9 May 2017

மனைவிக்கு ஐஸ் வைக்கிறதா நினைச்சி மாட்டிக்காதீங்க :)

             ''TVல் காட்டுற பட்டுச்சேலை உனக்கு பாந்தமாயிருக்கும்னு   மனைவிகிட்டே ஒரு பேச்சுக்கு சொன்னது ,தப்பா போச்சா ...ஏண்டா ?''
             ''நீங்க இப்படி சொல்வீங்கன்னுதான் நேற்றே ஆன் லைன்லே ஆர்டர் பண்ணிட்டேன்னு சொல்றாளே  !''
கலப்படத்தை 'பால்மானி' கண்டுபிடிச்சுடுமே :)         
            ''பால் வியாபாரியான உங்களுக்கு ,அரசு என்ன உதவி செய்யணும் ?''
             ''பால் மானியம் எல்லாம் ஒண்ணும்  தர வேண்டாம் ,நாங்க விற்கிறப் பாலை  சுகாதார அலுவலர் பால்மானியால் செக் செய்யாமல் இருந்தாலே  போதும் !''

வயதானால் இப்படியெல்லாம் ஆகுமோ :)
           ''என்னடா சொல்றே ,உங்க அப்பாவுக்கு கண்ணும் மூக்கும் அவுட்டா ?''
            ''ஆமா , கொசு விரட்டிக் கிரீமினால் பல் தேய்ச்சிட்டு ,நுரையே வரலேங்கிறாரே !''

மனைவியின்  தூக்கத்தை இப்படியா  கெடுப்பது  :)
         ''என்னங்க ,இந்த ராத்திரி நேரத்திலே திடீர்னு பீரோ  கண்ணாடி நொறுங்கி விழுதே...அய்யய்யோ...அய்யய்யோ ....!''
        ''சும்மா கத்தாதே ,நாய் துரத்திகிட்டு வர்ற மாதிரி கனவு வந்தது ,நான்தான் கையிலே கிடைச்சதை தூக்கி எறிஞ்சேன் !''

உள்ளே போறது ஒரு மடங்கு  ,வெளியே வர்றது பத்து மடங்கா  ?
            ''தாகம் அடங்கலைன்னு சொன்னதுக்கா ,அவரை ICU ல் அட்மிட் பண்ணிட்டாங்க ?''
           ''அட நீங்க வேற !நூறு மில்லி தண்ணி குடிச்சா ,அடுத்த  நொடியே ஒரு லிட்டர்  வெளியே வந்துடுதாமே !''

இல்லாததை விளக்க ஆயிரம் பாடல் :)
நம்ம ஊர் கட்சிகளின் 
கொள்கை விளக்கப் பாடல்களைக் கேட்கையில் 
சந்தேகம் பிறக்கிறது ...
இவர்கள் கொள்கை என்ன நானூறு பக்கங்களில் ,
விளக்க முடியாத அளவிற்கு ....
கொடுங்தமிழிலா இருக்கிறது ?

' த ம ' ன்னா வாக்களிப்பது  ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம்  நிறைவேற்ற  இதோ லிங்க்>>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459098

57 comments:

 1. மீஈஈஈஈ 1ஸ்ட்டா லாண்டட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)

  ReplyDelete
  Replies
  1. https://www.youtube.com/watch?v=prpNafU1804&feature=share

   Delete
  2. மீஈஈஈஈ 1ஸ்ட்டுதான்,ஆனா இது டெம்பிளேட் கருத்து மாதிரியிருக்கே :)

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுவா வேணுமெண்டாலும் இருந்திட்டுப் போகட்டும்:) இப்போ அதுவா முக்கியம்.. கில்லர் ஜி யை முந்துவதற்காக.. ரைப் பண்ணி கொப்பி பேஸ்ட் பண்ண ரெடியா இருந்து போட்டுட்டேன்ன்ன்ன் ஹா ஹா ஹா எங்கிட்டயேவா:) சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்கோ இல்லையெனில் என் சிதம்பர ரகசியத்தை எல்லாரும் ஃபலோ பண்ண வெளிக்கிடப்போகினம்... ஏன் வோட் லிங் இணைக்கல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மகுடம் சூடாவிட்டாலும் கொள்கையை மறக்கக்கூடாது:).. சுத்திக்கொண்டே இருக்கு.. தமனாவுக்கு தலை:)

   Delete
  4. குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ,அங்கே குவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம்என்று பூஜார் ஆடிய பாடலைக் கேட்டேன் ....எனக்கொரு சந்தேகம் , வண்டாட்டம் பெண்களைப் பார்த்து குமரன் இப்படி ஜொள்ளு விடலாமா :)

   Delete
  5. அப்பாடா வோட் போட்டிட்டேன்ன்ன்... கவனிக்கவும் முதலாம் வோட் என்னோடது:).. ட்றுத் இன்னும் போடவே இல்லை:).. கில்லர் ஜீ நித்திரை:).

   முதலாவது ஜோக்கும்.. மூன்றாவது கனவு கண்டதுவும் பகவான் ஜீ இன் வீட்டு ஸ்டோரி தானே?:) சூப்பர்.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

   Delete
  6. ///எனக்கொரு சந்தேகம் , வண்டாட்டம் பெண்களைப் பார்த்து குமரன் இப்படி ஜொள்ளு விடலாமா :)///
   ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ கேட்டிடப்போகுது குன்றத்து முருகனுக்கு:).. நான் இந்த வம்புக்கே வரல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஉ சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:).

   Delete
  7. பகவான் ஜீ மேடைக்கு வரவும்... வோட் போட்டீங்க,,, மொய் எங்கேஏஏஏஏஏஏஏஏ????:) கர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  8. மேடைக்கு வந்தேன் ,பொன்னாடை ஏதுமில்லையா :)

   Delete
  9. #மூன்றாவது கனவு கண்டதுவும் பகவான் ஜீ இன் வீட்டு ஸ்டோரி தானே?:) #
   என் படுக்கை அறையில் பீரோ இல்லை ,இருந்தாலும் கண்ணாடியில்லை:)

   Delete
  10. சே சே உங்களுக்கு எதுக்கு பொன்னாடை... உங்களின் தகுதி தெரியாமல் பேசிட்டு திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்க எல்லாம் முடியாது என்னால.. உங்களிடம் வைர ஆடையே இருக்குமே:) பிறகெதுக்குப் போன்ன்ன்ன் ஆடை:).

   ஒருவேளை அது ஆத்துமாமியின் கண்.. நாடியாக இருக்குமோ.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

   Delete
  11. இன்று தமனா வுக்கு என்ன ஆச்சு? நான் போஸ்ட் போட்ட நேரமாக்கும் அப்டேட் ஆகுதே இல்லயே... சகோ டிடி சொன்னதுபோல செத்துப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)

   Delete
  12. மகுடம் கைக்கு எட்டியும் தலைக்கு ஏற மாட்டேங்குதே :)

   Delete
  13. #உங்களிடம் வைர ஆடையே இருக்குமே:)#
   நம்ம மோடி கொஞ்ச நாள் முன்னாடி ,பத்து லட்ச ரூபாய் வொர்த் உடையில் போஸ் கொடுத்தாரே ,அது யாருதுன்னு நினைக்கிறீங்க :)

   Delete

 2. மனைவியின் தூக்கத்தை இப்படியா கெடுப்பது :)///

  செம ஜோக் குட்

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் ட்ருட் ,நீங்க வந்தது நல்லதா போச்சு ! முந்தினநாள் என் பதிவான 'ருசி கண்ட கணவன் சொன்ன உண்மை'யில் உங்களுக்கு ஒரு கேள்வியிருக்கே ,பதில் சொல்வீங்களா :)

   Delete
  2. என்னது எனக்கு ஒரு கேள்வியா அப்படியானல் இப்போவே பதில் அளிக்கிறேன் ஆனால் அதற்கு முன்னால் ஒரு கேள்வி நான் ஃபுல் சீலிவ் சட்டை அணிந்து இருக்கிறேன் நீட் எக்ஸாமிற்கு போகிறவர்களுக்கு சட்டையை கிழிக்கிற மாதிரி என் சட்டையை கிழிக்க மாட்டீங்கதானே

   Delete
  3. எக்ஸாம் பெயர் 'நீட்' டாம்,போனால் சட்டையைக் கிழிப்பார்களாம் கொடுமை :)

   இங்கே வர்றவங்க சட்டையை நான் கிழிப்பதில்லை ,படித்து விட்டு அவர்களே கிழித்துக் கொள்வதாக கீழ்பாக்கத்தில் இருந்து நம்பகமான தகவல் :)

   Delete
 3. அதிரா மாதிரி அழாமல் இருந்ததால் உங்கல் பதிவை தமிழ் மணத்தில் இணைத்து வோட்டும் போட்டு இருக்கிறேன் ஆனால் இன்னும் தமிழ்மனம் சுற்றி கொண்டே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓ நானும் இணைச்சனே.. வோட் போடும்போது 0 எனக் காட்டிச்சுதே கர்ர்ர்ர்ர்:).. பகவான் ஜீ பக்கத்தில் எப்பவும் இப்பூடி என்னமோ நடக்குது...:)

   Delete
  2. ஹாலோ பகவான் ஜிக்கு போடுற வோட்ட்டெல்லாம் அதிராவின் தளத்தில் சென்று சேர்கிரதா என்ன? மோடியை போல அதிராவும் ஆகிட்டாங்களா ஹீஹீ

   Delete
  3. இதென்ன புது வம்பாக்கிடக்கூஊஊஊஊ:)

   https://i.ytimg.com/vi/XVO9CS8D4hQ/hqdefault.jpg

   Delete
  4. இதுக்கு தான் ஒப்புகை சீட்டு வேணுங்கிறது ,அதிலும் பிராடுன்னா என்ன பண்றது :)

   Delete

 4. என் வோட்டு சேர்க்கப்பட்டு இருக்கிரது என்று தகவல் வருகிறது ஆனால் உங்கள் தளத்தில் இன்னும் ஒண்ரு என்ரு இன்னும் வரலையே

  ReplyDelete
  Replies
  1. அது இங்கு மட்டும் இப்படித்தான் ட்றுத்.. வோட் போட்டு 5,10 நிமிடங்களின் பின்னர்தான் இங்கு காட்டும்.. அதனாலேயே எல்லோருக்குள்ளும் சண்டை வருகிறதே கர்:).

   Delete
  2. மறுபடியும் சாலமன் கதையா ?ஒரு வோட் ,ஆனால் இருவர் அதை தங்கள் வோட் என்கிறார்கள் ,அசல் யாரோ ,நகல் யாரோ :)

   Delete
  3. என் வாக்கு 'உண்மையான' வாக்கு அதனால் முதல் வாக்கு என்னுடையதுதான் என்னுடையதுதான்

   Delete
  4. ஒப்புகைச் சீட்டு ஜெராக்ஸ் காட்டுங்க ,அப்போதான் நம்புக் கடவன் :)

   Delete
  5. இந்த வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்கப் படுகிறது ,அதுவரை பூஜாரும் ,ட்ருட் டும் அமைதியைக் கடைப் பிடிக்கோணும் ,இல்லையெண்டால் இருவரும் மனநல செக் அப் செய்து கொள்ள வேண்டிவரலாம் !
   இப்போ நான் கொர்கோர்:)

   Delete
  6. karrrrrrrrrrrr:) புஸ்பா அங்கிள் கடையில வாங்கின புகை வராத கற்பூரத்தின் மேல் அடிச்சுச் சொல்றேன்.. என்னோடதுதான் முதல் கொமெண்ட் + முதல் வோட்ட்.. ச்ச்ச்ச்சோஓஓஓ மகுடம் எனக்கே:)..

   Delete
  7. கற்பூரத்தைக் கொளுத்திக்கிட்டு தானே சத்தியம் ?

   சரி சரி ,நம்புறேன் ,நேற்றைய பதிவான 'தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான்க்கு தேம்ஸ் நதியோர இன்னொரு வோட் வந்து சேரலையே ,அது வந்தாதானே வைகை நதியோர வோட் வரும் :)

   Delete
  8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 5. இத்தனை சுதாரிப்பான மனைவி என்றால்
  கணவன் பாடு கஷ்டம்தான்

  ஜன நாயகக் கடமையாற்ற முயற்சிக்கும்
  போதெல்லாம்த்.ம. சுற்றிக் கொண்டே தான்
  உள்ளது.

  அனைத்துத் துணுக்குகளையும்
  அனுபவித்து இரசித்தேன்

  தொடர வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. பழைய சேலைகளை பாத்திரம் ஆக்குவதில் இன்னும் நல்ல சுதாரிப்பு :)

   நீங்கள் கடமையை செய்தீர்கள் ,பலன் எனக்கு கிடைத்து விட்டது !இந்த பலனின் மறுபலன் உங்களை நிச்சயம் சேரும் :)

   Delete
 6. ரசித்தேன் எல்லா ஜோக்குகளையும்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் த ம எனக்கு பிடித்தது ,எங்கள் பிளாக்கின் இன்றைய தமா தான் எனக்கு பிடிக்கலே:)

   Delete
 7. வணக்கம்
  ஜி

  மனைவிக்கு ஐஸ்வைக்கிற நகைச்சுவையோடு அனைத்தையும் இரசித்தேன் ஜி...த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஐஸ் வச்சவன் தலயிலே பாறாங்கல்லைப் போட்டால் எப்படி :)

   Delete
 8. ஐ.சி.யூ. வில் சேர்ப்பது விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.

  ReplyDelete
  Replies
  1. இப்படி தண்ணி சத்து குறைஞ்சுகிட்டே வந்தால் வேற வழியே இல்லையே :)

   Delete
 9. ஆண் லைன்ல வர்றதே இல்லை...!

  தண்ணி வரிய மட்டும் ஒழுங்கா கட்டுங்க...!

  அது கொசு விரட்டிக் கிரீம் இல்லடா... நல்லாப் பாரு... சேவிங் கிரிம்...!

  நீங்க உள்ளே இருக்கிறப்ப... எந்த நாயாவது வருமா...?!

  அவருக்கு ‘பெக்’ எல்லாம் சரிப்பட்டு வராது... சர்பத் கிளாஸில் ஊத்திக்குடிக்கச் சொல்லுங்க...!

  கொடுந்தமிழால் கெடும் தமிழா...!

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. பெண்களுக்கு தேவையானவை தானே நிறைய ஆன்லைன்லே வருது :)

   அதுக்கும் தண்ணி காட்டுறதா பெரிய காரியம் :)

   எல்லா கிரீம் பாக்கிங்கும் ஒரே மாதிரி இருக்கே :)

   அதான் கனவுலே வந்திருக்கு :)

   மினரல் வாட்டர் கேன் அளவுக்கு வெளியே தள்ளிடுமே :)

   தமிழை வாழ வைக்கிறார்களோ இல்லையோ,தமிழால் நல்லாவே வாழ்கிறார்கள் :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தேன். பீரோ அடி உட்பட.

  ReplyDelete
  Replies
  1. பீரோ கண்ணாடி மேல் கொசு பேட்டை எறிந்திருப்பாரோ :)

   Delete
 11. ''நீங்க இப்படி சொல்வீங்கன்னுதான் நேற்றே ஆன் லைன்லே ஆர்டர் பண்ணிட்டேன்னு சொல்றாளே !''//

  பெண் புத்தி முன் புத்தி!!

  ReplyDelete
  Replies
  1. இதிலாவது இருக்கே :)

   Delete
 12. ஆன்லைன் ஷாப்பிங்க் வந்தப்பின் தேவையில்லாததுலாம் வீட்டுக்குள் வருது

  ReplyDelete
  Replies
  1. உண்மை ,ஆன்லைன் செலவுக்கு பட்ஜெட்டில் தனியாக ஒதுக்க வேண்டியுள்ளது :)

   Delete
 13. அனைத்தும் நன்றாக ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. பால்மானிக்கும் அவருக்கும் உள்ள ஏழாம் பொருத்தத்தை ரசிக்க முடியுதா :)

   Delete
 14. வணக்கம் ஜீ... ஜோக்குகள் செம செம..! கொள்கை விளக்கப் பாடல்.. யதார்த்தம் கலந்த நகைச்சுவை.!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி Rajeevan Ramalingamஜி :)

   Delete
 15. த.ம முதல் இடம் - வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
  Replies
  1. இந்த முதல்வனும் நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ,தமிழ் மணம் அடிக்கடி மக்கர் பண்ணுகிறதே ஜி :)

   Delete
 16. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தாகம் அடங்கவில்லைஎன்றால் கஷ்டம்தானே :)

   Delete