13 June 2017

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு :)

அருகம் புல் சாறு  குடிச்சா உடம்பு மெலியுமாமே :)        
         ''தலைவருக்கு அருகம் பூ மாலையா ,ஏன்  ?''      
        '' ஊளைச் சதையைக் குறைக்கணும்னு ,தொண்டர்கள் 'சிம்பாலிக்கா'  சொல்றாங்க !'' 

அய்யாவுக்கு இருக்கு ஆப்பு :)
          ''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
          ''ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேட்குறே ?''
         ''சித்தின்னு சுருக்கமா கூப்பிட்டா  போதும்னு அப்பா ஏன் சொல்றாரு ?''

தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)
               ''இப்போ கிடைச்ச வேலை ,முந்தி கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே  இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து  !''
               '' உனக்கு  வேலைக்கிடைச்சதே  ,என்னைக் கட்டிகிட்ட  யோகத்தால்  தானே !''

இதயம் , லைப் லாங் கியாரண்டி:)
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டி காலம் கூடுவதும் குறைவதும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !
இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463121செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

38 comments:

 1. ஹாய் ஜீ, ஹல்லோ ஜீ எப்படி இருக்கீங்க..?

  ReplyDelete
  Replies
  1. நலம் ,நாடுவதும் அதுவே ஜி :)

   Delete
 2. எங்க ஜீ ஓட்டு லிங்..?? காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சா..? :) :)

  சரி சரி நான் ஓட்டுப் போடாமல் இண்டைக்கு டின்னர் எடுக்கவே மாட்டேன் :)

  இருங்கோ Desktop Version ல ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வாறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான்தான் தூங்கப் போயிட்டேன் ,இப்போ சேர்த்தாச்சு ஜி :)

   உங்க ரவுண்டு ,வெற்றிப் பயணம் ஜி :)

   Delete
 3. ஜீ, பதிவ தமிழ் மணத்தில சேர்க்கலயா..??

  நான் சேர்த்து விடலாம்னு பார்த்தேன். பட் உங்க பர்மிசன் இல்லாம....????

  ReplyDelete
  Replies
  1. தானாக சேர்த்துக் கொள்ளும் ஜி :)

   Delete
 4. சித்ரா - சித்தி = ஹா ஹா எப்புடீ ஜீ இப்படியெல்லாம் யோசிக்குறீங்க..??

  ReplyDelete
  Replies
  1. இது எனக்கு வாய்த்த சித்தி :)

   Delete
 5. அரளி பூ மாலை போட்டா சரியா இருக்காதா...?!

  அவருக்கு சித்த பிரமை பிடிச்சு கொஞ்ச நாளாச்சுடா... பக்கத்து வீட்டு சித்தப்பா இருக்காரான்னு பாருடா...!

  யோகாசனம் செய்ய ஆசிரியரை நியமிக்க இப்பத்தானே முடிவு செஞ்சாங்க... உனக்கு யோகம்தான்...!

  ‘சேர் ஹோல்டர்’ஆன லைப் பார்ட்னரைப் பொறுத்தது...!

  த.ம 4

  ReplyDelete
  Replies
  1. அரைச்சு குடிச்சா கடற்கரையில் இடம் கிடைக்குமா :)

   எல்லாம் தெரிந்துதான் நடக்குதா :)

   இதுக்குமா ஆசிரியர் :)

   இதென்ன தாம்பத்தியமா,கம்பெனியா :)

   Delete
 6. Replies
  1. அருகம் பூ மாலை பொருத்தம்தானே :)

   Delete
 7. சித்ரா - சித்தி ஜோக் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. 'சித்ரா'க்கள் யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது :)

   Delete
 8. சித்தியும் மூன்றெழுத்து இதில் தவறில்லையே...

  ReplyDelete
  Replies
  1. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடினது இதுக்குத்தானா :)

   Delete
 9. Replies
  1. லைப் லாங் கியாரண்டி சரிதானே ஜி :)

   Delete
 10. //தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)//

  இரண்டும் உண்மையே என்பவர்கள் நிறைய இருக்கிறார்களே!!

  ReplyDelete
  Replies
  1. வீட்டுக்கு வீடு இந்த கதைதானா :)

   Delete
 11. சித்தியை ரசித்தோம்...ஹிஹிஹி...அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அம்புட்டு அழகா சித்தி :)

   Delete
 12. அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. இதயத் துடிப்புமா :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு விளம்பரம் பிடிக்காது :)

   Delete
 14. உன்ன கட்டிக்கிட்ட யோகம்தான் எல்லாம் ☺☺

  ReplyDelete
  Replies
  1. சாட்டை அடி சரி தானே :)

   Delete
 15. //Bagawanjee KATue Jun 13, 04:07:00 am
  இது எனக்கு வாய்த்த சித்தி :)//

  இது எனக்குப் புதுத்தகவல்:)...ஹா ஹா ஹா:).

  இன்று அனைத்து ஜோக்குகளும் சூப்பர் பகவான் ஜீ..

  //கியாரண்டி:)/// அது கரண்டி.. எனத்தான் சொல்லோணும் கர்ர்ர்ர்:).. அதுவும் உண்மையேதான்..

  ReplyDelete
  Replies
  1. இங்கின அதிராதான் லாஸ்ட்டு எனக் கோபமா இருப்பீங்க:) என் உண்மைக்கதை தெரியாமல்...:).. அது கொமெண்ட்டில லாஸ்ட்டாக இருக்கலாம் ஆனா முதலாவது வோட் போட்டதே இங்கு மீதான்ன்ன்..

   Delete
  2. லைப் பார்ட்னர் என்றால் கரண்டியை குறிக்காதே :)

   Delete
  3. நடு ராத்திரி என்றாலே அது பூஜாரின் வேலை நேரம்தானே :)

   Delete
 16. Replies
  1. டெசன் ஆக்கிய உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி :)

   Delete
 17. அனைத்தும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அய்யாவுக்கு வைத்த ஆப்பும் சரிதானே :)

   Delete
 18. தலைவர் எனறால் ஒர் கெத்து இருக்க வேண்டாமா
  அவரையே அப்படி கூப்பிட சொல்ல வேண்டும்
  யோகமாவேளை வாங்கி கொடுத்தார்
  லைஃப் பார்ட்னர் இல்லாவிட்டால் முழுநேரமும் இயங்கக் காரண்டியா .?

  ReplyDelete
  Replies
  1. கிழடு ஆனாலும் சிங்கம் தானா :)
   பையனுக்கே புரிந்து விட்டது :)
   சும்மா ஒரு உதார்தான் :)
   கஷ்டம் தான் :)

   Delete