்டிக்கிறோம் :)

   Delete
 12. சொர்க்கம், நரகம் அருமைண்ணே

  ReplyDelete
  Replies
  1. ரெண்டுமே நம்ம கையிலேதானே இருக்கு :)

   Delete
 13. அனைத்தும் ரசித்தேன் .குறிப்பாக தொடர்பு எல்லைக்கு அப்பால் .....

  ReplyDelete
  Replies
  1. இந்த எல்லையைத் தாண்டிஇருந்தால் அவர் வாழ்க்கை நன்றாய் இருந்திருக்குமோ :)

   Delete
 14. அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அழகான ராட்சசியைப் பார்க்க பயமாயிருக்கா :)

   Delete
 15. Replies
  1. நெருடலும் ரசிக்க வைத்ததா அய்யா :)

   Delete
 16. சொர்கமும், நரகமும். கஹஹ.. அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதியா :)

   Delete