28 June 2017

மனைவியிடம் 'கடி 'வாங்கினாலும் இப்படியாகக் கூடும் :)

அடிச்சக்கை ,யாரை ஏமாற்றப் பார்க்கிறே :)
               ''உன் வீட்டுக்காரருக்கு பத்து ரோஸ்ட் தோசை வார்த்து தருவதற்குள் 'போதும் போதும்' என்றாகி விடுதுன்னா ,பேசாம  ஊத்தப்பம் ஊற்றித் தர வேண்டியதுதானே ?''
              ''அதுன்னா பன்னிரண்டு சாப்பிடுறாரே !''

கட்டில் காலோட கால்கட்டு :)
              ''உன் வீட்டுக்காரர் காலை ஏன்  கட்டில் காலோட சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்கே ?''

             ''இல்லைன்னா ,அவர் பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு  தூக்கத்தில்  நடந்து போய் விடுகிறாரே !'' 

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?
          ''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''
          ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
             (படத்திலுள்ள பெண்ணுக்கும்  மேற்படி ஜோக்குக்கும் ' மயிரளவு' கூடச் சம்பந்தமில்லை :) 

மனைவியிடம் 'கடி 'வாங்கினாலும் இப்படியாகக் கூடும் :)
         '' ஆயிரம் கொசு கடித்தாலும் கடிக்கிற உணர்வே தெரிய மாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
          ''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் :)
          '' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
          ''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''

இது ஒரு தந்தையின் சுயநலம் மட்டுமில்லை :)
என் ஆதர்ச குருவும் பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகானந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !

இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464725செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

41 comments:

 1. அந்தப்பெண்ணுக்கு தலையில் பூ வைக்கணும்னா... 10 முழம் பத்தாதோ...

  ReplyDelete
  Replies
  1. கூந்தலின் நீளத்துக்கு வைக்க வேண்டுமென்றால் பத்தாதுதான் :)

   Delete
 2. வணக்கம் ஜி !

  இம்முறை கடி கொஞ்சம் கம்மிதான் இருந்தும் பாராட்டுகள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு நல்ல பல்லு பதியுற மாதிரி கடிச்சா போச்சு :)

   Delete
 3. மிகவும் இரசித்தேன்
  முக்கியமாய் கொசுக்கடி செமக்கடி
  பகிர்வுக்கும் தொடரவும்
  நல்வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. கொசு கடிக்காமல் விட்டால் நல்லது ,கடிப்பதே தெரியாவிட்டால் ஆபத்துதானே:)

   Delete
 4. ஆமாமாமாம்.... ஊத்தப்பம் வட்ட அளவில் சிறியதுதானே!!!!


  காலில் முல்லைக்கு கட்டி விட்டால் உடனே மறுபடி படுத்து விடுவாரே!!


  முடியையாவது வெட்டலாம்...


  அடடே... ஆவியாகி விட்டாரோ!!


  பேஸ்ட்டைக் கொஞ்சமாவது மறுபடி உள்ளே அனுப்பலாம்! பேச்சை?


  அச்சச்சோ...

  ReplyDelete
  Replies
  1. பார்க்கத்தான் சிறியது ,இரண்டு தோசை மாவு ஒண்ணுக்கே ஆகுமே :)

   முள்ளையா ?அதுவும் நல்ல ஐடியாதான் :)

   வாயை ஒட்டவா முடியும் :)

   அதுக்கு கொஞ்சநாளாகும் :)

   இதில் ரிவர்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை :)

   கஞ்சிக்கே வழியில்லாதவன் கூட வம்சம் விருத்தி ஆகணும்னே நினைக்கிறானே :)

   Delete
 5. பன்னி ரண்டு சாப்பிடுறாரா...? ராமன் எத்தனை ராமனடி..!

  கால் கட்டு போட்டதையே மறந்திடுறாரே...!

  முடியை அவுத்துப்போட்டு பேயா ஆடுறாளே...!

  பலே ‘பல்’லாடிதான்...!

  ‘காற்றுவெளி’யே வந்தாலே இப்படித்தான்...!

  எப்படி ஆனாலு தந்தையாக இருக்கத்தான் ஆசையோ...?!

  த.ம. 7  ReplyDelete
  Replies
  1. இந்த சாப்பாட்டு ராமனுக்கு ஊத்தப்பம் வார்த்துத் தரவே ஒரு ஆள் வேணும் போலிருக்கே :)

   அதானே இவருக்கெல்லாம் எதுக்கு கல்யாணம் ,பெண்டாட்டி :)

   இப்படியும் பயமுறுத்தலாமா பெண்டாட்டி :)

   கடித்ததே தெரியவில்லை என்றால் நல்லதுதானே :)

   ஓஹோ ,அதையும் சொல்லலாமோ :)

   பேரன் பேத்தி வேணும் ,பயபிள்ள சாமியார் ஆகக்கூடாது :)

   Delete
 6. Replies
  1. ஆளுயர கூந்தலும் அழகுதானே :)

   Delete
 7. //படத்திலுள்ள பெண்ணுக்கும் மேற்படி ஜோக்குக்கும் ' மயிரளவு' கூடச் சம்பந்தமில்லை//

  இருக்கும் .. இருக்கும் ..
  அவ புருஷன்ட்ட கேட்டா தெரியும் :)

  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமோ (அப்பெண்ணுக்குச் சொன்னேன்) :)

  ReplyDelete
  Replies
  1. அவ புருஷனை எங்கே போய் தேடுவது :)

   ருசிக்கும் வேட்கை இருந்தால் வாய்க்கும் எட்டத் தானே செய்யும் (பறிக்கப் பட்ட மாங்காயைச் சொன்னேன் :)

   Delete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. Replies
  1. அலைபாயும் கூந்தலையும் தானே ஜி :)

   Delete
 10. ''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''//

  முடி நீளமா இருந்தா வாயும் நீளமாத்தான் இருக்குமோ என்னவோ!!

  ReplyDelete
  Replies
  1. இதை யாராவது Phd ஆராய்ச்சி செய்து நிரூபித்தால் நல்லது :)

   Delete
 11. ஹாய் பகவான் ஜீ, தாமதத்துக்கு மன்னியுங்கோ..! பேஸ்புக்கில் கொஞ்சம் பிசியாக இருந்துட்டேன். அங்கு BIG BOSS சமாச்சாரம் ஓடிக்கொண்டிருக்கு :) அதில் களமாட வேண்டியதாச்சு ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. BIG BOSS சமாச்சாரம் ரொம்ப இண்டரெஸ்டிங் இருக்கும் போலிருக்கே ஜி :)

   Delete
  2. அது செம மேட்டர் ஜீ. நிறைய ஜோக்ஸ் புரடியூஸ் பண்ணலாம்

   Delete
 12. அனைத்தையும் ரசித்தேன், கால் கட்டை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு மனைவி போட்ட கால் கட்டாச்சே :)

   Delete
 13. அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. உவமைச் சக்கரவர்த்தி சொன்னது உண்மைதானே ஜி :)

   Delete
 14. தலைமுடி அதிகமாக வளர்க்கிறவர்கள் ஆடையை மட்டும் குறைப்பது ஏனோ ?

  ReplyDelete
  Replies
  1. கண் பட்டுவிடுவதைத் தவிர்க்க கவனத்தைத் திசை திருப்புகிறார்களோ :)

   Delete
 15. நகைப்பணி தொடரட்டும் தோழர்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும், தம ஊக்குவிப்புப் பணியைத் தொடருங்கள் தோழரே :)

   Delete
 16. கொசுக்கடி பேஸ்ட் பயமுறுத்தும் 'கடி'

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் சாத்தியம் இல்லாதது 'கடி'தானே:)

   Delete
 17. கொசுக்கடி பேஸ்ட் பயமுறுத்தும் 'கடி'

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒரு பேஸ்ட் கண்டுபிடிக்கப் பட்டால் விற்பனை ஓஹோ என்று ஆகும்தானே :)

   Delete
 18. முடியும் நீளம் வாயும் நீளம் ஹஹஹஹ் கால்கட்டையும் ரசித்தொம் ஜி அனைத்தும் ரசித்தோம் ஜி....

  ReplyDelete
  Replies
  1. கால்கட்டுக்கு இரண்டும் நீளம் என்றால் எப்படி ஒத்துவரும் ஜி :)

   Delete
 19. தமிழ்மண ஓட்டுப் போட க்லிக்கினேன் தமிழ் மணத்துக்கு அழைத்துச் சென்றது அங்கும் பதிவில் க்லிக்கினேன் ஒன்றுமே நடக்கவில்லையே
  வீட்டுக்காரரை ஓட்டலில் சாப்பிடச் சொல்ல வேண்டும் அப்ப்வும் அவ்வளவு சாப்பிடுவாரா
  கொசுகடிக்காமல் இருக்க இப்படியும் வழியா
  அவருக்குத்தான் கால்கட்டு கட்டிலுக்கா
  ஒன்று தெரிந்தது இன்னொன்று எதிர்பார்க்காதது
  சொல்லில் கவனம் தேவை

  ReplyDelete
  Replies
  1. சரி பரவாயில்லை ,தமிழ்மண வாக்கை மறந்து விடுங்கள் :)

   Delete
 20. கணவனை கட்டிப் போட்டதற்கு சொன்ன பதில் பல கோணங்களில் யோசிக்க வைக்கிறது.மிகவும் அருமை சார்

  ReplyDelete
  Replies
  1. உண்மையான கால் கட்டு இதுதானே ஜி :)

   Delete