30 June 2017

இது மோசமான 'பிக் அப் 'ஆச்சே :)

படித்ததில் இடித்தது :)
             ''மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்துங்கிற செய்தியைப் படித்து விட்டு ஏன் சிரிக்கிறீங்க ?''
             ''அந்த பாலகத்தை நடத்திக் கொண்டிருந்தவரின் பெயர் 'உதவும் உள்ளங்கள் 'ராஜேந்திரனாமே !''
இடித்த செய்தி .... ஆவின் பாலகத்தில் மதுபான விற்பனை :)

தனிமூன் போக நினைக்கிறாரோ :)      
           ''நிலவுக்குக் கூட்டிப் போகும் திட்டம்  எதுவும் இருக்கான்னு ஆர்வமா கேட்கிறீங்களே ,போகப் போறீங்களா ?''
          ''பெண்டாட்டியோடு போய் ,நான் மட்டும் திரும்பி வரலாம்னு இருக்கேன் !''

புத்திசாலிப் பசங்கதான் :)            

           ''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
            ''முட்டாளோட கேள்விக்கெல்லாம்  பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

இது மோசமான 'பிக் அப் 'ஆச்சே :)
          ''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா' நல்ல பிக் அப் 'தானே ?இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க ?''
         ''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''

பெண்டாட்டியைத் தேடிக்கலாம் ,நகையை :)
          ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
           ''சரி நான் என்ன செய்யணும் ?''
          ''எப்படியாவது நகையை மட்டும் மீட்டுக் கொடுங்க போதும் !''
பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?
பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !

இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464939செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

36 comments:

 1. ஜக் நான்தான் பஸ்ட்டு பூஸார் இன்னும் வரலையே

  வணக்கம் ஜி !

  நல்லா கடிக்கிறீங்க ஜி புத்திசாலிப் பசங்க செம !

  ஆமா நூறு பவுன் போட்டா ஓடாமல் ஆடுவாங்களா ஜி

  தமன்னா 2

  ReplyDelete
  Replies
  1. பூஜார் டூர் போயிருக்காக :)

   பவுனுக்கு ஆசைப் பட்டே எவனாவது இழுத்துட்டு போயிருப்பானோ :)

   Delete
 2. வணக்கம் ஜீ நலமா?

  தனிமூன், மோசமான பிக் அப் - ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஆசையைப் பாருங்க ,நிலாவிலே போய் விட்டுட்டு வரணுமாம் :)

   இது விரும்பத் தகாத பிக் அப் தானே :)

   Delete
 3. ''எப்படியாவது நகையை மட்டும் மீட்டுக் கொடுங்க போதும் !'' // பெஸ்ட் புருஷன் ஆஃப் தி இயர் கோஸ் டூ :) :)

  ReplyDelete
  Replies
  1. பவுனை மீட்டு இன்னொரு லட்டு திங்க ஆசைப் படுறாரோ:)

   Delete
 4. வாத்தியார் இப்படியெல்லாம் சொல்லி கொடுக்கிறாரா ?

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு சொல்லிக் கொடுத்து மாட்டிகிட்டாரே ஜி :)

   Delete
 5. ஆவின் பால் கடையில் டாஸ்மாக்கா! என்ன ஒரு வியாபாரம்!

  புத்திசாலிப்பசங்க புன்னகைக்க வைத்தனர்.

  ReplyDelete
  Replies
  1. பால் விற்கிற இடத்தில் பீர் ,நல்ல முன்னேற்றம் தானே :)

   மௌனமா நின்னே அருமையா பதில் சொல்லிட்டாங்களே :)

   Delete
 6. Replies
  1. பாலுக்கு பதிலா பீர் விற்றவர் பெயரைப் பார்த்தீங்களா ?நல்ல உதவும் உள்ளம்தான் :)

   Delete
 7. மதுரைக்காரரை பாலைக் கொடுத்து உதவச் சொன்னா... மக்கள் பாழாய்ப் போக உதவுகிறாரே...!

  ராக்கெட் தாக்குதல்தான் சரியாய் இருக்குமோ...?!

  ‘நான் ஒரு முட்டாளுங்க... நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...!’

  செலவு மிச்சம்... கவலையை விடுங்க...!

  மீட்டுத்தந்தா... 50...50... டீல் ஓகேன்னா... உடனே நீங்க நகையை எடுத்துக்கலாம்...!

  அதான் பாலில் தண்ணீர் அதிகமாக இருக்கோ...?!

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. வேலூர் பாலகத்தில் பீர் விற்றவர் 'மது'ரைக் காரரா :)

   இந்த முடிவுக்கு வீட்டில் நடக்கும் தாக்குதல்தான் காரணம் :)

   சொல்லாமலே சொல்றாங்க :)

   டாக்டருக்கு படிச்சவ டாக்சிக் காரரோட போகலாமா :)

   பெண்டாட்டியை நீயே வச்சுகிட்டாலும் சரிதான் :)

   காரியம் சாதிச்சுக்க ரொம்பவும் அழுதா இப்படித்தான் :)

   Delete
 8. //ஆவின் பாலகத்தில் மதுபான விற்பனை :)//

  ‘மாது’வுக்கும் ஏற்பாடு பண்ணுவார்களோ?!

  ReplyDelete
  Replies
  1. அதென்ன பாலகமா ,பாலுறவகமா:)

   Delete
 9. Replies
  1. ஹார்மோன் ஆராய்ச்சி செய்தது நானில்லை ஜி :)

   Delete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. பாலும், மதுபானமும் ஒரே இடத்திலா?! வெளங்கிடும்

  ReplyDelete
  Replies
  1. விற்றவர் பெயர் 'உதவும் உள்ளங்கள் 'ராஜேந்திரன் !குடிகாரங்களுக்கு வேறெப்படி உதவ முடியும் :)

   Delete
 12. மட்டமான ஜோக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் ஸ் ன்னு வேற போட்டு இருக்கீங்க ,total waste தானா :)

   Delete
 13. பிக்கு..கப்பு என்பது இதுதானா....!!!

  ReplyDelete
  Replies
  1. இதுவன்றி வேறேது :)

   Delete
 14. த.ம. வாக்களித்தேன். ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தங்களது நகைச்சுவைகள் அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. இதென்ன ஜோக்காளிக்கு வந்த சோதனை ?உங்க வோட்டு மட்டும் ஏன் விழவே மாட்டேங்குதே :)

   Delete
 15. இதுதான் சரியான பிக் அப்
  மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. அவளுக்கும் ஆசை வந்து அவனுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்காது என்ற பாடல் வரிகள் சரிதானே ஜி :)

   Delete
 16. மோசமான பிக் அப் தான்.

  ReplyDelete
  Replies
  1. இனி மேல் நல்லபடியா பிக் அப் ஆகும்னு நினைக்கிறேன் (நான் உங்க கமேன்ட்டைச் சொன்னேன் :)

   Delete
 17. Replies
  1. சமையல் ராணியின் நல்'வாக்கு'க்கு நன்றி :)

   Delete
 18. ஆவின் பாலகம் விற்பதோ மது அது யார் உதவும் உள்ளங்கள் ராஜேந்திரன்
  நிலவுக்கு உன் மேல என்னதான் கோபம்
  வாத்தியார் சொல்படி பிள்ளைகள்
  கால் டாக்சியை கூப்பிட்டது பெண்ணோ என்னவோ
  மாமூல் தருவாரா


  ReplyDelete
  Replies
  1. பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே இரண்டும் ஒன்றுன்னு விற்றார் போலிருக்கே :)
   நிலவிலே களங்கமில்லை மேகம்தான் மறைக்கிறது :)
   அதுவும் இந்த விஷயத்தில் டபிள் ஓகே:)
   கால் டாக்சியில் ஓடிப் போன முதல் பெண்ணோ :)
   அது தராமல் இங்கே எதுவும் நடக்காதே :)

   Delete