29 June 2017

மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் :)

இந்த அக்கறை எல்லாவற்றிலும் காட்டணும்:)
                ''தலைவரே ,நாடு முன்னேற ஒரு யோசனை சொல்லுங்க !''
                ''இளைஞர்கள் ,செல்போனை சார்ஜில் போடுற அக்கறையை எல்லா விஷயத்திலும் காட்டினாலே போதும் !''

இது ஜோக்கில்லே ,உண்மையும் கூட  :)            
               ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லக் கூடாது ,சரியா ?''

               ''நீங்க போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூடவா  ,டாக்டர் ?''

மஞ்சள் உதவுது திருமணத்திற்கும் திவாலுக்கும் :)
            '' வியாபாரத்திலே திவால் ஆனவர் ,இப்ப பொண்ணோட கல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
             ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !''
மக்களைக் காப்பதிலும் பூஜ்ஜியம்தானா :)
 ஒவ்வொரு இயற்கை கோரத்தாண்டவமும் சொல்கிறது ...
முன் எச்சரிக்கை நடவடிக்கையில்... 
இன்னும் இந்தியா 'பூஜ்ஜியத்தைக் 'கண்டுபிடித்த 
மிதப்பிலேயே உள்ளது என்பதை !

இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464842செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

38 comments:

 1. வணக்கம் ஜி !

  அருமையா சொன்னீங்க
  என்னது ஒரு ஊசிக்கு ஐம்பதினாயிரமா ஆஆஆஆஆஆஆஆ .............?????????????????????????

  தமன்னா 2

  ReplyDelete
  Replies
  1. ஹார்ட் அட்டாக் ஆனவுடன் முதலில் போடப் படும் ஊசியின் உண்மையான விலைதான் இது :)

   Delete
 2. ஹாய் பகவான் ஜீ. நலமா?

  நாடு முன்னேற - செம ஐடியா ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. செல்லுடன் லேப்டாப்பையும் சேர்த்து கொள்ளலமாமா ஜி :)

   Delete
 3. ஊசியின் விலை ஐம்ப...... ஜீ எனக்கு மயக்கமே வருது :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கே இப்படின்னா நோயாளிக்கு :)

   Delete
 4. நாடு முன்னேறச் சொன்ன ஐடியா அருமை
  முழு சார்ஜ் அளவு கூட வேண்டாம்
  ஒரு கால் சார்ஜ் அக்கறை கொண்டால் கூடப்
  போதும் தானே

  ReplyDelete
  Replies
  1. போதும் போதும் இளைஞர்கள் புரிந்துகொண்டால், ஒருகால் நாடு முன்னேறக்கூடும் :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன். கடைசித் தகவல் நச்!

  ReplyDelete
  Replies
  1. பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டு புரியாமலே இருப்பான் ,இது இந்தியாவுக்கும் பொருந்துமோ :)

   Delete
 6. அரசியல்வாதிகளின் குடும்பச் சொத்துக்களை அரசுடைமையாக்கி அவர்களுக்கு வேண்டிய பொருட்களை ரேசன் கடைகளில் மட்டுமே வாங்கச் செய்தால் நாடு முன்னேற வழிகிடைக்குமா?!

  ஆமாமா...! அடுத்த ஊசி இரண்டு இலட்சம் மட்டும்தான் அதையும் போட்டாத்தான் ஒங்க கணவர் உயிரோடு இருப்பார்...!

  இந்த மஞ்சள் நோட்டீசிக்கு வரும் மொய்விருந்து வரவை என்ன பண்றதுன்னு யோசிக்கிறாராம்...!

  பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு கொண்டு இருப்பான்...!

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. உங்க யோசனையை செயல் படுத்தினால் நாடு வல்லரசு ஆகிடும் :)

   அவர் இருப்பார் ,எனக்கு மயக்கமா வருதே :)

   அடுத்து ஒரு பொண்ணு செலவுக்கு வச்சுக்க வேண்டியதுதான் :)

   அதெப்படி ஜி ,நான் நினைச்ச பாடல் உங்க நினைவுக்கு வந்தது :)

   Delete
 7. Replies
  1. 'பூஜ்ஜியத்தைக் 'கண்டுபிடித்த மிதப்பு ...சரிதானே ஜி :)

   Delete
 8. ஊசிக்கு ஐம்பதாயிரம் சொன்னால் பிறகு மொத்தமும் போயிடுமே...

  ReplyDelete
  Replies
  1. இவரிடம் பணத்தைக் கொட்டி அழுவதை விட ,கட்டாமலே மொத்தமாய் அழுது விடலாம் :)

   Delete
 9. அனைத்தையும் ரசித்தேன். திருமண செலவு மஞ்சள் அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்த காசில் ,ஆடம்பரமாய் வீட்டு நிகழ்ச்சியை செய்யும் இவர்களை மன்னிக்க முடியுமா :)

   Delete
 10. சுடுதண்ணிய ஏத்தி ஊசி போடுவதற்கு அம்பதாயிரம் பில் போடுவதால் நான் ஊசியே போடுவதில்லை....அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதிப்பது பற்றிய இரகசியம் தெரிந்தால் நல்லா..இருக்கும்....

  ReplyDelete
  Replies
  1. நீங்களே வலிப்போக்கன் ,உங்க வலியைப் போக்க எதுக்கு ஊசி:)
   மின்சாரக் கசிவு காரணமாய் கடை எரிந்து விட்டது என்று சொல்பவரிடம் கேளுங்க ,எப்படி சம்பாதிப்பது என்று சொல்லுவார்:)

   Delete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. அக்கறையை எல்லா விஷயத்திலும் காட்டுவதில் நீங்க தான் ஜி முன்னோடி...(!)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குத் தெரியுது ,கட்டிக்கிட்டவளுக்குத் தெரிய மாட்டேங்குதே ஜி :

   Delete
 13. பூஜ்ஜியம் சூப்பர்!!! மஞ்ச நோட்டீஸ் அஹஹஹ்ஹ!!! அதிர்ச்சித் தகவலும் ஹஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. கடலில் கொட்டிய எண்ணையை வாளியில் அள்ளியதை மறக்க முடியுமா ஜி :)

   Delete
 14. ஜோக்குகளை விட தகவல்களே அதிகம் வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. இதையாவது தொடர்ந்து சொல்லட்டுமா :)

   Delete
 15. ''இளைஞர்கள் ,செல்போனை சார்ஜில் போடுற அக்கறையை எல்லா விஷயத்திலும் காட்டினாலே போதும் !''//

  இது ஜோக்கல்ல; அனைவருக்குமான புத்திமதி. நன்று!

  ReplyDelete
  Replies
  1. நமக்கும் சேர்த்துதான் :)

   Delete
 16. அனைத்தும் அருமை மஞ்சளின் மகிமை நன்று

  ReplyDelete
  Replies
  1. திவால் நோட்டீசை (மங்களகரமான) மஞ்சள் நோட்டீஸ் என்பது தவறுதானே ஜி :)

   Delete
 17. ஏற்கனவே வாக்களித்து விட்டேன். அப்போது மன்னிக்கவும் உங்கள் வாக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டது என காண்பிக்கிறது. தற்போது வாக்களிக்கும் போதும் அதையே காண்பிக்கிறது. தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பொன்னான வாக்கை செல்லாத வாக்கு ஆக்கிய தமிழ்மணத்தை இம்முறை மன்னிப்போம் ஜி !
   ஸ்வீட் பதினாறு வாக்கே போதும் என்று தடை செய்து விட்டார்கள் போலும் :)

   Delete
 18. கொஞ்சம் பிஸி சகோதரா..
  எல்லாம் வாசித்து ரசித்தேன்
  tamil manaam - 17
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. செல்போனை சார்ஜில் போட நாமும் மறப்பதில்லைதானே:)

   Delete
 19. Cell phone advice, , good, ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. இன்னும் பழைய பாணியிலேயே அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க முடியுமா :)

   Delete