2 June 2017

பணம்தான் மனதுக்கு பலம் தருமோ :)

 இதுக்கு மட்டும் டூப்பு போடணுமாம் :)            
              ''ஹீரோ இன்னைக்கு வர முடியாது  நாளைக்கு சூட்டிங்குக்கு வர்றேன்னு ஏன் சொல்றார் ?''
               ''இன்னைக்கு ஸ்டண்ட் சீன் ,நாளைக்கு எடுக்கப் போறது முதலிரவு சீனாச்சே !''

மாற்றம் நல்லாவே தெரியுதே :)             
                 ''நம்ம தலைவர் ஆளும் கட்சிக்கு  தாவப் போறார் போலிருக்கா ,ஏன் ?'' 

                ''பெட்ரோல் விலைஏற்றம்னு  சொல்லிக்கிட்டு இருந்தவர் ,விலைமாற்றம்னு  சொல்லத் தொடக்கி விட்டாரே !''

வயசுப் பொண்ணைக் கடையில் தனியாய் விடலாமா :)
            ''நான் பஜாருக்கு போய் சரக்கு வாங்கப் போறேன் ,கடையைப் பார்த்துக்கோன்னு சொன்னா , ஏன் முடியாதுன்னு சொல்றே ?''
           ''நேற்று ஒரு காலிப் பய வந்து லிப் 'லாக் 'கிடைக்குமான்னு கேட்கிறாம்பா !''

பணம் தான் மனதுக்கு பலம் தருமோ :)
         ''அவர் ,ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் போனதில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்காரா ,எப்படி ?''
          ''ஷேர்  ஆட்டோவில்கூட ஏறமாட்டேன்னு  சொல்றாரே  !''

வாத்தியார் ரொம்ப விவரம்தான் :)
              ''நீங்க வாத்தியாரா இருக்கிற பள்ளியில்தான் , மாநிலஅளவில் முதல் இடம் பிடித்த  உங்க பொண்ணும் படிக்குதா ?''
              ''இல்லே ,வேற ஸ்கூல் ! ''
              ''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லித் தர்றதுக்கு உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !''

தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?
தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461962செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

35 comments:

 1. முதலிரவு சீனுக்கு டூப் போட்டால் தெய்வகுற்றமாகி விடுமோ.. ?

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக ,இவர் அல்வாவை டூபுக்கு கொடுப்பாரா :)

   Delete
 2. ஹாய் ஹல்லோ வணக்கம் ஜீ :)

  எப்புடி இருக்கீங்க?

  ReplyDelete
  Replies
  1. நைட்டு ரொம்ப டயர்ட் ,அதான் கொர்கொர்:)

   Delete
 3. இதுக்கு மட்டும் டூப்பு - செம டாப்பு :)

  ReplyDelete
  Replies
  1. நடிகர்கள் இப்படித் தானே இருக்கிறார்கள் :)

   Delete
 4. அரசியல்வாதி ஜோக் - ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. ஜால்ரா அடிக்கத் தொடங்கி விட்டாரே :)

   Delete
 5. முதலிரவுக்கு டூப்
  சண்டைக்காட்சிக்கு தானே என்றால்
  எந்தக் கதா நாயகன்தான் ஒப்புக் கொள்வார்
  அருமையான நகைச்சுவைத் துணுக்கள் அனைத்தும்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. இந்திய புரூஸ் லீ ஆக விருப்பம் இல்லை ,காதல் மன்னன் ஆகத்தான் ஆசை :)

   Delete
 6. வணக்கம் ஜி !

  எதெதுக்கு எல்லாம் டூப் போடணும் என்று ஒரு பதிவு போடுங்க ஜி கலக்கலா இருக்கும்
  எல்லாம் இரசிக்கும் படி இருந்தாலும் ஒரு துளி தூக்கம் நெஞ்சம் தொட்டது நன்றி
  வாழ்க நலம்
  தமன்னா வோட் மேலும் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா ,யோசிக்கணும் ஜி :)
   என்னதான் இருந்தாலும் கணவன்மார்களுக்கு ,தாயின் பொறுமை இல்லைதானே :)

   Delete
 7. Replies
  1. ஏதாவது வம்புக்கு சொல்லுங்க ஜி:)

   Delete
 8. Replies
  1. ஹீரோவுக்கு சுயநலம் அதிகம்தானே ஜி :)

   Delete
 9. .எழுத்தில் மாற்றம் கட்சி மாற்றம் ஏமாற்றம்!

  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு ஏற்றம் ,நமக்குத்தான் ஏமாற்றம் :)

   Delete
 10. Replies
  1. கடையில் கிடைக்காத லிப்'லாக்'கையுமா :)

   Delete
 11. ஸ்டண்ட் சீனுக்கு டூப்தானே போட்டு எடுங்க... நாளைக்கு முதலிரவு சீனுக்கு தத்ரூபமா ஹீரோவானநானே நடிச்சுக் கொடுக்கிறேன்... சரியில்லைன்னா ரீடேக் வேணுமுன்னா எடுத்துக்கலாம்...!

  மாற்றம்தானே மானிடத் தத்துவம்... இதில் நான் மட்டும் விதிவிலக்காக முடியுமா...!

  அந்தக் காலிப் பயல்ட்ட ‘லாக்அப்’ காலியாத்தா இருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே...!

  இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க...! நான் போய் ஷேர்னேன்...!

  இனிமே இதுமாதிரி பேசக்கூடாதுன்னுதா ‘ரேங்’ எடுத்தாச்சில்ல...!

  தூங்காதே தம்பி தூங்காதே... நீயும்... சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...!

  த.ம. 13  ReplyDelete
  Replies
  1. நோக்காம நொங்கு தின்ன ஹீரோ ,கரணம் தப்பினால் மரணம் சீனில் நடிக்க மட்டும் டூப்பா :)

   கொள்கையாவது கத்தரிக்காயாவது :)

   தம்ஸ்அப்புன்னு விரலை தூக்கி காட்டி , லிப் லாக்கை வாங்கிட்டேன் என்கிறானே :)

   fb யிலும் ஷேர் செய்ய மாட்டாரோ :)

   இருந்தாலும் மார்க் போகலையே :)

   இருபத்து நாலு மணி நேரமும் தூங்காம இருக்க முடியுமா :)

   Delete
 12. எல்லா நடிகர்களும் இப்படித்தானா

  ReplyDelete
  Replies
  1. மார்க்கெட்டைப் பிடித்த பின் இப்படித்தான் :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. வாத்தியார் ரொம்ப விவரமான ஆள் தான்!

  ReplyDelete
  Replies
  1. உங்க ஸ்கூல் வேண்டாம்னு சொன்ன மகள், இன்னும் ரொம்ப விவரம் :)

   Delete
 15. Replies
  1. உங்க கமெண்ட்...வெற்றிலையை போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி என்று பாடத் தோன்றுகிறது :)

   Delete
 16. சீன் எடுக்கும் நாளை மாற்றினால் ......?
  பிழைக்கத் தெரிந்தவர்
  லாக் அப் வேண்டுமா என்று கேட்டிருக்கலாமே
  ஷேர் என்னும் வார்த்தையே அலர்ஜியாகி விட்டது
  அதனால்தானே வேற ஸ்கூல்
  குழந்தௌஇக்கும் தெரிந்தது

  ReplyDelete
  Replies
  1. அந்த சீன் எடுக்கும் நாளில் தான் வருவார் :)
   மக்களை மடையன் ஆக்குபவரும் கூட :)
   பொண்ணு அவ்வளவு விவரமில்லை :)
   இப்போ அதுதானே ஹிட் :)
   மோசமான வாத்தியார் ,விவரமான அப்பாவோ:)
   அதான் புனைகை செய்யுதோ :)

   Delete
 17. குழந்தை ஜோக்கா அது ? கவிதையாக அல்லவா உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஒரு முயற்சிதான் ஜி :)

   Delete
 18. 1. ஹஹஹஹ்

  ஷேரையும் ரசித்தோம் ...

  அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஹீரோ இப்படி வில்லத் தனம் செய்யலாமா ஜி :)

   Delete