16 June 2017

புரிந்ததா புருசனின் துரோகம் :)

இதிலாவது ஆணாதிக்கம்  ஒழிந்ததே :)             
                ''மினரல் வாட்டர் கேனை  கொண்டு வரச் சொன்னா என்ன புலம்புறீங்க ?''
               ''குடிக்கிற தண்ணியை குடத்திலே பொம்பளைங்க தூக்கின காலம் எல்லாம் போயிடுச்சே !''

மெண்டல் மனதில் என்னவோ :)
                 ''மன நல டாக்டரைப் பார்க்கும் அளவிற்கு என்னாச்சு ,உன் வீட்டுக் காரருக்கு ?''
                  ''ATMல் எடுத்த பணத்தைக் கிழித்து போட்டு விட்டு ,சிலிப்பை பத்திரமா  கொண்டு வந்திருக்காரே :)

புரிந்ததா புருசனின் துரோகம் :)
          ''ரொம்ப நாளைக்கு பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாறி !''
           ''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! ''

கருப்புக்கே உரிய தனிச்சிறப்பு :)
சிகப்பு நிறம் என்ன ஓவியமா ,,,
ஓவிய மையின் பெயரே 'இந்தியன் இங்க்'தான் !
இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463487செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

34 comments:

 1. ஹாய் ஜீ... ஷார்ப் டைமுக்கு வந்தேனா..?? :)

  ReplyDelete
  Replies
  1. அதிரா கோபித்துக் கொள்ளப் போகிறார் ஜி :)

   Delete
  2. என்மீது யாருக்கும் கோபம் வராது ஜீ :)

   ஐ ஆம் பேசிக்கலி அன் அப்பாவி :) :)

   Delete
 2. உளறுவாய் சிருக்கி சினிமாவுக்கு கூட்டிட்டு போனதை சொல்லிட்டாளே...

  ReplyDelete
  Replies
  1. தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகிட்டாளே:)

   Delete
 3. காசைக் கிழித்துவிட்டு, ஸ்லீப்பைக் கொண்டு வந்தாரா..?? :) :)

  நாங்கள் கச்சான் உடைச்சு சாப்பிடும் போது, கச்சானை ஒரு பாத்திரத்திலும் கோதை இன்னொரு பாத்திரத்திலும் போடுவோம்..!

  அப்படியே செய்துகொண்டு இருக்கும் போது கச்சான் போடும் சட்டிக்குள் கோதை மாறிப் போடுவோம் :) :)

  அருமாதிரி தானா இதுவும்?

  ReplyDelete
  Replies
  1. அப்ப மெண்டல் ஆயிட்டார் என்றுதானே அர்த்தம் :)

   தங்கர் பச்சானைத் தெரியும் ,அதென்ன கச்சான் ,நிலக் கடலை பருப்பா :)

   Delete
 4. புருசனின் துரோகம் - ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. இப்படி செய்யக் கூடாதுதானே :)

   Delete
 5. வணக்கம் ஜி !
  இன்னும் கொஞ்சம் தூக்கலா எதிர்பார்க்கிறோம் ,

  தமன்னா 4

  ReplyDelete
  Replies
  1. என் தூக்கம்தான் கெடும் ,பரவாயில்லையா ஜி :)

   Delete
 6. பகவான் ஜீ.. பந்திக்கு முந்தோணும் என நம் முன்னோர் சொன்னது.. உங்கட பக்கத்தில் மட்டும் கரீஈஈஈட்டாப் பொருந்துது:).. முதல்ல வருவோருக்கு மட்டும் சுடச்சுட உணவு கொடுக்கிறீங்க.. ஏனையோரை சொயிஸ்ல விட்டிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  // ''அவரை அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! ''///

  ஹா ஹா ஹா என்னா ஒரு தெகிறியம்ம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. #ஏனையோரை சொயிஸ்ல விட்டிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..#
   நீங்க மட்டும் என்னவாம் ?தேம்ஸ் நதியோர வோட்டைப் போடாமல் சொயிஸ்ல விட்டிடுறீங்களே :)

   Delete
  2. அச்சச்சோஒ பகவான் ஜீ ... என்ன கொடுமை இது... எப்பவும் வோட் போட்டுவிட்டுத்தான் போஸ்ட் படிப்பேன்ன்ன் இது எப்படி மிஸ் ஆச்சோ??? ஒருவேளை முதலாவதாகக் கொமெண்ட் போட முடியாமல் போய்விட்டதே எனும் கவலையாகக் கூட இருக்கலாம்ம்ம்:),...

   குறை நினைச்சிடாதீங்கோ இப்போ தான் போட்டு விட்டேன்ன்:).

   Delete
 7. பெண்கள் இருவர் பேசியதால்
  புருசனின் துரோகம் புரிந்ததோ?

  ReplyDelete
  Replies
  1. உண்மை வெளியே வந்துதானே தீரும் :)

   Delete
 8. படியவைக்கத்தான் செலவு செய்யவேண்டும்.

  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ///ஸ்ரீராம்.Fri Jun 16, 06:25:00 am
   படியவைக்கத்தான் செலவு செய்யவேண்டும்.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. எப்பூடி இப்பூடிக் கரீட்டாப் பொயிண்ட்டைப் பிடிச்சிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  2. படிந்த பின் பை பை தானா :)

   Delete
 9. எனக்கும் ஒருவரைத் தெரியும்
  வாழைப்பழத்தை உரித்து
  சதைப் பகுதியைத் தூக்கி எறிந்துவிட்டு
  தோலை உண்டவரை...
  இந்த ஏடிஎம் நபர் அவருக்கும்
  அண்ணனாக இருப்பார் போலிருக்கே

  அனைத்தும் அருமை
  வாழ்த்துக்களுடன்...
  ஏழாவது மனிதனாக

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு டாக்டர் சொல்லி இருக்காராமே ,பழத்தை சாப்பிடக் கூடாது ,உங்களுக்கு வேண்டிய சத்து தோலில்தான் இருக்குன்னு :)

   ஏழு சரி ,இரண்டு பேர் ஏழரை பண்ணிக் கொண்டிருக்கிறார்களே ஜி :)

   Delete
 10. குடிக்கிற தண்ணியைக் கடை கடையாய்த் தேடித்தான் அலைய வேண்டி இருக்கே...!

  ATMல வந்தது ஒரிஜினல் நோட்டு இல்லையாம்...!

  ஆமாடி... ஒங்க வீட்டுக்காரரும் என்னைக் கூட்டிட்டுப் போனப்ப ரொம்பத் தாராளமா செலவு செஞ்சாருடி...!

  கருப்புக்கு சிவப்புதானே பிடிக்கும்...!

  த.ம. 7  ReplyDelete
  Replies
  1. தவிச்ச வாய்க்கு இலவசமா தண்ணி தரக் கூட யாருமில்லையா :)

   நல்ல நோட்டுக்கு எங்கேதான் போறது :)

   இப்படியே தொடரட்டும் ,விளங்கிடும் :)

   சிகப்புக்கும் கருப்பு பிடிச்சா நல்லாயிருக்குமே :)

   Delete
 11. Replies
  1. atm ல் கள்ள நோட் .நம்ப முடிய வில்லையே :)

   Delete
 12. Replies
  1. உங்களுக்கும் இந்தியன் இங்க் நிறம் பிடிக்குமா ஜி :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. இதைத்தான் தவளை தன்வாயால் கெடும் என்றார்களோ....

  ReplyDelete
  Replies
  1. ஐந்தறிவு ஜீவன் கெடலாம் ,ஆறறிவு கெடலாமோ :)

   Delete
 15. மண்ணு குடமெடுத்து தண்ணிக்குப் போகுமக்காலமே போச்சே
  ஒரு ஜோக் எத்தனை முறை ரசிக்க முடியும் ஜீ
  சினிமா பார்க்கப் போகிறாரா ஐஸ் பாப்கார்ன் தின்னப்போகிறாரா அவருக்குக் கிடைத்ததே ஒரு ஆப்பு
  கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு

  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஒரு கனா காலமாகி போச்சே :)
   ஜாலிக்கு செலவை எதுக்கு பார்க்கப் போறார் :)
   ஆப்பில் இருந்து தப்பிக்க முடியுமா :)

   Delete
 16. முதல் ஜோக்கே நடைமுறையில் பழகி விட்டதே

  ReplyDelete
  Replies
  1. அவரால் அதை ஜீரணிக்க முடிய வில்லையே :)

   Delete