5 June 2017

சோற்றுப் பண்டாரமா ,புருசன்:)

 படித்ததில் இடித்தது :)           
          ''தி நகர் ,தீ நகர் ஆயிடும் போலிருக்கா ,ஏன் ?''
          ''ஒரே வாரத்தில் மூன்று தீ விபத்து நடந்திருக்கே !''
இடித்த செய்தி .....உணவகத்தில் தீ விபத்து !

கிடு கிடுவென்பது  மேலா ,கீழா :)
          ''கிடு கிடு என்பதற்கு என்ன அர்த்தம்னே புரியலியா,ஏன் ?''

           ' தங்கம் விலை  'கிடு கிடு 'உயர்வு என்றும் , 'கிடுகிடு 'பள்ளத்தில் உருண்டது பஸ் என்றும் சொல்றாங்களே !''

எதிலும்  ஒரு மெசேஜ் இருக்கணும்.இதோ .. :)
          '' ஜூலியஸ் சீசர் பிறப்பிலும் இறப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கா ,என்னது ?''
          '' அவர்  ஆயுதம் (சிசேரியன் )மூலம் பிறந்தார்  ,ஆயுதம்  (கத்தியால் குத்தப் பட்டு )மூலம்  இறந்தாரே  !''

சோற்றுப்  பண்டாரமா ,புருசன்:)
         ''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே,மாத்திரை  சாப்பீட்டீங்களா ?''
          ''மறந்தே போகுது,சாப்பாட்டுக்கு  முன்னாடி  சாப்பிடுற மாத்திரைன்னா  மறக்கவே மறக்காது  !''

மாமூல் நூறு வகை :)
    ''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
    ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''

நீங்கதான் சொல்லணும் பதிலை :)
தீயின் வேகம் மேலே செல்வது ...
நீரின் வேகம் கீழே செல்வது ...
மனத் 'தீ '  அடையுமோ தாக சாந்தி ?
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462288செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

37 comments:

 1. தலைப்பே அதிரடியா இருக்கே ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. அவர் மனைவி பாடு கஷ்டம் தான் ஜி :)

   Delete
 2. தி நகரில் மீண்டும் தீயா? பேசாம பெயரை மாத்தினா தேவல

  ReplyDelete
  Replies
  1. தீயா வேலை செய்யணுமில்லே:)

   Delete
 3. இன்ஸ்பெக்டர் வலைப்பதிவரோ... ?

  ReplyDelete
  Replies
  1. எந்த வலைப்பதிவர் சம்பாதிக்க வழி சொன்னார் ஜி :)

   Delete
 4. மாமூல் வரும் வழிகள் 100 - ஹா ஹா கூரியர்ல கிடைக்குமா ஜீ?

  ReplyDelete
  Replies
  1. இண்டர்நேசனல் எடிஷன் கிடைக்காமல் போகுமா :)

   Delete
 5. சோத்துப் பண்டாரம் என்று எங்கள் ஊரிலும் சொல்வார்கள்.

  அதோட பண்டாரம் என்ற சொல், பூசை செய்பவர்களையும் குறிக்கும். ஐயர்மாருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் பண்டாரம் எனப்படுவார்கள்.

  அங்கு எப்படி ஜீ?

  ReplyDelete
  Replies
  1. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நூற்றுக்கு நூறு பண்டாரங்களுக்கு பொருந்துமே ஜி ,அவங்க சிம்பல் கையிலே சங்கு :)

   Delete
 6. ரசித்தேன் ஜி. ஆனால் தி நகரில் எங்கே மூன்று தீ விபத்துகள்? ஒன்று புரசைவாக்கத்தில் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. தீ அணைப்பு நிலையத்தில் கேட்டு சொல்கிறேன் ஜி :)

   Delete
 7. Replies
  1. கிடு கிடு என்பதன் அர்த்தத்தை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 8. // ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''//

  ‘கம்பி எண்ண நூறு வழிகள்’னும் புத்தகம் எழுதுவாரா?!

  ReplyDelete
  Replies
  1. திருடனுடன் கூட்டு சேர்ந்து எழுதினாலும் ஆச்சரியமில்லை :)

   Delete
 9. //கிடு கிடுவென்பது மேலா ,கீழா :)//

  ‘நில நடுக்கத்தால் கட்டடங்கள் ‘கிடு கிடு’த்தன.....இது நடுவாந்தரம்!

  ReplyDelete
  Replies
  1. குழப்பம் இன்னும் கூடிப் போச்சே :)

   Delete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. நல்ல வேளை உயிர் இழப்பு இல்லையாமே
  ஏறுவது சிரமம் ஆகவே இறங்குவதுதான் சரியாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. கடை திறக்காத வேளை என்பதால் தப்பித்தார்கள் :)
   ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் ,இறங்கச் சொன்னால் ......கோபம் என்பார்களே :)

   Delete
 12. ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால்தான் சாவானோ
  சாப்பாடே மருந்துதானே
  மனத்தீயை அடக்க முனைகிறாளோ படத்தில் இருக்கும்பெண்

  ReplyDelete
  Replies
  1. இயற்கை நீதியே அதுதானே :)
   அப்படித்தான் சிலருக்கு ஆகிபோச்சு :)
   அவளை அடக்க ஒருவன் வந்தால் எல்லாம் அடங்கி விடலாம் :)

   Delete
 13. தி நகர் தீ நகர் அப்படி தான் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் லஞ்சம் செய்யும் மாயம் :)

   Delete
 14. இனி தீ. நகரனெ்றே வழங்கலாம்

  ReplyDelete
  Replies
  1. கெஜட்டில் திருத்தம் கொண்டு வருமா அரசு :)

   Delete
 15. தீ விபத்துகள் இடம்பெறாமல்
  முற்காப்பு எடுக்க முயல்வோம்

  ReplyDelete
  Replies
  1. அதை விட தற்காப்பு மிக முக்கியம் :)

   Delete
 16. 'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...!’

  வாழ்க்கையில மேடு பள்ளம் சகஜம்தானே...!

  அவர்தான் ஆயுத கேஸ்...!

  மறக்க முடியுமா...?!

  கம்பி என்ன ஒரே வழிதான்...!

  நீரும் நெருப்பும்...!

  த.ம. 12

  ReplyDelete
  Replies
  1. இந்த தீக்கு யாரும் சத்தமும் போட மாட்டார்களே :)

   பள்ளம் மேடு பார்த்து செல்லும் பிள்ளையோ :)

   உலகத்தின் முதல் ஆயுத கேஸா :)

   இல்லை மறுக்கத்தான் முடியுமா :)

   அதுக்கும் நூறு வழி இருக்கத்தான் செய்கிறது :)

   ஒண்ணாவே சேராதோ :)

   Delete
 17. கிடுகிடு அஹஹஹ் ரசித்தோம்....அனைத்தும் ரசித்தோம்...ஜி

  கீதா: தி நகரில் மூன்று தீ விபத்தா??!!! சென்னை சில்க்ஸ் மட்டும் தானே....

  ReplyDelete
  Replies
  1. கிடுகு என்றால் தெரியும் ,அதென்ன கிடுகிடு :)

   அடுத்து அடுத்து தீ விபத்து தொடருதே :)

   Delete
 18. உங்கள் கனவு படி ஓட்டு போட்டு விட்டேன்.

  //தங்கம் விலை  'கிடு கிடு 'உயர்வு என்றும் , 'கிடுகிடு 'பள்ளத்தில் உருண்டது பஸ் என்றும் சொல்றாங்களே !''//
  உயர்வு, தாழ்வை சமமாய் பாவிக்க சொல்லி இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நேற்று இந்த வோட்டுக்கு இருந்த மதிப்பே வேற ,சரி பரவாயில்லை!இன்றைய பதிவுக்கு உங்களின் வருகையை பதிவு செய்திருக்கலாமே மேடம் :)

   இதுக்கு கிடு கிடு தத்துவம் என்று பெயர் வைக்கலாமா :)

   Delete
 19. அது தானே!
  கிடு கிடு ஆராய்ச்சி நல்லது.
  மன தீ அடையுமோ தாக சாந்தி
  அச்சா..
  நல்ல கேள்விகள் சகோதரா
  தமிழ் மணம் - 16.
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. தீ நகர் ஆனாலும் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை :)
   எங்கேயும் நடக்காத ஆராச்சியாச்சே :)
   எதிர்மறையா இருந்தால் அது கவிதையா :)

   Delete