6 June 2017

கல்யாணமானவனின் கை அரிப்புக்கு காரணம் வேறு :)

பெண்களிடம் செல் படும் பாடு :)           
             ''செல்போனைக் கண்டுபிடித்தவருக்கு பெண் பிள்ளை இருக்காதுன்னு நினைக்கிறீயா ,ஏண்டா ?'' 
               ''இருந்திருந்தால், அதை ஏண்டா கண்டுபிடித்தோம்னு  நொந்து தற்கொலை  பண்ணிக் கொண்டிருப்பாரே !''  

யார் சொன்னது மௌனம் சம்மதமென்று :)          
           '' உன்  மௌனத்தை  காதலுக்கு சம்மதமா எடுத்துக்கலாமான்னு  அந்த பொண்ணுகிட்டே கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
           ''மௌனமா , அவ கல்யாணப் பத்திரிக்கையை  என் கையிலே கொடுத்துட்டாளே!'' 
நம்பிக்கையான பினாமி :)
                 ''நான் போலீஸ் ஆபீசர் ,பலருக்கும் நீங்கதான் பினாமின்னு கேள்விபட்டேன் ,யார் யார் உங்களிடம் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளார்கள் ?''
              ''என்னைக் கொன்றாலும் சரி ,அவங்களைப் பற்றி சொல்லவே மாட்டேன் !''
               ''வெரி குட் ,இந்தாங்க ஐந்து கோடி ரூபாய்  ,நான் கேட்கும் போது கொடுத்தா போதும் !''

கல்யாணமானவனின் கை அரிப்புக்கு காரணம் வேறு :)
          ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
           ''யார் என்ன சொல்றாங்க ?''
           ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.

ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் :)
வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்குத்  தகுதியானவனே !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462370செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

41 comments:

 1. மௌனமாக கல்யாணத்துக்கு போயிடடு வரவேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. துக்க வீட்டுக்கு போற மாதிரியா :)

   Delete
 2. இனிமேல் மெளனம் எனில், படு கோபம் எனத்தான் முடிவெடுக்கோணும் சொல்லிட்டேன்ன்:)..

  ஊசிக்குறிப்பு:-இப்போ நான் மெளனமாகப் போகிறேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. பகவான் ஜீஈஈஈ நேக்கு லெக்ஸ்ஸும் ஆடல்ல காண்ட்ஸ் உம் ஓடல்ல:) மேடைக்கு வரவும்.. எனக்கு மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊ:)...

   Delete
  2. எனக்கொண்ணும் கோபமில்லை :)

   Delete
  3. எனக்கும் சந்தோசம் பொயிங்குதே, பொயிங்குதே :)

   Delete
 3. அந்த பினாமி சூப்பர்
  நிச்சயம் அவரிடம் பணம்
  கொட்டோ கொட்டென்று
  கொட்டத்தான் செய்யும்...
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. வேலியே பயிரை மேய பினாமியும் உதவுதே :)

   Delete
 4. ஹாய் பகவான் ஜீ.... முதல்ல இதோ பிடியுங்கோ பூங்கொத்தை... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...!!!!

  ReplyDelete
  Replies
  1. புதிராய் இருக்கும் வாழ்த்துக்கு காரணம் புரிந்தது நன்றி ஜி :)

   Delete
 5. எதுக்கு வாழ்த்து என்று புரியவில்லையா..? இன்னும் சில நொடிகளில், உங்கள் ப்ளாக் 7 லட்சம் ஹிட்ஸை தொடப்போகிறது. அதுக்குத்தான் வாழ்த்துக்கள் ஜீ :) :) ( முதன்முதலாகக் கண்டு பிடித்து வாழ்த்தியமைக்குரிய பரிசை போஸ்டில் அனுப்புங்க ஜீ )

  ReplyDelete
  Replies
  1. நேரிலேயே வந்து தந்தால் வேண்டாமா ஜி :)

   Delete
 6. வேப்பங்குச்சிக்காரனுக்கு உண்மையாவே நோபல் பரிசு கொடுத்தே ஆகணும் :) :)

  ReplyDelete
  Replies
  1. பரிசை வாங்கத்தான் யாருமே வரலையே :)

   Delete
 7. பெண்களின் மௌனம் - ஹாஹா அதைப் பற்றி நாம வொறி பண்ணத் தேவையில்லை. அவர்கள் மௌனமாக இருந்தாலும் உள்ளுக்க எங்கள் நினைப்புத்தான் ஓடிக்கொண்டு இருக்குமாம் என்று இங்கு பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிருக்கினம் ஜீ :) :)

  ReplyDelete
  Replies
  1. காதல் இலக்கணத்துக்கு பெயர் பெற்றவர்கள் பிரெஞ்சு விஞ்ஞானிகள்,அவர்கள்சொன்னது உண்மையாத்தான் இருக்கும் ஜி :)

   Delete
 8. பெண்களுக்கு ‘செல்’லும் இடமெல்லாம் சிறப்பு...!

  மௌனமான நேரம்... இள மனதில் என்ன பாரம்...?

  ரொம்ப நன்றி... போயிட்டு வாங்க சார்... இனி எப்ப வந்தாலும் நீங்க யாருன்னுதான் கேட்பேன்...!

  எல்லாரும் அவுங்க வரவைத்தான் சொல்றாங்க...!

  கோபால் பல்பொடி வாங்க இயலாதவனாக இருக்கும்...!

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. சுமங்கலி என்பதாலா :)

   வடபோச்சே :)

   ஆனால் பணத்தைக் கொடுத்துடணும் :)

   நாமதான் செலவு செய்யாம இருக்கணும் :)

   ஓசியில் கிடைப்பதை விடுவானா :)

   Delete
 9. நோபல் பரிசு உங்களுக்கு உண்டு ஜி... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. என் இலக்கு அதுக்கும் மேலே ஜி :)

   Delete
 10. Replies
  1. மௌனம் சம்மதமென்று எடுத்துக்கக் கூடாதுதானே :)

   Delete
 11. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையான பினாமியையுமா :)

   Delete
 12. அசத்தல் அனைத்தும்

  ReplyDelete
  Replies
  1. கல்யாணமானவனின் கை அரிப்புமா :)

   Delete
 13. நோ பல்....
  நான் பல் பிடுங்கிய மேட்டர் உங்களுக்கு எப்படி தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. சத்தமில்லாமல் என் பல்லை பிடுங்கும் மேட்டரும் எனக்குத் தெரியும் :)

   Delete
 14. நோ பல் லையும் ரசித்தோம் ஜி...நம்பிக்கையான பினாமியையும் ..ஹஹ

  அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. நோ பல் என்றாலும் அழகு தானே ஜி :)

   Delete
 15. //பெண்களிடம் செல் படும் பாடு :)//

  அடக்க ஒடுக்கமா வீட்டோட இருக்கிற பொண்ணுகளுக்கு செல்தான் ஒரே பொழுதுபோக்கு. அதுக்கும் வேட்டு வைக்கிறீங்களே?!

  ReplyDelete
  Replies
  1. வெறும் பொழுதுபோக்கு மட்டும்தான் என்றால் பிரச்சினை இல்லை ,வில்லங்கம் பலவும் வருதே :)

   Delete
 16. செல் படும்பாடு பெண்களிடம் மட்டும் தானா
  பேசுபவர் பற்றித் தெரிந்து விடும் மௌனமாய் இருப்பவர் பற்றிஏதும் சொல்ல முடியாது
  கல்யாணமானவன் கை அரிக்கத் தொடங்கினால் மனைவியைக் கையாளத் துடிக்கிறான் என்று பொருளா
  வேபங்குச்சி கம்மைக் கிழித்துவிடாதோ

  ReplyDelete
  Replies
  1. ஆண் தப்பித்து விடுவானே :)
   மௌனமாய் இருப்பவரை நம்ப முடியாது அப்படித்தானே :)
   காசில்லை என்பதும் இருக்கலாமே :)
   நுனியைக் கடித்து பிரஷ் மாதிரி ஆக்கிக் கொள்வதால் கிழிக்காது :)

   Delete
 17. ஐந்துகோடி வேண்டாம், மூன்று கோடி என் கணக்கில் போடுங்கள். கேட்கும்போது தருகிறேன்- வட்டி இல்லாமல்! - இராய செல்லப்பா சென்னை.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே நீங்கள் நம்பிக்கையான பினாமி என்று நிரூபியுங்கள் ,பணத்தைப் போட்டு விடலாம் :)

   Delete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் ஏழு லட்சத்திற்கு

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமே ஏழரையை தொட்டு விடும் ஜி :)

   Delete