12 June 2017

'புருசனதிபதி 'என்று மனைவியைச் சொல்லலாம்தானே :)

 இப்படியும் ஒரு நன்மையா :)
               ''ஆதார் கார்டு எடுத்ததும் ஒரு வகையில் நல்லதா போச்சா ,ஏண்டீ ?'' 
               ''நான் அழகாவே இல்லைன்னு  கரிச்சு கொட்டிகிட்டு  இருந்த என் வீட்டுக் காரர் ,ஆதார் போட்டோவில்   இருப்பதை விட  நேரிலே பார்க்க  அழகாயிருக்கேன்னு  சொல்றாரே !

கண்ணன் பிறந்தது  எங்கு  தெரியுமா :)
             ''ரயிலில் 'வித்தவுட்'டில் ,ராமர் பிறந்த அயோத்திக்கே என்னால் போக முடியும்னு  சவால் விட்டாரே  ,அவரால் போக முடிந்ததா ?''

             ''செக்கரிடம் மாட்டிகிட்டு கண்ணன் பிறந்த இடமான ஜெயிலுக்குப்  போயிட்டார் !''

பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் :)
             ''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
             ''ஆமா ,அவன் கிழிச்சான் ,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

 'புருசனதிபதி 'என்று மனைவியைச் சொல்லலாம்தானே :)
ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
கைடு லைன் சொல்லிக் கொண்டே ஓட்டுவதோ 
பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !

இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463006செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

31 comments:

 1. ஹாய் ஜீ, ஹவ் ஆர் யூ ஜீ ? :)

  ReplyDelete
  Replies
  1. உங்க மேலே கோபமா இருக்கேன் ,அதிரா பாணியில் ......கர் கர் :)

   Delete
 2. ஆதார் கார்டினால் இப்படி ஒரு நன்மையா..??? :)

  புருசனதிபதி - புதுசா இருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. மெதுவா சொல்லுங்க ,இதையும் ப்ளஸ் பாயிண்டா சொல்லிடப் போறாங்க :)

   ஜனாதிபதி மாதிரிதான் :)

   Delete
 3. நல்லவேளை கேமராவை கண்டு பிடித்தவன் இல்லை இருந்தால் அவனது ஆதாரை கண்டு தற்கொலை செய்திருப்பான்

  ReplyDelete
  Replies
  1. ஏன் இப்படி கடன் கழிக்கிறார்கள் என்றே தெரியவில்லை .போட்டோ கொடுக்கச் சொன்னாலும் கொடுத்து விடலாம் :)

   Delete
 4. ராமன், கண்ணன் பிறந்த இடங்கள் ஜோக் ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. இரண்டு இடமும் பக்கம்பக்கம் தானே ஜி :)

   Delete
 5. அவர் கண்ணாடி காணாமல் போயி ஒரு வாரம் ஆச்சே...!

  இதுக்குத்தான் பிறந்த இடத்தில... அந்த இடத்தில் கோயில் கட்ட முயற்சி செய்யக்கூடாதிங்கிறது...!

  வெயில் காலத்தில குளிக்கப் போறத... ‘தீக்குளிக்க போறேன்னு...’ சொல்றான்...!

  ‘கைடு’ வசதி... வச(ந்)தி...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. இப்படி போட்டுப் பார்க்காதீங்க :)

   அதான் கரசேவை ஆகிவிட்டதோ:)

   வெயிலும் தீயாதானே இருக்கு :)

   வீட்டுக்கு வீடு வாசப் படியா ,வசந்தியா :)

   Delete
 6. Replies
  1. அவன் குளிச்சே ஆறு மாசமானதையுமா:)

   Delete
 7. //ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...//

  இப்படித்தான் பலபேருடைய வாழ்க்கைவண்டி ஓடுது!!!

  ReplyDelete
  Replies
  1. கவிழாமல் ஓடினால் சரிதானே :)

   Delete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. //'புருசனதிபதி 'என்று மனைவியைச் சொல்லலாம்தானே :)///

  தாராளமாக:) இதிலென்ன சந்தேகம்:) இப்படிப் பெயரெடுத்த குடும்பங்கள்தான் இப்போ மிக நிம்மதியான வாழ்க்கையில் இருக்கு:).. பின்ன மனைவியை எதிர்க்க வெளிக்கிட்டால்ல்ல்ல் நிம்மதி போஓச்ச்ச்ச்ச்ச்:).. இது தெரியாதவர்கள்தான் அவதிப்படுகிறார்கள்:).

  //ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
  கைடு லைன் சொல்லிக் கொண்டே ஓட்டுவதோ
  பின்னால் இருக்கும் மனைவி ...//

  ஹா ஹா ஹா கெளரவப் பிரச்சனையாகிடுமெல்லோ இடத்தையும் மாத்திட்டால்:).. கெத்துக் காட்ட வேணாமோ:) மாப்பிள்ளை இவர்தான் ... ஆனா போட்டிருக்கும் ட்ரெஸ் என்னோடது:) ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டு அய்யாவிடம் இதை சொன்னீங்களா :)

   அதுவும் ஒண்ணும் தப்பா தெரியலே :)

   Delete
 10. Replies
  1. ஜெயிலுக்குப் போனவருமா பலே பலே :)

   Delete
 11. Replies
  1. ஆதார் அழகை ரசிக்க முடியுதா :)

   Delete
 12. வீட்டுலேயும், ரோட்டுலேயும் அவங்கதான் கைடு

  ReplyDelete
  Replies
  1. சமையக் கட்டுக்குப் போனாலும் :)

   Delete
 13. கண்ணன், ராமன் மற்றும் 6 மாசம் குளிக்காத பையன் ஹஹஹ...

  ReplyDelete
  Replies
  1. கண்ணன் பிறந்தது சிறையில் என்றால் நம்ப முடியுதா ஜி :)

   Delete
 14. கண்ணன், ராமன் மற்றும் 6 மாசம் குளிக்காத பையன் ஹஹஹ...

  ReplyDelete
  Replies
  1. அப்பனுக்குத் தெரியாதா பிள்ளையைப் பற்றி :)

   Delete
 15. ஆதார்கார்டு இருக்கும் முகத்தை உள்ளதை இருக்குமாறு காட்டக் கூடாதா யாருமே அழகாகத் தெரிவதில்லையே
  அவர் கர்சேவாவுக்கே போகவில்லையா
  தீக்கு தின்னக் குடுக்க முடியாமல் குளிக்கப் போகிறாரோ
  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்ணிருக்கிறாள்

  ReplyDelete
  Replies
  1. ஆதாரமே இப்படி கோணல் என்றால் .........:)
   நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு :)
   அவர் குளிக்கவில்லை என்றாலும் குளிப்பாட்டி விட்டு விடுவார்களே :)
   பைக்குக்குப் பின்னாலும் :)

   Delete
 16. புருஷனாதிபதி..😊💐💐

  ReplyDelete
  Replies
  1. புருஷனாதிபதி இல்லை ,புருசனதிபதி:)

   Delete