25 June 2017

நடிகை என்றாலே இப்படித்தான் தோன்றுமோ :)

              ''அழகாத்தானே இருக்கு இந்த படம் ?எதுக்கு பிரசுரித்த பத்திரிக்கை மேல் அந்த நடிகை வழக்கு போட்டாராம் ?''
               ''கணவர்கள் மற்றும் குழந்தையுடன் ரம்பான்னு  தலைப்பு போட்டால் கோபம் வரத்தானே செய்யும் ?''
         (கனவு நாயகியை நீண்ட நாள் கழித்து பார்த்ததால் உண்டான மொக்கை இது ,உண்மையில்லை :)

சொன்னால் மட்டும் போதுமா :)          
            ''நீங்களே டாக்டர் ,காய்ச்சல் வந்தா எதுக்கு அடுத்த  டாக்டரிடம் போறீங்க ?''
             ''செல்ப் மெடிஸின் சாப்பிடுறது தப்பாச்சே !''

முறைப் பொண்ணோட லட்சணம்  அப்படி :)
        ''ஓடிப் போற நம்ம பின்னாலே யாரோ தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கே !''
       '' முறைப் பையன்தான் ,நீங்க என் கழுத்துலே  மூணு முடிச்சு போடாம  ஓடிடக் கூடாதுன்னு பின்னாடியே வர்றார்  !''

பயணிகளுக்கு இது வசதிதானே :)
            ''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
           ''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''
           ''அது மட்டுமா ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !''

ஹீரோக்கள் கூட முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் :)
படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும்  ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !

இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464442 செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

38 comments:

 1. என்ன இருந்தாலும் "கள்" போட்டது தப்புதானே...

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் என்று போட்டிருந்தால் தப்பில்லை :)

   Delete
 2. விடிகாலை வணக்கம் பகவான் ஜீ :) :)

  ரம்பா உங்களுக்கும் கனவு நாயகியா? சரியாப் போய்ச்சு :) :)

  தொலைக்காட்சியில், ரியாலிட்டி ஷோக்களில் அவ பேசும் அழகு அலாதியானது. ரொம்ப மென்மையா பேசுவாங்க..!

  கில்லர்ஜி சொன்னது போல ‘கள்’ போட்டது தப்புத்தான் :)

  ReplyDelete
  Replies
  1. சாரி ,உங்க கனவு நாயகினு தெரியாம போச்சே :)

   Delete
 3. Self மெடிசின் சாப்பிட மாட்டாரா? :)

  சில ஓட்டல் முதலாளிமார் பக்கத்து ஓட்டலில் போய் சாப்பிடுவது போலத்தானே ஜீ ?

  ReplyDelete
  Replies
  1. அதுதானே ஆரோக்கியம் :)

   Delete
 4. '' முறைப் பையன்தான்...//

  புத்திசாலிப் பையன்!

  ReplyDelete
  Replies
  1. கழிச்சுக் கட்டணும் என்பதில் குறியா இருக்கானே :)

   Delete
 5. ஹா... ஹா... ஹா...

  வீடியோ கோச் பஸ் சுகமான கற்பனை!

  ReplyDelete
  Replies
  1. இது நடக்காதா என்ன :)

   Delete
 6. Replies
  1. முறைப் பொண்ணை ரசிக்க முடியுதா :)

   Delete
 7. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...!

  தன் கையே தன் கைக்கு உதவி செய்ய முடியலையே...!

  நீங்க... என் கழுத்தில தாலி கட்டலைன்னா... முறைப்பையனுக்கு வாழ்க்கையே இல்லையாம்... நீங்கதான் அவன வாழவைத்த தெய்வமாம்... நன்றி சொல்ல ஓடி வர்றான்...!

  பஸ்... பஞ்சராகிக் கிடக்கு... நகரவேயில்லை...!

  வில்வித்தை தெரியாத வில்லாதி வில்லன்...!

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. இங்கே பிரிந்தவர் யாரும் சேரவேயில்லையே :)

   தன் முதுகு தனக்கு தெரியாது என்பது சரிதானே :)

   இப்படியும் ஒரு கண் கண்ட தெய்வமா :)

   இரண்டு ஷோ போட்டு விட வேண்டியது தான் :)

   அது தெரியணும்னு அவசியம் இல்லையே :)

   Delete
 8. பின்ன..ர்கள் என்று சேர்த்து போட்டால் வரத்தானே செய்யும்.....

  ReplyDelete
  Replies
  1. கழட்டி விட்ட பன்மை வராதே :)

   Delete
 9. அனைத்தையும் ரசித்தேன், நம்பியாரை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத வில்லன் ஆச்சே :)

   Delete
 10. உங்கள் கனவு நாயகி:) எதுக்காக கணவனைப் பிரிஞ்சார் பகவான் ஜீ?.. கணவர் பார்க்க நல்லாத்தானே.. அப்பாவிபோல இருக்கிறார்?:)..

  ReplyDelete
  Replies
  1. என் கனவு நாயகிக்கு இன்னும் கல்யாணமே நடக்கலையே :)

   இப்போ எனக்கொரு சந்தேகம் ,எனக்கு மட்டும் ஏன் தேம்ஸ் நதியோர ஓட்டு ஒண்ணே ஒண்ணுதான் விழுது :)

   Delete
 11. அட்டே, ரம்பா உங்க ஆளா!

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஆளுன்னு சொல்லுங்க ,கனவு நாயகி ஒருவருக்கு மட்டுமல்ல :)

   Delete
 12. அட்டே, ரம்பா உங்க ஆளா!

  ReplyDelete
  Replies
  1. என் விளக்கம் புரியவில்லையா :)

   Delete
 13. ரசித்தேன்... Jiiiiiiiiiiiiiiiiiii.....................

  ReplyDelete
  Replies
  1. அட சும்மா சொல்லுங்க ஜி ,ரம்பாவையும் தானே :)

   Delete
 14. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. முறைப் பொண்ணு ரொம்ப தெளிவுதானே :)

   Delete
 15. கனவு நாயகிக்கு திருமணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்களா உண்மைச் செய்தி சொல்லவும்
  எங்களுக்கு நாங்களே மருத்துவம் பார்ப்பதில்லை நம்பிக்கை யில்லை
  மூணுமுடிச்சு போட்டதும் ஓடிவிடுவார்
  இடைவேளையில் கண்டக்டர் காசுபார்க்கிறார்
  சினிமா ஹீரோக்கள் சிலர் நிஜவாழ்வில் வில்லன்களாக இருக்கின்றனரே  ReplyDelete
  Replies
  1. உண்மையில் இருக்கலாம் ,ஆனால் கனவு நாயகிக்கு தாலி பாக்கியமில்லை :)
   நோயாளிகள் ஜாக்கிரதை :)
   சனியன் விட்டதென்றா :)
   நல்ல வழியில் தானே :)
   உதாரணம் சொன்னா வம்பாகிடும் :)

   Delete
 16. அனைத்தும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ரம்பா எப்படி :)

   Delete
 17. கள் என்றாலே தகராறுதான்

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் :)

   Delete
 18. ஹஹஹ.....வீடியோ கோச் நல்லாருக்கே அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. டூரிங் தியேட்டரில் கடலை மிட்டாய் ,முறுக்கு சாப்பிட்ட மாதிரி வருமா ஜி :)

   Delete
 19. அட! ரம்பா இப்பவும் அழகாத்தான் இருக்காங்க இல்லையா! தாயானதால்!!! பிரிந்துவிட்டு சேர்ந்தும் விட்டார்கள்!!

  வீடியோ கோச் அழகா இருக்கே!!

  அனைத்தும் ரசித்தோம் ஜி!!

  ReplyDelete
 20. ரம்பா பிரிந்ததும் தெரியலே ,சேர்ந்ததும் தெரியலே !அழகா இருக்கிறது மட்டும்தான் தெரியுது ஜி :)

  ReplyDelete