20 June 2017

காதல் வந்தால் மட்டும் ,கவிதை எப்படி:)

கில்லாடிக்கு கில்லாடியோ :)               
             ''கபாலி ,உன் வீட்டிலே கொள்ளை அடிச்சவனைப் பிடிச்சிட்டோம் ..அவனை  ஏன் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம்னு  சொல்றே  ?''
           ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''

அதெல்லாம் அந்த காலம் :)            
            ''ஒலி கேட்டேன்  வழி கொடுத்தேன்   கொலுசு சத்தம்னு  நான் எழுதியது ,ரொம்ப காலத்துக்கு முந்தின்னு  எப்படி கண்டுபிடிச்சே ?''
 
             ''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் உன் காதுலே விழ மாடேங்குதே !'' 

வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா :)
            ''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  போகணும் ?''
                ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே!''

காதல் வந்தால் மட்டும் ,கவிதை எப்படி:)
மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?
இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463881செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

34 comments:

 1. ஹாய் பகவான் ஜீ :) நலமா?

  ReplyDelete
  Replies
  1. நலமே ,நீங்க வர்ற நேரத்துக்கு என்னால் முழித்திருக்க முடியலே ஜி :)

   Delete
 2. கபாலி வீட்லேயே கொள்ளையடிச்சானா..? ரொம்ப பெரிய வீரனா இருப்பான் போலியே? ( என்னை மாதிரி ) :)

  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் றஜீவன் ஆச்சே ,ராஜீவ் என்றால் கூட போபர்ஸ் கொள்ளை ஞாபகத்துக்கு வரும் :)

   Delete
 3. கவிதை கவிதையா எழுதித் தள்ளுவதுதானே காதலின் அடையாளங்களில் ஒன்று. அதில் என்ன ஜீ டவுட்டு..???

  ReplyDelete
  Replies
  1. தோல்வி அடைந்தால் கவிதையுடன் தாடியும் வளருமே ஜி :)

   Delete
 4. அட, ஜெயிலுக்குப் போயிட்டு வந்தப்புறம்தான் பொண்ணைக் கொடுக்கறது...! எக்ஸ்டரா பெருமை.

  வயசானப்புறம் காதலும் காதாலும் பயனிலை!

  அந்தப்புரத்தில் பிரச்னைக்காக அடுத்த நாட்டுடன் சண்டையா? கொடுமை!

  கவிதை ஈஸி!

  ReplyDelete
  Replies
  1. சும்மாவா ,நாற்பது முறை ஜெயில் கண்டு மீண்டவராச்சே :)

   கண்ணால் மட்டும் நிறைய பலனிருக்குமா :)

   தீவிரமான சண்டையா இருக்கும் போலிருக்கே :)

   தாலி கட்டி ஜோலி முடிந்தால் தொடருமா கவிதை :)

   Delete
 5. கபாலிக்கு கேடுகாலம்தானோ....

  ReplyDelete
  Replies
  1. அவரென்ன அரசியலுக்கு வர்றேன்னா சொன்னார் :)

   Delete
 6. பலே... கபாலி...!

  அது அந்தக் காலம்...!

  அப்ப... செத்து விடுவது என்று முடிவே செய்து விட்டீர்களா...?!

  ‘உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது... அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....!’ கவிதை... கவிதை...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. திறமை அறிந்து பொண்ணைக் கொடுக்கிறாரே :)

   இப்போ கொலுசாலே அடித்தாலும் உறைக்காதோ :)

   சண்டையில் செத்தால் வீரமரணம் தானே :)

   முட்டின வார்த்தை ஆளையும் தள்ளி விட்டுடாம ,கவனமா இருங்கோ :)

   Delete
 7. // ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச் சகிக்கலையே!''//

  ‘அந்தப்புர தானம்’ பண்ணிடலாமே!!!

  ReplyDelete
  Replies
  1. சண்டையில் தோற்றால் அதுதானே நடக்கப் போகிறது :)

   Delete
 8. Replies
  1. சக்களத்தி சண்டையை ரசிக்க முடிந்ததா :)

   Delete
 9. சக்காளத்தி சண்டை அந்தப்புரத்திலயும் இருக்கோ!

  ReplyDelete
  Replies
  1. இல்லாவிட்டால்தான் அதிசயம் :)

   Delete
 10. கபாலி ஒப்புதல் தந்தால்தான் ஜெயில் கூட்டுக்களவாணித்தனம்
  கொலுசு சப்தம் மட்டுமே கேட்கும்
  அந்தச் சண்டையிலாவது வெற்றியோ தோல்வியோ கிடைக்கும் சக்களத்தி சண்டையில் இவர் மண்டைதான் உருளும்
  காதலே கவிதைக்களம் அல்லவா

  ReplyDelete
  Replies
  1. நல்ல சம்பந்தமாச்சே ,கபாலி விட மாட்டாரே :)
   என்னா வயசு அப்படி :)
   உள்குத்தில் நொந்து விட்டாரே அரசர் :)
   களம் ,கண்ணீர் குளம் ஆகாமல் போனால் சரிதான் :)

   Delete
 11. வணக்கம்
  கபாலிக்கு நல்ல மனசு வாழ்க... மற்றவைகள் அனைத்தும் அருமை ஜி த.ம10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பாத்திரம் அறிந்து பிச்சை இடுவார் கபாலி :)

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. பகவான் ஜீ லிங் எங்ங்ங்ங்ங்கேஏஏஏஏ... வெப் வேஷனும் ஓபின் ஆகுதில்ல கர்ர்ர்ர்ர்ர்:)...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஓபன் ஆவுதே ,லிங்க் தேவையா :)

   Delete
 14. கபாலிக்கே கபாலியா!!! ஹ்ஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பொருத்தமான உறவுதானே ஜி :)

   Delete
 15. Replies
  1. இது செல் வழி சிரிப்பா ஜெபா ஜி :)

   Delete
 16. அந்தப்புரத்தில் குடுமிபிடி சண்டையா ? ஆளை விடு சாமீ

  ReplyDelete
  Replies
  1. ஏன் ,இது முடியாத போரா :)

   Delete
  2. யாராலும் தீர்த்து வைக்க முடியாத அக்கப்போர் அல்லவா !

   Delete
 17. இரசனை சகோதரா தொடருங்கள்.
  தமிழ் மணம் - 15
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. ஒலி கேட்டேன் வழி கொடுத்தேன் கொலுசு சத்தமும் அருமைதானே :)

   Delete