26 June 2017

மருமகனால் முடிந்ததும்,முடியாததும் :)

டார்ஜான் கிளாமர் படமாச்சே :)                         
            ''வனமகன்  படத்தைப் பார்த்து ஏமாந்து போயிட்டீங்களா ,ஏன் ?''
           ''டார்ஜான் படத்தோட தமிழ் டப்பிங்னு நினைச்சு போனேன் !''
இதுக்கு சீல்  வைக்கிறது  யாரு :)               
               ''ரேசன் கடைக்கு  வந்து தராசையே பார்க்காத மாதிரி  உற்று உற்றுப்  பார்க்கிறீங்களே ,ஏன் ?''
                ''ஐந்து கிலோ சீனிக்கு ஐந்தரைக் கிலோ போடுறீங்க ,அதை வெளியே எடைப் போட்டா நாலரைக் கிலோதானே இருக்கு ?''

மருமகனால் முடிந்ததும்,முடியாததும் :)
              ''நான் செய்றது எல்லாமே தலைக்கீழா இருக்கா ,என்ன மாமா சொல்றீங்க ?''
            '' என் பொண்ணு முழுகாம இருந்தா பரவாயில்லை,போட்ட நகைங்க எல்லாம் அடகு வச்சு  முழுகிப் போச்சுன்னு சொல்றீங்களே !''
மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்:)
        ''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
         ''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''

காலம் செய்த கோலமடி :)
ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !


இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464526செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

38 comments:

 1. Replies
  1. இரவு வணக்கம் ஜி :)

   Delete
 2. மருமகன் இப்படி இருக்காரே..? என்ன ஜீ ?

  ReplyDelete
  Replies
  1. குடிகார மட்டையா இருப்பாரோ :)

   Delete
 3. இந்த செல்போனால் தொலைக்காட்சி பார்ப்பதே நின்று போச்ச்ச் :) :)

  ReplyDelete
  Replies
  1. அதுவும் உண்மைதான் :)

   Delete
 4. நல்ல மருமகன்தான்.

  ReplyDelete
  Replies
  1. அடகு வைக்க தாலி மட்டும்தான் பாக்கி :)

   Delete
 5. வனமகன் ரிலீஸ் ஆயாச்சா?

  ரேஷன் அட்ராசிட்டிஸ்!

  சேட்டு மாப்பிள்ளை போல!

  ஸ்மார்ட் வாட்ச் வந்தாச்சே... அதிலேயே செல்போன், வாட்ஸாப் எல்லாம் பார்க்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் பாருங்க,படத்தைத் தூக்கப் போறாங்க :)

   எல்லா கடையும் இப்படித் தானே :)

   அப்படின்னா தாங்கிக்குவாரா :)

   சரித்திரம் திரும்புதா :)

   Delete
 6. //படம்//
  ஒரு பூங்கொடி பூச்சரங்களைச் சுமக்கலாம். சரம் சரமாய்ப் பொன் நகைகளைச் சுமக்கச் செய்த அந்தப் பாவி யார்!?

  ReplyDelete
  Replies
  1. பூங்கொடியே இதைதானே விரும்புது :)

   Delete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. வனமகன் என்னும் பெயரில் சினிமாவா
  தராசினடியில் ஏதாவது கல் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று பார்க்கிறாரா
  தலை கீழாக இருந்தால் பெண் எப்படி முழுகாமல் இருக்க முடியும்
  பேரிலேயே வித் ட்ரா இருக்கே
  எல்லாமே காலம்செய்த கோலம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வந்துள்ளதே :)
   மின் தராசில் அப்படியும் செய்ய முடியாதே :)
   தண்ணீர் இருந்தால் தலை முழுகும் :)
   பண்ணித்தான் ஆகணுமா :)
   கோலம் இன்னும் எப்படியெல்லாம் மாறுமோ :)

   Delete
 9. நல்ல பலசாலி மருமகன்..நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. அதான் நகைகள் மட்டுமே மூழ்குதோ :)

   Delete
 10. டார்ஜான் கிளுகிளுப்பு தேவையா ஜி...?

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு ரணகளத்திலும் கிளு கிளுப்பு தேவைப் படுதே :)

   Delete
 11. எல்லாம் வனவாசம் போக வேண்டியதுதான்...!

  எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்...!

  இனிமே முழுகாமப் பாத்துக்கிறேன்... போடுறத போடுங்க மாமோ...!

  முடியும் என்பார் முடியாது... முடியாது என்பார் முடிந்து விடும்...!

  இனி வாட்ச் மேன் வேலை பார்கக் வேண்டியதுதான்...!

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. காடாறு மாதமா :)

   காசையும் அப்படியே வாங்கிக்குவாங்களா :)

   இன்னும் போடுறதா :)

   இருக்கிற வரைக்கும் தானே முடியும் :)

   எல்லோராலும் முடியாதே :)

   Delete
 12. நகைச்சிவையானாலும் அத்தனையும் சிந்திக்கவும் வைக்கின்றது.

  ReplyDelete
 13. Replies
  1. காலம் போடும் கோலம் அருமைதானே :)

   Delete
 14. 'முழுகாமல் இருக்கும்' ஜோக் உங்கள் சொந்தப்படைப்பு என்பது தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. படைப்பு என்னுடையது தான் ,அதில் வரும் பாத்திரம் நான் அல்ல :)

   Delete
 15. 'முழுகாமல் இருக்கும்' ஜோக் உங்கள் சொந்தப்படைப்பு என்பது தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. நான் நிரந்தரமானவன் மூழ்குவதில்லை :)

   Delete
 16. செல் போனில் டயம் தெரிவதால் ...
  வாட்ச் வாங்குவதே நின்று போனது ! //
  நல்ல நகைச்சுவை சகோதரா.
  தமிழ்மணம் - 12

  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. வாட்ச்தான் நின்று போகும்இப்போ வாட்ச் வாங்குவதே நின்று போச்சே :)

   Delete
 17. காலம் கெட்டுக்கிடக்கு நகையை மாட்டிக்கிட்டு போனா ?

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நகைங்களை பாங்க் லாக்கரில் வைக்கலாம் ,அடமானம் வைத்தா மூழ்கடிப்பது :)

   Delete
 18. Replies
  1. டார்ஜானை , தமிழில் வனமகன் என்று சொல்லலாம்தானே :)

   Delete
 19. அனைத்தையும் ரசித்தோம் ஜி!! வனமகன் நன்றாக இருக்கிறானாமே!

  ReplyDelete
  Replies
  1. வனத்தின் அழகு அவனிடமும் இருக்கத்தானே ஜி :)

   Delete