3 June 2017

ம'னை'வி ...சந்தேகம் சரிதானா :)

செலவு சில கோடி ,வரி மட்டும் பல கோடியா:)                
                ''என்னங்க ,கார்லே வெளியூர் போகும் போது  வழிப்பறிக் கொள்ளைக்காரங்களுக்கு நிறைய பணத்தைத்  தர வேண்டியிருக்கும்னு  சொல்றீங்களே ,ஏன் ?''
                '' டோல் கேட் வரியைச் சொன்னேன் !''

நாணயம் உள்ளவர்கள் வருந்த மாட்டார்கள் :)               
             ''நாணயங்கள் ஒழிந்ததால்  ,அந்த டாக்டர் வருத்தப் படுகிறாரா ,ஏன்  ?''

             '' காசை  விழுங்கிட்டான்னு  எந்த கேஸுமே இப்போதெல்லாம் வர்றதில்லையாமே!''

தலைவர் பேச்சில் உள்குத்து தெரியுதே :)
               ''கண்ணகி பரம்பரையில் வந்தவர்கள் நாம்னு தலைவர் அடிக்கடி சொல்றாரே ,ஏன் ?''
                ''தன்னைக் கைது செய்தால் ஊரே எரியும்னு மறைமுகமா சொல்றாரோ ?''
ம'னை 'வி  ...சந்தேகம்  சரிதானா  :) 
         " மனைவிக்கு எத்தனை சுழி 'ன' போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
         " முதல் மனைவியா,  இரண்டாவது மனைவியான்னு  கேட்கிறாரே  !''

படிக்காவிட்டால் காசு போய்விடும் :)
          ''இந்த புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு புதுசா போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
          ''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புத்தகத்தை  பத்து நாள்லே படிக்கலைன்னா , எழுத்துக்கள் மாயமா மறைங்சுடுமாம் !''

ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா ?
தான் விரும்பும் பெண்ணின்......
 மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...
அவள் கனவினை 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462067செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

34 comments:

 1. நாணயங்களை ஒழித்த அரசு மருத்துவர்களையும் கன்சல்ட் செய்திருக்கலாம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா சில்லரைப் புத்தி போகவில்லை என்றா :)

   Delete
 2. மீ த 2 ..ண்டூஊஊஊஊஉ:)..
  //'' டோல் கேட் வரியைச் சொன்னேன் !''
  // ஹா ஹா ஹா புதுப்பாதையில் போகப்பிடிக்குது ஆனா பணம் கொடுக்கப்பிடிக்கல்லயாமோ?:)..

  படம் போட்டிருக்கிறீங்களே அந்தக்கா ஆரூஊஊ?:) கால்சங்கிலிக்குள் முத்திருக்கா? இல்ல டயமண்ட்டோ?:) சரி சரி எனக்கு ஊர் வம்ஸ்ஸ் பிடிக்காது பாருங்கோ:)...

  ReplyDelete
  Replies
  1. கனநேரமா ரைப் பண்ணிக்கொண்டு நின்றால், இடையில் ஆராவது மீ த 2 ..ண்ட்டூஊ என உள்ளே நுழைஞ்சிட்டாலும் எனும் பயத்தில சடாரெனப் பாதியிலயே கொமெண்ட்டைப் பப்ளிஸ் பண்ணிட்டேன்ன் எங்கிட்டயேவா?:)..

   //" முதல் மனைவியா, இரண்டாவது மனைவியான்னு கேட்கிறாரே !''//

   இவர்.. எங்கட ....... அவரா இருப்பாரோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணூ:).

   இப்பூடியுமோ ஆண்களுக்கு ஆசை இருக்கும்?:) என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா பகவான் ஜீ ஒண்ணும் சும்மா சொல்ல மாட்டார்ர்.. அவரின் எழுத்துக்கள் எல்லாம் பிரைக்டிக்கலாக அனுபவிச்சு எழுதப்படுபவை[அப்பூடின்னு அஞ்சுதான் தேம்ஸ் தண்ணியில் ஆஅடிச்சுச் சொன்னா:)] .. அதனால நான் நம்புறேன்:)..

   Delete
  2. இங்கின மட்டும்தான், விதை போட்டால்- முளைச்சு இலை விட மூண்டு நாளாகுது.. கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
  3. பழைய பாதைதானே ,பாலீஷ் செய்திருக்கிறார்கள் :)

   அந்தக்கா ஆரூஊஊ?:)உங்க பேத்தி மாதிரி இல்லையா :)

   Delete
  4. அஞ்சு தண்ணி அடித்து சொல்ல வில்லை தானே :)

   Delete
  5. இலை விட மூண்டு நாளாகுதா.... முதலில் பிளைப்பூ அப்புறம் தானே வலைப் பூ :)

   Delete
 3. Replies
  1. கண்ணகி பரம்பரையாமே தலைவர் :)

   Delete
 4. ஹா.... ஹா.... ஹா... கமல் போலப் பொங்கறார்!

  ஏடிஎம் கார்டை யாரும் முழுங்கறதில்லையாமா?

  இருக்கும்... இருக்கும்...

  ஹா... ஹா...

  சூப்பர் மேஜிக். நாம அந்தப் புத்தகத்தை வாங்கற காசும் அவங்க கையில அப்படி மாயமா மறையறதுக்கு என்ன மேஜிக் செய்யலாம்?

  ReplyDelete
  Replies
  1. கமல் பொங்குவதுக்கும் காரணம் இருக்கே :)

   கணக்கில் இருக்கும் பணத்தை வேண்டுமானால் முழுங்கக் கூடும் :)

   எரிப்பது கைவந்த கலையாச்சே :)

   இதுவும் நல்ல யோசனை தானே :)

   அப்படி செய்ய முடிந்தால் நாட்டிலே எதிரி யாருமே இருக்க மாட்டாங்களே :)

   Delete
 5. Replies
  1. மேஜிக் புத்தகம் அருமைத் தானே :)

   Delete
 6. அப்புறம் துணைவின்னு கேட்காமால் விட்டாரே.........

  ReplyDelete
  Replies
  1. மானாவுக்கு உள்ள மரியாதை தூணாவுக்கு இல்லையே :)

   Delete
 7. மனைவி ஜோக் செம செம..ஜீ

  ReplyDelete
  Replies
  1. மனைவி 1ஸ்ட் 2 ன்ட் புரிஞ்சிக்க இதுவும் உதவுமே ஜி :)

   Delete
 8. தலைவர் கண்ணகி பரம்பரையா? - ஹாஹா முடியல ஜீ

  ReplyDelete
  Replies
  1. ஆனால் உண்மையில் அவரும் கோவலன் மாதிரிதான்:)

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. செல்லும் சாலையைப் பராமரிக்கிறார்களே
  நாநயம் இன்னும் இருக்கிறதே அதை விழுங்க முடியுமா
  கண்ணகியை யார் கைது செய்தார்கள் தலைவர் கதையைப் படிக்கட்டும்
  ஒரு மனைவிக்கு ஒரு சுழியா
  அதற்கும் ஒரு எக்ஸ்பயரி தேதியா
  ஓ அப்படியா ஜீ

  ReplyDelete
  Replies
  1. செலவு எட்டணா என்றால் வரவு பட்டணா போலிருக்கே :)

   சிலருக்கு நா நயத்தால் தான் பொழப்பு :)

   அது கொடுத்த தைரியம் தான் :)

   சரியாக சொன்னீர்கள் :)

   நல்லது தானே :)

   நம்ப முடிய வில்லையா :)

   Delete
 11. டோல் பிரியா இருந்தால் நல்லது... வரி... வெறியா...?!

  அதனால் என்ன... நீங்கள்தான் பணம் முழுங்கி ஆசாமியா இருக்கீங்களே...!

  தினம் தினம் கரன் எரிப்பானோ... சென்னையை...!

  ஒரு மனைவி என்றால் இரண்டு கால்... இரண்டு மனைவி என்றால் நான்கு கால்...!

  எங்கே புத்தகத்தையே காணோம்...?!

  வீடியோ வரை உறவு...!

  த.ம. 11

  ReplyDelete
  Replies
  1. வரி கட்ட வரிசையில் வேறு நிற்கணும் ,கொடுமைதானே :)

   அதுக்குத்தான் சான்ஸ் குறைந்து போச்சுன்னு வருத்தப் படுறார் :)

   இன்றும் தி நகரில் தீ விபத்தாமே :)

   இரண்டு கால் அரை ,நான்கு கால் ஒண்ணுதானே :)

   அதுவும் நடக்கும் :)

   வீடியோ என்றாலே களவுதானே அதிகம் :)

   Delete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. ரெண்டாவது மனைவின்னா ரெண்டு சுழி,மூணாவதுன்னா மூணு சுழி...பலே!

  ReplyDelete
  Replies
  1. படிக்கும் போதே சிம்பாலிக்கா தெரியும்தானே :)

   Delete
 14. அனைத்தும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. செல்லுபடி தேதி போட்டால் புத்தகம் செல்லுபடியாகுமா ஜி :)

   Delete
 15. மனைவி ஒன்றிற்கு என்ன சுழி??!!! ஹஹஹ்

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தலையைப் பார்த்தால் தெரியும் :)

   Delete
 16. ஆமாம் டோல்கேட் கொள்ளைதான்!! அதிலும் சில சாலைகள் சரியா பராமரிக்கப்படறதும் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. வரி வரி என்று தீட்டி மக்கள் பணம் கொள்ளை அடிக்கப் படுகிறது :)

   Delete