21 June 2017

மனைவியும் மனோரஞ்சிதப் பூவின் சாதிதான் :)

தன்மானத்தை இழக்க யாருக்காவது மனம் வருமா :)
            ''இலவச காலணிக் காப்பகம்னு போர்டுலே எழுதியிருக்கே ,காசை எதுக்கு வசூல் பண்ணுறீங்க ?''
             ''உங்க காலணி இலவசமா வந்ததுன்னு சொல்லுங்க ,காசே வேண்டாம் !''

பெண்டாட்டி கைமணம் புரிந்தது :)
               ''நாலு  நாள் ரயில் பயணம் போயிட்டு வந்த  புருஷன்  ,உன்கிட்டே அதிகப் பிரியமா இருக்காரா ,ஏன்?''
       ''ரயில்வே கேண்டீனோட டேஸ்ட் அப்படி !''

இந்த பையன் பரீச்சையிலும்  'முட்டை' தான் எடுப்பான் :)
          ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ? முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து நாமதான் சாப்பிடக் கொடுத்து விடுகிறோமே !''
நாய் வாலை நறுக்கி ,நாய்க்கே சூப்பு வைப்பதா :)
              '' கப்புலே வைச்ச 'சூப்'பை  நக்கி நக்கி குடிக்கிற அந்த நாயைப் பார்த்தா பாவமா இருக்கா ,ஏன் ?''
               ''அது குடிக்கிறது,அதோட வாலை நறுக்கி வச்ச 'சூப்'பையாச்சே !''

மனைவியும் மனோரஞ்சிதப் பூவின் சாதிதான் :)
காதலி மனைவியானதும் புரிந்தது ...
அவள் மனோரஞ்சிதப்பூவின் ஜாதியென்று !
தள்ளி நின்று ரசித்தபோது ...மணந்தாள் !
மணமான நெருக்கத்தில் தந்தாள் ...
தலைச்சுற்றலையும் மயக்கத்தையும் !

இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464025செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

37 comments:

 1. இண்டைக்கு மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஉ.. பூஸோ.. கொக்கோஒ?:)

  ReplyDelete
  Replies
  1. நான் வந்தால் பகவான் ஜீ கரீட்டா அன்று பார்த்து ஸ்லீப் ஆகிடுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  2. கர்ர் ர் போயே போச் ...கமெண்ட் எங்கே :)

   Delete
 2. பொண்டாட்டி சமையல் அவ்வளவு மோசமா ?

  ReplyDelete
  Replies
  1. ரயிலுக்கு இது பரவாயில்லை :)

   Delete
 3. ஹாய் பகவான் ஜீ... ஹவ் ஆர் யூ? :)

  ReplyDelete
  Replies
  1. உங்க நலம் விசாரிப்பே என்னை துயில் எழுப்பி விட்டதே ஜி :)

   Delete
 4. தலைசுற்றல், வாந்தி மயக்கம் எல்லாம் அவங்களுக்குத்தானே வரும் ஜீ ? :) :)

  நமக்கில்லையே..!

  ReplyDelete
  Replies
  1. நெருக்கத்தில் எல்லாருக்கும் வரும் ஜி :)

   Delete
 5. நாய் வால் சூப் ஆஆஆஆஆ..??

  ஹோஹ்ஹ்ஹ் வயித்துக்க என்னமோ செய்யிது? இருங்க ஜீ பாத் ரூம் போயிட்டு வாறன் :) :)

  ReplyDelete
  Replies
  1. பழமொழி கேள்விபட்டதில்லையா ஜி :)

   Delete
 6. ஜீ, உங்க தமன்னா லிங் எங்கே..? :)

  ReplyDelete
  Replies
  1. செல் வழி பதில் இது ,சிஷ்டமில் காலையில் வருகிறேன் ஜி :)

   Delete
 7. வணக்கம் பகவானே !

  இலவசக் காலணி இதயம் தொட்டது அருமை ஜி
  தொடர வாழ்த்துகள்
  தமன்னா +1

  ReplyDelete
  Replies
  1. திருட்டுக் காலணி என்றாலும் எவன் ஒத்துக்குவான் :)

   Delete
 8. ரசித்தேன் ஜி. ஆனால் நாய் ஜோக்கை ரசிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதை அந்த நாயே ருசிக்கட்டும் ஜி :)

   Delete
 9. இலவசமுன்னு சொல்லே என்னோட அகராதியில இல்ல... இது ரொம்ப அகராதியா தெரியலாம்... விலையில்லா காலணின்னு வேணுமுன்னா சொல்லுங்க... ஒத்துக்கிறேன்...!

  ஒரே டால்தான்... டால் அடிக்கிது...!

  கூமுட்டையா இருக்கியே...!

  நாய்க்கும் வாலை அளந்துதான் வச்சிருக்காங்களோ...?!

  மயக்கம் எனது தாயகம்...!

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,விலை வைக்கும் அளவுக்கு தரமில்லாயே :)

   டல் அடிக்குது எனலாமே :)

   நல்ல முட்டையை சாப்பிடவில்லையோ :)

   அது குடிக்கிற சூப்புக்கு அது போதும் :)

   மௌனம் தாய்மொழியா :)

   Delete
 10. Replies
  1. மனோரஞ்சிதப் பூவை தள்ளி நின்றே ரசிக்கலாமோ :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தேன், மனோரஞ்சிதத்தை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. போதிய இடைவெளியில் ரசிப்பதே சுகம்தானே :)

   Delete
 12. மாமாவை இன்னிக்கே ட்ரெயின் ஏத்தி தூரமா எங்காவது அனுப்பி வச்சுடுறேன்...

  ReplyDelete
  Replies
  1. அவர் பாவம் ,கிடைப்பதே சுகமென்று இருக்கிறார் ,ரயிலேற்றி விடுறீங்களா :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. இங்கு விளம்பரம் வேண்டாம் விஜய் :)

   Delete
 14. வணக்கம்
  ஜி
  எல்லாம் அருமை இரசித்தேன் ஜி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டி கைமணம் புரிந்ததா ஜி :)

   Delete
 15. நல்லாத்தான் இருக்கு நாய் வால் சூப்

  ReplyDelete
  Replies
  1. என்னதான் நல்லாயிருந்தாலும் அதை நாயே குடிக்கட்டும் ஜி :)

   Delete
 16. பூவிலும் சாதி இருக்கிறதே.....இதைச் சொன்னால் நீங்கள் கோபிப்பீர்களோ.......????மனதில் பட்டது....

  ReplyDelete
  Replies
  1. பெயர்தான் ஜாதி மல்லி ,பூவிலே எது ஜாதி :)

   Delete
 17. ''அது குடிக்கிறது,அதோட வாலை நறுக்கி வச்ச 'சூப்'பையாச்சே !''//

  இனி சூப் வேண்டாமே!

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் எங்கே சூப் ,வாலை ஓட்ட நறுக்கியாச்சே :)

   Delete
 18. எல்லாம் ரசித்தோம் ஆனால் நாய் வாலை ரசிக்க முடியலையே ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நாய்ப் பாசம் உங்களுக்கு அதிகம் போலிருக்கே :)

   Delete