19 May 2017

வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)

யானைக்கொரு காலம் வந்தா ....:)           
           ''கோட்சேவுக்கு  சிலை வைக்கப் போறாங்களாமே !''
            '' அடக் கண்றாவியே ,காந்திக்கொரு காலம் வந்தா கோட்சேவுக்கும் ஒரு காலம் வரும் போலிருக்கே !''

வயதானவர்களுக்கு  வாழ்வாதாரம் அதுதானே :)             

              ''வங்கி டெபாசிட்  interest யை  மூத்த குடிமக்களுக்கு  மட்டுமாவது  இன்னும் அதிகரித்தால் நல்லதா ,ஏன் ?''

              ''வாழணுங்கிற  interest அவர்களுக்கு  கூடுமே !''

படித்தால் போதாது ,ருசித்துப் பாருங்கள் :)

               ''அந்த ஸ்வீட் கடைக் காரர் வித்தியாசமா  விளம்பரம் பண்ணி இருக்காரா ,எப்படி ?''
                ''யாருக்கும் பிடிக்காதது பாலியல் பலாத்காரம் ,எல்லோருக்கும் பிடித்தது  எங்கள் கடை 'பாலின பலகாரம்' தான்  !''

வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)

           ''அவரை மொடாக் குடிகாரர்னு , ஏன்  சொல்றீங்க?''                  
            ''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே உச்சரிக்கிறாரே !''

A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை :)
       ''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
        ''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
        ''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''

எங்குமுள்ள ஓட்டைகள் :)

          ஒட்டடை சொல்லும் உண்மை ...
          ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
         ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !

40 comments:

 1. நான் தான் பர்ஸ்டா...??? :)

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் சரியான போட்டி ,நீங்களேதான் பர்ஸ்ட் :)

   Delete
 2. ஜீ, எனக்கு ஏதும் பரிசு உண்டா..?? :)

  இருங்கோ வாசிச்சிட்டு வாறன்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சில நொடிகளில் 'பூஜார்' வந்து பரிசைத் தருவாங்க , பிறாண்டினால் நான் பொறுப்பல்ல :)

   Delete
 3. இன்று எல்லா ஜோக்குகளுமே பிரமாதம் ஜீ..., தாய் மண்ணே சுணக்கம்.. ஹாஹா..!

  அந்த ஓட்டை தத்துவமும் சூப்பர் :)

  ReplyDelete
  Replies
  1. பதிவை நீங்களே இணைத்து விட்டீர்களா ,அல்லது தானாக திரட்டிக் கொண்டு விட்டதா /இருந்தாலும் நன்றி உங்களுக்கு :)

   Delete
 4. விளம்பரம் பற்றிய
  நுட்பம் அது

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு கற்பழிப்பும் காராபூந்தியும் ஒண்ணுதான் :)

   Delete
 5. காந்தி சிலையையும் பக்கத்திலேயே வைத்து, 'இவர்தான் இவரைக் கொன்றவர்' னு சுட்டிக் காட்டற மாதிரி ஆள் காட்டி விரலை நீட்டிக்கொண்டு நிற்பது போல ஒரு பொதுஜனம் சிலையும் வச்சுடலாம்!

  இன்டரஸ்ட் ஜோக் ரசிக்க வைக்கிறது.

  அடடே... என்ன இன்று இதுவரை அதிராவையும் கில்லர்ஜியையும் காணோம்? அதுதான் தம 3 லேயே இருக்கா!

  ReplyDelete
  Replies
  1. 2ம் ஜாமத்தில போட்ட 3வது வோட் என்ர வோட்:)... கில்லர்ஜி க்காக வாங்கிவச்ச நித்திரைக் குளிசையை மாறிப் போட்டிட்டேன் போல:) கர்ர்ர்ர்:).

   Delete
  2. ஆளும் தரப்பு கோட்சே சிலைக்கு மட்டும்தான் மாலை போலிருக்கே ஜி :)

   Delete
  3. அதிரா ,குளிசை இரண்டும் இன்னிக்கு வேலையைக் காட்டின மாதிரி இருக்கே ,ராஜீவன் இன்னைக்கு முந்திக் கொண்டாரே :)

   Delete
  4. அதென்ன ‘2ம் ஜாமத்தில்’? அதிரா வீட்டில் கடிகாரம் இல்லையா?!

   Delete
  5. பகவான் ஜீ மேடைக்கு வரவும்:).. அண்டைக்கு அதிரா ஆரு எனக் கேட்டபோதே, நீங்க ஒயுங்கா பதில் கொடுத்திருந்தா, இண்டைக்கு இப்படி ஒரு கேள்வி கேட்டிருப்பாரோ?:).. நீங்க ஏதோ பூனை எலி எண்டு சொன்னதால அவருக்கு டவுட் வந்திட்டுது :)

   பாருங்கோ இப்போ கடிக்க காரம் இல்லையா வீட்டில எனக் கேட்டு.. என் இமேஜ் ஐயே டமேஜ் ஆக்கிட்டார்ர்ர்:).. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் ோறேன்ன்ன்:) பகவான் ஜீ உங்களுக்கு 2 வோட் நஸ்டமாகப்போகுதே.. மீ குதிக்கிறேன்ன் தேம்ஸ்ல:) தனியே குதிக்கப் பயம்ம்ம்மாக்கிடக்கு அதுதான் கையோட அஞ்சுவையும் குரங்குப்பிடியா பிடிச்சுக்கொண்டே குதிக்கிறேஎன்ன்ன்:).

   Delete
  6. கடிக்க காரம் இல்லையான்னு கேட்டார் ,தப்பாச்சே !பூஜாருக்கு பிடித்ததெல்லாம் நெஸ்மால்ட் ஆறின பால்தான்னு சொல்லிவிடுகிறேன் :)

   இரண்டு வோட் போயிட்டா ,நானும் வைகையில் குதிச்சிடுவேன் (தண்ணி இருக்கான்னு மட்டும் கேட்டுறாதீங்க:)

   Delete
  7. ஹா ஹா ஹா... நீங்க குதிச்சிட்டா.. ஜோக்காளிக்கு முதலாமிடம் கிடைக்காது தமனாவில எனும் ஒரே காரணத்துக்காக நான் என் குதிக்கும் முடிவை ஒத்தி வச்சிட்டேன்ன்ன்:).

   ///(தண்ணி இருக்கான்னு மட்டும் கேட்டுறாதீங்க:)///
   நான் தண்ணிபற்றிக் கேய்க்கவே மாட்டேன்ன்:) ஏனெனில் இக்காலத்தில.. எதைப்பற்றிப் பேசுவாங்க என்றே தெரியுதில்லை:) ஹா ஹா ஹா:)

   Delete
  8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ற்ற்ற்ற்

   Delete
  9. #நான் தண்ணிபற்றிக் கேய்க்கவே மாட்டேன்ன்:) ஏனெனில் இக்காலத்தில.. எதைப்பற்றிப் பேசுவாங்க என்றே தெரியுதில்லை:) #
   இதுக்கு ஏன் அஞ்சு கர்ர்ர்ர்ரர்ங்குது:)

   Delete
  10. ன்னா வில்லத்தனம் இந்த பூனைக்கு :) நீங்க குதிங்க நான் வரல ..பகவான்ஜி நான் காரர் சொன்னது பூனைக்கு .பாருங்க என்னையும் தேம்ஸ்ல தள்ள பிளானிங்

   Delete
  11. அதானே ,அருவியிலா குளிக்கப் போவது பூஸார்,துணைக்கு ஆளைத் தேடுதே :)

   Delete
  12. நோஓஓ நான் தண்ணில தனிய எப்பூடிக் குதிப்பேன்ன்ன் மூச்சடக்குமெல்லோ... மீக்குப் பயம்:)

   Delete
  13. முதலில் ரிவர் கிட்ட செல்லவும் சற்று குனியுங்க உள்ளே இன்னும் ஒர் cat தெரியும் then jumpppp பயம் வராது

   Delete
 6. Replies
  1. interest டா இருக்கா ஜி :)

   Delete
 7. ஸ்வீட்கடைகாரர் புத்திசாலிதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. புத்திசாலித் தனம் இல்லைன்னா ஈ ஓட்ட வேண்டியதா போயிருமே :)

   Delete
 8. ஹிந்து ராஷ்ட்ரா வந்தால் கோட்சே கொண்டாடப்பட்டாலும் ஆசரியபட ஏதுமில்லை
  இப்போதெல்லாம் இண்டெரெஸ்ட் குறைந்துகொண்டே போகிறதே
  பாலில் பல ஆகாரம் ....!
  ரகுமானுக்கு சுணக்கம் பிடிக்காமல் இருக்கலாம்
  ஓட்டைகள் இருந்தால்தான் ஒட்டடைகளா

  ReplyDelete
  Replies
  1. ராம ராஜ்யத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும் :)
   சீனியர் சிட்டிசன்னை மதிக்கும் லட்சணம் இவ்வளவுதான் :)
   மில்க் ஸ்வீட் என்றாலே சூப்பர்தானே :)
   இன்டர்நேசனல் பார்ட்டி , அவருக்கு ஏன் பிடிக்கப் போவுது :)
   அது வழியாத்தானே சிலந்தி உள்ளே வருது :)

   Delete
 9. ‘நாற்சந்தியெங்கும் நாய்களுக்குச் சிலைவைப்போம்... நன்றியாவது கற்கட்டும்...’ சிலைக்கருகில் இந்த வைரவரிகளையும் வடித்து வைப்போம்...!

  No interest...!

  பலகாரம் ஆண்பால் செய்ததா... பெண்பால் செய்ததா...?!

  மொடாக் குடிகாரர்ன்னு சொல்லப் படாது... மொடக் மொடக்கா குடிக்கும்காரர்...!

  தாய் மண்ணுதானே... மணலாகி வாழவைக்கிது...அரசியல்வாதிகளை...!

  பாழடைந்த மண்டபத்திற்கு பிடித்தது... ஒட்டடைதானே...!

  த.ம. 7


  ReplyDelete
  Replies
  1. பைரவர்களுக்கு வைர வரிகளா :)

   வாழ இஷ்டமில்லையோ :)

   ருசியா இருக்கா பாருங்கோ :)

   சோடா கலக்காத குடிகாரரும் கூட :)

   அவங்களை வாழ் வைக்குது ,தண்ணிக்கு நம்மை நாயா அலைய வைக்குதே :)

   அப்படின்னா அங்கே பேய் இருக்குமே :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தோம்...வல்லவனுக்கு ஃபுல்லையும் ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. க்புல்லை நம்பினால் வல்லவனும் கெட்டவனாகி விடுவானே :)

   Delete
 11. படித்தால் போதாது ,ருசித்துப் பாருங்கள் :)//

  ஓசியில் கிடைத்தால் எவ்வளவும் ருசிக்கலாம். ருசியும் அதிகமாகும்!

  ReplyDelete
  Replies
  1. அதான் ,மக்கள் ஓசிக்கு அலையுறாங்களா:)

   Delete
 12. அந்த full ஆயுதத்த வச்சு எந்த கோட்டய பிடிக்கபோராரு....

  ReplyDelete
  Replies
  1. அந்த ஃபுல்லை விற்க முடியாம கோட்டையே கலகலத்து போச்சே :)

   Delete
 13. இண்டரஸ்ட் கூடுகிறது தோழர்

  ReplyDelete
  Replies
  1. RBI இண்டரஸ்ட் ரேட்டைக் குறைச்சிகிட்டே வருதே :)

   Delete
 14. முத்தான ஜோக்குகள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. குடிகாரனுக்கு இந்த உச்சரிப்பு மட்டும் எப்படி சரியா வருதோ தெரியலே :)

   Delete