19 June 2017

பூவுக்கும் வருமா கோபம் :)

சிம்பாலிக்கா  இப்படியும் சொல்லலாமா :)
              ''துபாய்க்கு இப்போதான் முதல் முறையா வந்திருக்கே ,அந்த ஹோட்டல் ஓனர் மதுரைக் காரர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
              '' ஹோட்டலுக்கு  TN 59ன்னு பெயரை வைத்திருக்காரே !''

பேச்சு மட்டும் போனால் போதுமா :)
           ''மூணு  மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''

          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

ஒவ்வாமை புகுந்தா உடம்புக்கும் ஆகாதே :)
          ''அலர்ஜிங்கிற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இரத்தம் கொதிக்குது,டாக்டர் !''
           ''அலர்ஜியே  அலர்ஜி ஆகுதா ,ஏன் !''
          ''ஒவ்வாமையை ஏன் அலர்ஜின்னு மரியாதையா சொல்லணும் ?''

பூவுக்கும் வருமா கோபம் :)
நிஷகந்திப் பூவே ...
என்னவள் உன்னை சூடிக் கொள்ளவில்லை என்ற கோபமா ...
நடுஇரவில் மலர்ந்து விடிவதற்குள் வாடி விடுகிறாயே !

38 comments:

 1. ஹாய் ஜீ, வணக்கம் வணக்கம் :) :)

  ReplyDelete
  Replies
  1. நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் ....பாடலை நினைவுக்கு வருதே ஜி :)

   Delete
 2. அலர்ஜி என்ற வார்த்தையே அலர்ஜியா? ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. நமக்கு போட்டியா கில்லர்ஜி இருக்கலாம்,அலர்ஜி இருக்கக் கூடாதே :)

   Delete
 3. நிஷகந்திப் பூவா? புதுசா இருக்கே :) ( எனக்கு )

  அந்தக் கவிதை செம ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. கூகுளில் டைப்பித்து பாருங்க ஜி :)

   Delete
 4. எங்க ஜீ உங்க தமன்னாவ காணோம்..??

  ReplyDelete
  Replies
  1. 'தம'ன்னாவை இணைக்கும் முன்பே, தூக்கம் கண்ணைத் தழுவி விடுகிறதே ஜி :)

   Delete
 5. வணக்கம்
  ஜி

  கோட்டல் காரன் தேசப்பற்றுஅதிகம்

  டாக்கடர் சம்பாரிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று.

  இரசித்து மகிழ்ந்தேன் ஜி த.ம2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மாவட்டப் பற்று என்று சொல்லுங்க :)

   செத்த பிணத்துக்கு வைத்தியம் செய்யும் டாக்டர்களும் இருக்கிறார்களே :)

   Delete
 6. அடடே.... நிஜமாவே இப்படி ஒரு ஹோட்டல் பெயர் இருக்கா?

  மருத்துவ வியாபாரி?

  அதானே? பகவான்ஜிக்கே சந்தேகமா? கில்லர்ஜியைக் கேட்டுப் பார்க்கலாம்!

  அச்சச்சோ....

  ReplyDelete
  Replies
  1. அலர்ஜியை அலருங்கஜி'னு சொல்லலாமா ? ஸ்ரீராம் ஜி

   Delete
  2. ஹா.... ஹா... ஹா... சொல்லலாம் ஜி!

   Delete
  3. சிங்கப்பூரில் இருப்பதாக அறிகிறேன் :)

   பல பேரும்அப்படித்தான் ஆகிவிட்டார்கள் :)

   அலற வைப்பதால் கில்லர்ஜி சொன்னதே சரி :)

   இதுக்கு நீங்க ஏன் வாடிப் போனீங்க :)

   Delete
  4. அலர்ஜி ஆங்கிலம் ,அதுக்கு தமிழ்லே ... அலருங்கஜி யா :)

   Delete
 7. Replies
  1. அலர்ஜியையுமா :)

   Delete
 8. Replies
  1. நிஷகந்திப் பூவின் அழகையும்தானே :)

   Delete
 9. இன்றைய காலை சிரிப்புடன் தொடங்குகிறது நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய சிரிப்பு, என்றும் தங்கட்டும் ஜி :)

   Delete
 10. அலர்ஜியே உங்களைக் கண்டு ஓடிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. அலர்ஜிக்கே அலர்ஜியா நான் :)

   Delete
 11. அடிமைகளுக்கு வராத கோபம் பூவிற்கதகாவது வருவது சந்தோசம்.....

  ReplyDelete
  Replies
  1. கோபம் வந்தால் அவன் ஏன் அடிமையாக இருக்கப் போகிறான் :)

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. /// ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''//

  ஹா ஹா ஹா:).

  //
  பூவுக்கும் வருமா கோபம் :)//
  இதனைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்ச ஒரு பாடல் வசனம் நினைவு வந்து விட்டது... “பூவும் புயலை எதிர்த்து நிற்கும்”... என்ன பாடல் எனத் தெரியவில்லை.

  //நிஷகந்திப் பூவே ...//
  சத்தியமாச் சொல்லுங்கோ.. இது பகவான் ஜீ வச்ச பெயர்தானே?:)

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,பிணத்துக்கும் வைத்தியம் பார்ப்பேன்னு சொல்லாமல் போனாரே :)

   படம் இருக்கட்டும் , இந்த வசனத்தையே இப்போதான் கேள்விப் படுகிறேன் :)

   உண்மையான பெயர் வேறு இருக்கா :)

   yen

   Delete
 14. மதுரைக்காரர்களே வித்தியாசமானவர்கள்தானே
  அப்ப மூச்சை நிறுத்தச் சொல்ல வேண்டியதுதானே
  மரியாதையாகச் சொல்லாமல் அதென்ன ஆமை
  நிஷாகந்திப் பூவுக்கு பிரம்ம கமலம் என்னும் பெயரும் உண்டு என் வீட்டுச் செடியில் ஒரே ஒரு பூதான் இதுவரை பூத்திருக்கிறது தலையில் வைக்கவா

  ReplyDelete
  Replies
  1. அதுவும் வைகை வடகரையில் இருப்பவர்கள் ...ஹிஹி ,நானும் :)
   காசு பார்க்க வேண்டாமா :)
   ஆமை புகுந்த சொல்லும் உருப்படாதோ :)
   அதிசயமாக பூத்த பூவை வைக்க வேண்டியவருக்கே வைக்கலாமே :)

   Delete
 15. அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. நிஷகந்திப் பூ...பூவின் பெயரே நன்றுதானே :)

   Delete
 16. T N 58ன்னு பக்கத்து ஹோட்டலுக்கு பெயர் வைத்திருக்கிறாரே... வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறதா...?!

  பேச்சு மூச்சு கப்ன்னு நின்னாத்தானா...? அய்யோ... அய்யோ...!

  அலர்ஜியா... அதுக்கு போயி எ இப்பூடி அலர்றீங்க...?!

  ராத்திரியில் பூத்திருக்கும் ராஜசுகம்தான் இந்த நிஷா காந்தியோ...?!

  த.ம. 16

  ReplyDelete
  Replies
  1. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்த நீங்கள் விவரமனவர்தான் :)

   தலைகாணியை வைத்து அமுக்கினது யாரோ :)

   நெருப்புன்னா சுடவா போவுது :)

   ராஜசுகம் தரும்னா படுக்கைக்கு வந்திருக்குமே :)

   Delete
 17. அட! துபாயில் இப்படியொரு ஹோட்டலா...

  அனைத்தும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. பிழைக்கத் தெரிந்த மதுரக்காரன் தானே :)

   Delete