14 June 2017

புருஷனின் தவிப்புக்கு காரணம் இதுதானா :)

 கைமாத்து கேட்கிறவனின்  அரசியல் ஞானம் :)
           ''கையிலே காசில்லேன்னு சொல்றேன், ஏன் நம்ப மாட்டேங்கிறே ?''
           ''உன் தொகுதியில் நாளைக்கு இடைத் தேர்தல் ,அதெப்படி கையிலே காசில்லாமல் போகும் ?''

கடவுளை நம்பாதேன்னு சொல்றது இதுக்குத்தான் :)
            ''என்னடா சொல்றே , மனைவிமார்கள்  கடவுள் மாதிரியா ?''

            ''ஆமா ,கணவன்  சொல்றதை எல்லாம்  கேட்டுகிட்டு ,அவர்கள் இஷ்டப் படிதானே நடந்து கொள்கிறார்கள் ?''


புருஷனின் தவிப்புக்கு காரணம் இதுதானா :)
             ''என்னங்க ,பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டி கூட, அவரோட  புருஷன் வீட்டுக்கு வரலையேன்னு கவலைப் படலே ,நீங்க ஏன் கிடந்து தவிக்கிறீங்க ?''

            ''அவர் வந்தாதானே 'ஓபன் ஃவை பை ' ஆன் ஆகுது !''

வேலியே பயிரை மேயலாமா :)
           ''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் வைப்பது ,கயிர் ஏறுவது ,உயரம் தாண்டுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
            ''என்னடா சொல்றே ?''
           ''மாமூல் வாங்க அதெல்லாம் தேவையா ? ''

சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா :)
இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில்  பிறந்தவன் மூத்தவன் அல்லன்  ! 
எப்படி என்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட  சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !

இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463231செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

35 comments:

 1. ஹா ஹா அவரின் தவிப்புக்கு இதுதான் காரணமா..??

  ReplyDelete
  Replies
  1. நீங்க நினைக்கிற தவிப்பு எல்லாம் இல்லே ஜி :)

   Delete
 2. அதானே மாமூல் வாங்க எதுக்கு அத்தனை பயிற்சிகள்..?? :)

  ReplyDelete
  Replies
  1. சில கருப்பாடுகள் செய்யும் வேலையால் இவ்வளவு அசிங்கம் :)

   Delete
 3. லைட்டா snoring sound கேட்குது :) :)

  பகவான் ஜீ தூங்கிட்டார் போல. அப்ப குட் நைட் ஜீ :) :)

  பொன் நுயி.... :)

  ReplyDelete
  Replies
  1. பொன் நுயி ,சிங்களம் தானே :)

   Delete
 4. வணக்கம் ஜி !

  என்னதான் இருந்தும் பக்கத்துவீட்டுக் காரன் வை பை க்கு இம்புட்டு தவிக்க கூடாது பா
  ஓசியில வண்டி ஓட்டுபவங்களுக்கும் தவிப்பு இருக்கும் இல்லையா ஹா ஹா ஹா

  ரசித்தேன் ஜி வாழ்த்துகள்
  தமனா நான்கு

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை ,வொய்ப்புக்கு தவிக்க வில்லையே :)

   Delete
 5. பக்கத்து வீட்டுக்காரரின்
  தவிப்பின் காரணம் இரசித்தேன்
  போலீஸ்காரரின் தகுதித் தேர்வு
  குறித்தச் சந்தேகமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தவிப்பு நியாயம் தானே :)
   அப்படித் தானே இருக்கு :)

   Delete
 6. சட்டை, பனியன் தத்துவமா - அது
  உயிரியலை அலசுகிறதா - அது
  படைப்பின் கமுக்கமா (இரகசியமா)?

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தான் :)

   Delete
 7. Replies
  1. நேற்று டெசன் ,இன்று அரை டெசனா :)

   Delete
 8. நாளைக்கு கிடைத்த தேர்தல்... இது முக்கியமான வார்த்தைதான். ஆனால் இப்போதெல்லாம் புது டெக்னீக் ஆச்சே... டோக்கன் கொடுத்துட்டு, தேர்தல் முடிந்து அப்புறம் தருகிறார்களாமே..

  அப்படியா நடந்து கொள்கிறார்கள்?

  அதைச் சொல்லுங்க..

  மாமூல் தராமல் ஓடுபவனைப் பிடிக்க இதெல்லாம் அவசியமில்லையோ?

  எளிமையான விளக்கம்!

  ReplyDelete
  Replies
  1. புது டெக்னிக் மக்களிடம் எடுபடுமான்னு தெரியலே :)

   உங்க அனுபவம் வேற மாதிரியா :)

   நல்ல மனுஷனுக்கு இது தெரியாம இருக்கணும் :)

   இல்லைதானே :)

   இப்பவும் புரியலைன்னா என்ன பண்றது :)

   Delete
 9. தேர்தல் வந்தால் தொகுதி முழுவதும் பணம் புழங்குமே...

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் :)

   Delete
 10. கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல...! இரத்தான தேர்தல் மீண்டும் வரட்டும் ஒரு கை பார்த்திடுறேன்...!

  அவர்களாவது நடந்து கொள்(ல்)கிறார்களே...!

  விலையில்லா வை(ப்) பை...!

  இதெல்லாம் மாமூலா நடக்கிறதுதானே...!

  முதலில் பிறந்தவன் மூத்தவன் அல்லன்... முதலில் சென்றவன்தான் மூத்தவன்...!

  த.ம. 9


  ReplyDelete
  Replies
  1. ஆறு மாசத்தில் வந்துதானே தீரணும்:)

   ஆம் கொல்லத்தான் செய்கிறார்கள் :)

   எல்லாருக்கும் கிடைக்குமா :)

   அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா :)

   வரிசை சரிதான் :)

   Delete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. ''ஆமா ,கணவன் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு ,அவர்கள் இஷ்டப் படிதானே நடந்து கொள்கிறார்கள் ?''//

  சிரிப்பூட்டிச் சிந்திக்கவும் வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் தலைஎழுத்து என்பார்கள் :)

   Delete
 13. தேர்தல் நேரத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கைமாத்து கேட்கலாம்தானே
  மனைவி மார்களா .? எத்தனை மனைவிகள்
  விவரமுள்ள கணவன்
  துரத்திப் பிடித்து மாமூல் வாங்க உதவுமே
  ஐயோ குழப்பமாய் இருக்கிறதே இரட்டையர்களில் யார் மூத்தவராக இருந்தால் என்ன தத்துவம் வேண்டுமா

  ReplyDelete
  Replies
  1. கொடுக்கத்தானே மனசு வராது :)
   பலருக்கும் இது :)
   சிக்கனவாதியோ :)
   தேடி வருவதை துரத்த வேண்டியதும் இல்லையே :)
   இன்னுமா குழப்பம் :)

   Delete
 14. ஓட்டுக்கு நோட்டு வாங்காதவனாக இருப்பான்!
  ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. இருந்தால் சந்தோசம்தான் :)

   Delete
 15. ஓட்டு போடப்போனால் உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டது என்கிறது தமிழ் மண்ம

  கள்ள ஓட்டு இங்குமா?!

  ReplyDelete
  Replies
  1. உங்க பாஸ்வேர்ட் திருடு போயிருக்கோ :)

   Delete
 16. மாமூல் வாங்கறதுக்கு கை நீட்டினா போதாதா கரெக்டுதான்

  ReplyDelete
  Replies
  1. வழிக்கு கொண்டுவர இவ்வளவு பயிற்சி தேவையோ :)

   Delete
 17. அடடா...தவியாய் தவித்த காரணம்...இதுதானா..........

  ReplyDelete
  Replies
  1. வேறென்ன நினைச்சி பல்பு வாங்கினீங்க :)

   Delete
 18. ''மாமூல் வாங்க அதெல்லாம் தேவை ''

  ReplyDelete
  Replies
  1. மிரட்டுவதற்கு தேவைப் படலாம் ஜி :)

   Delete