Thursday, 8 June 2017

மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :)

அவர் ஒரு நாய்க்குத்தான் வைத்தார் :)
            ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னுதானே  கூப்பிடுறோம்  ஜிம்மி கார்ட்டர்  usa முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 

உன் நண்பனைக் காட்டு ,உன்னைப் பற்றி சொல்கிறேன் :)
          ''எனக்கு  நண்பர்கள்  யாரும் இருக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது ?''

           ''உங்களோட ஒரு நிமிஷம்  பேசியதில் ,எனக்கே மண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டுதே !''

மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :)
              ''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''
             '' ஆமா ,'ஐயோ 'ங்கிறது  எமனோட  பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி  பெயரை எவண்டா சொன்னதுன்னு  எமன் வந்து நிற்பானாமே!''

கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் :)
           ''என்ன சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
           ''ஆமா ,அவர்தானே ...ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462599செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

41 comments:

  1. முதன் முதலாக ஜன்னலோரத்தில் நிலாவை நான் கண்டேன் :) :)

    ReplyDelete
    Replies
    1. ரசிக்கும் படி இருந்ததா :)

      Delete
  2. ஆஹா சிட்டுவேசன் சோங் நல்லா பொருந்துது..!! ஐ ஆம் த முதலாவது :) :)

    இருங்கோ ஜீ.... முதல்ல ஓட்டு... மிச்சமெல்லாம் பிறகு :)

    ReplyDelete
    Replies
    1. அதென்ன சோங் எனக்கு கேட்கவில்லையே ஜி :)

      Delete
  3. அடுத்தவன் மனைவி பெயரைத்தானே சொல்லக் கூடாது. அம்மன் சாட்சியோடு மாலை மாத்திய சொந்த மனைவி பெயரைச் சொல்லலாம் தானே :) :) :) ( ஐயோ ஜீ... இது குமுதத்தில வந்த ஒரு கதை... ஏதோ டென்சனில இஞ்ச உளறுறன் :) )

    ReplyDelete
    Replies
    1. தாராளமா சொல்லலாம் ,உளறத்தான் கூடாது :)

      Delete
  4. அந்தப் படத்தைப் பார்த்து குபீர் என்று சிரித்துவிட்டேன். தலைவர் கவுண்டமணி பல படங்களில் செந்திலைப் பார்த்து 'டேய்ய் ஹெல்மட் மண்டையா' என்று திட்டுவார்.

    அந்த ஞாபகம் தான் வந்தது :)

    ReplyDelete
    Replies
    1. கேட்டதைப் பார்க்கையில் சிரிப்பாத்தான் இருக்கு ஜி :

      Delete
  5. ஐயோ இது தெரியாம
    எதுக்கெடுத்தாலும் ஐயோன்னு
    சொல்லிக்கிட்டு இருக்கேனே
    பதிரிக்கை விளம்பரம் கொடுத்த
    நண்பன் பாவம்.அதிய மிகவும்
    இரசித்தேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தெரியாமல் சொன்னால் எமன் கோபித்துக் கொள்ள மாட்டார் :)
      போட்டோ கொடுக்காமல் வாழ்த்தணுமோ :

      Delete
  6. என்ன ஜி பயமுறுத்துறீங்க...!

    ReplyDelete
    Replies
    1. ஐயோ,ஐயோ,இதுக்குப் போய் பயப்படலாமா ஜி :)

      Delete
  7. தினசரியில் விளம்பரம் கொடுக்கறவர் பொதுவாகக் கொடுக்கக் கூடாதோ? எவ்வளவு நாள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா? உள் குத்தோ!!

    ReplyDelete
    Replies
    1. யாரைத்தான் நம்புவதோ :)

      Delete
  8. Replies
    1. ஹெல்மெட் மண்டையனையுமா:)

      Delete
  9. அமெரிக்கா போறதை வாழ்த்தி சொன்னது தப்பா ?

    ReplyDelete
    Replies
    1. போட்டோவுடன் விலாசம் போட்டதுதான் தப்பு :)

      Delete
  10. Replies
    1. மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லக் கூடாதுதானே :)

      Delete
  11. எமன் பொண்டாட்டி பேரை கேள்விப்பட்டிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. ஐயோங்கிறது உண்மைதானே :)

      Delete
  12. Replies
    1. அருமை எது படமா :)

      Delete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. அந்தக் ஹெல்மெட் பார்க்க ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.......சிங்கமா இருக்கு:).

    ///என் பெண்டாட்டி பெயரை எவண்டா சொன்னதுன்னு எமன் வந்து நிற்பானாமே!''///

    ரொம்ப நல்லதாப் போச்சு.. அப்படியே கூட்டமாப் பிடிச்சு மடக்கி எமனின் கதையை முடிச்சிடலாம்:).. வாங்கோ சொல்லுவம்.. அவரிட மனைவி பெயரை:)..

    ReplyDelete
    Replies
    1. வலையுலகின் ஆரம்ப காலத்தில் நான் எதுக்கெடுத்தாலும் ஐயோ.. எனத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன், அப்போ ஒரு தமிழ்நாட்டு அண்னன்தான் பேசினார்ர்.. அப்படிச் சொல்லாதீங்கோ.. அது எமனை அழைப்பதுபோலாகும் என:).. அதிலிருந்து விட்டுவிட்டேஎன்.. ஆனா ஹையோ என மாத்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).

      Delete
    2. ஆளைப் பாருங்க ,ஸ்மார்ட் தானே :)

      எமன் கதையை முடிக்க விரும்புறவங்க எல்லாரும் அதிராகிட்டே பெயரைக் கொடுங்க ,தேம்ஸில் அமுக்கிடலாம் :)

      Delete
  15. 'ஐயோ'ங்கிறது எமனோட பெண்டாட்டி பெயரா?

    "ஐயோ" என்று அழுவோர் - எமனோட
    பெண்டாட்டி பெயரைச் சொல்லியா அழுகிறாங்க...

    ReplyDelete
    Replies
    1. எதுமுதலில் வந்தது எமனா ,ஐயோவா :)n

      Delete
  16. எமனைக்கூட சமாளித்துவிடலாம்..பக்கத்தில் படுத்திருக்கும் மனைவி-துணைவியை சமாளிக்க முடியுமா...??நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பேர் என்றால் முடியாதுதான் :)

      Delete
  17. நாய் வாலை ஆட்டும்...!

    என்ன முடி இருந்ததா...?!

    ஐயா...!

    நண்பர்க்குத்தான் உங்கள் வீட்டின் மீது கொள்ளைப் பிரியம்...!

    த.ம. 12

    ReplyDelete
    Replies
    1. இருக்கு ,ஆட்டுது ,இதிலென்ன தப்பு :)

      முடிவா சொல்றேன் இருந்தது :)

      தர்மப் பிரபுவே ,உயிர் பிச்சைப் போடுங்கையா :)

      வீட்டின் மீது மட்டும்தானா :)

      Delete
  18. அனைத்தும் ரசித்தோம் ஜி!!! விளம்பரம், ஜிம்மி யையும்!!!

    ReplyDelete
    Replies
    1. விளம்பரமும் வினையாகுதே :)

      முதலில் வந்தது, ஜிம்மியா ,ஜிம்மி கார்ட்டரா:)

      Delete
  19. எல்லாமே நல்ல நல்ல ஜோக்குகள்தான்

    ReplyDelete
    Replies
    1. மண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டலையா :)

      Delete