11 June 2017

கணவன் சொன்னா மட்டும் மனைவிக்கு ஏன் பிடிக்கலே :)

பெயர் பொருத்தம்  சூப்பர் :)
              '' உங்க ஜிப்பாவை  ஏன் 'ஜிதப்பா 'ன்னு சொல்றீங்க ?''
              ''முன்னாடி தைக்க வேண்டிய பித்தான்களை பின்னாடி தைச்சிருக்காரே !''

கணவன் சொன்னா மட்டும் மனைவிக்கு ஏன் பிடிக்கலே :)
            ''என் பையன் சொன்னா சந்தோசப் படுற என் மனைவி ,அதையே நான் சொன்னா மட்டும் எரிஞ்சு விழுறா !''

            ''அப்படியென்ன சொன்னீங்க  ?''
             ''தாயிற்சிறந்த கோவிலுமில்லைன்னுதான் !''

வாயிலே என்ன கொழுக்கட்டையா  :)
           ''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த  ,நீ ஏன் சத்தம் போடலே ?''
            ''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''

பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!
கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரிலே  பெருகி விட்டார்கள் !

இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462902செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

30 comments:

 1. மீ தான்ன்ன் இங்கின 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)

  ReplyDelete
  Replies
  1. தாயில் சிறந்த கோயிலுமில்லை.. ஹா ஹா ஹா சரிதானே:).. அது தாரம் வர முன்னாடி பாடோணுமாக்கும்:)... பின்னாடி தாரத்தில் சிறந்த கோயிலுமில்லை எனத்தான் பாடோணும்:).. பிழைக்கத் தெரியாதவர்களாக இருக்கினமே எல்லோரும் ஹா ஹா ஹா:)..

   Delete
 2. எனக்கும் சர்க்கரை நோய் தான்
  அதைக் கண்டு தாங்கள் ஆக்கிய
  பா அழகு கண்டு நான்
  படைத்தவன் தவறு என்று கொள்ளவோ!

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒருவன் இருந்தால் ,அப்படியே கொள்ளலாமே :)

   Delete
 3. ஹா.... ஹா.... ஹா... ஜிதப்பா....! நல்ல சொல்!

  ஆளுக்கு ஆள் மாறுவதால்தான்!

  பாட்டன் சொத்து 100க்கு 96 பேர்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. ஜீ ன்னு வந்தாலே நல்லாத் தானே இருக்கும் :)

   மாமியாரை போற்றினால் தகுமா :)

   மீதி நாலு பேருக்கும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை :)

   Delete
 4. ஜிப்பாவை திருப்பி போட்டு இருக்கீங்க... இதுக்குத்தான் மாத்தி யோசிக்காதிங்கன்னு சொல்றது...!

  சம்சாரம் அது மின்சாரம்...!

  உண்மையச் சொல்லு... புல் அடிச்சிட்டு எழுந்திருக்க முடியாம கிடந்தாய்...!

  ‘ஜீனி’லே சர்க்கரைதானே...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. தலையை மட்டும் திருப்பி வச்சுக்க வேண்டியதுதானே :)

   தாரம் அதுவே ஆதாரம் இல்லையா :)

   இருவருமே புல் தானா :)

   இது இன்சுலின் சர்க்கரை :)

   Delete
 5. Replies
  1. தாயிற்சிறந்த கோவிலுமில்லை ,பழமொழி கோபப் படுத்தியதையுமா :)

   Delete
 6. ஜிதப்பா ஹா.. ஸா.. ஸா.. ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. லிங்க் தவறு ஜி

   Delete
  2. ஜிதப்பா மாதிரி இதுவும் தப்பா போச்சா :)

   Delete
 7. ஹாலோ....பகவான் ஜி...சுப்ரீம் கோர்ட் ஆர்டர் பார்க்கலையோ....அதான் தேகிரியமா ஜோக்காளி... சொல்றாரு...மனைவி சொல்றத அத்தனையும் கணவன் கேட்கணுமாம்...அப்ப குடும்வத்துல பிரச்சனையே வராதாமே...நாங்க சொல்லல...இதுதான் ஆர்டர்....பாத்து போடுங்க ஜி....ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. ஆர்டரை முதலில் நீதிபதி மதிக்கட்டும் ஜி :)

   Delete
 8. ஜிதப்பா... ஹஹஹஹ..செம....

  ReplyDelete
  Replies
  1. தப்பா ஒண்ணும் தோணலையே :)

   Delete
 9. // ''தாயிற்சிறந்த கோவிலுமில்லைன்னுதான் !''//

  'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’னு சொல்லுற மாதிரி, ‘தாயும் தார...’ அல்ல, ‘தாரமும் தாயும் கண்கண்ட தெய்வம்’னு சொல்லிட்டாப் போச்சு!!

  ReplyDelete
  Replies
  1. நாம சொன்னாலும் அவங்க சரின்னு சொல்லணுமே :)

   Delete
 10. தாயிற் சிறந்ததொரு கோவில் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அது எங்கே இருக்கு ஜி :)

   Delete
 11. ஸாரி ஜீ நேற்றிக்கு வரவே முடியல. ஸ்விமிங் பூல் போயிட்டு வர லேட் ஆகிட்டுது.

  ReplyDelete
  Replies
  1. நோ பிராப்ளம் .....நாலு கமெண்ட் போட்டீங்க,தமிழ் மண வாக்கு அளிக்க வில்லையே ,ஏதாவது சிரமம் இருக்கா ஜி :)

   Delete
  2. லிங்க் தவறு என்று கில்லர்ஜி சொன்னதால் சரி செய்துள்ளேன் ,தம வாக்கு சரியாக விழுகிறதா என்று நீங்கதான் சொல்லணும் ஜி :)

   Delete
 12. Bureau pulling, Oil pulling - ஹா ஹா செம செம

  ReplyDelete
  Replies
  1. இழுக்க இழுக்க இன்பம்னு நினைச்சிட்டாங்க போலிருக்கே ஜி :)

   Delete
 13. பாட்டன் தந்த சொத்து - வேதனையான உண்மை ஜீ

  ReplyDelete
  Replies
  1. இதை தவிர்க்க ஜீன் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கே ஜி :)

   Delete
 14. ஜிப்பா அணிந்த விதம் சரியா. காசுகொடுத்து வாங்கியதா ஜிதப்பா என்றால் சரியாகுமா
  தாயிடம் சொல்ல வேண்டியதை தாரத்திடம் சொல்லக் கூடாது
  ஆயில் புல்லிங் ஆனால் கத்தமுடியாதா
  ஜீனிலே ஜீனி அட நல்லா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு பக்கமும் பித்தான் தைத்தால் சரியாய் போச்சு :)
   இது வேறையா :)
   ரொம்ப முக்கியம் இல்லையா :)
   ஆனால் வாழ்நாள் தொல்லையா இருக்கே :)

   Delete