9 June 2017

நமக்குத் தேவை பணம்தானே:)

 இப்படி பார்க்கவும்  ஒரு கட்டணம் நிர்ணயம் செய்வார்களோ :)       
                 ''வயிற்றில் வளரும் சிசு ஆணா ,பெண்ணான்னு நாங்க சொல்லக்கூடாது !''
               ''சரி சொல்ல வேண்டாம் ,நாங்களே பார்த்துக்கிறோம் ..இன்னும் கொஞ்சம் நல்லா போகஸ் பண்ணுங்க !''

நமக்குத் தேவை பணம்தானே:)           
               ''தலைவரே ,5௦௦ கோடிக்கு ஆசைப் பட்டு  அந்த அணியில் சேர்ந்தோமே ,ஒரு தொகுதியிலேயும் ஜெயிக்க முடியலியே !''

                ''ஜெயிச்ச பிறகு சம்பாதிக்க வேண்டியதை ,ஜெயிக்காமலே சம்பாதிட்டோமேன்னு சந்தோசப் படுங்க !''

ஆறடி நிலமே சொந்தமடா :)            
             ''செத்து போன உங்க வீட்டுக் கோழியைப்  புதைக்கவா , இவ்வளவு பெரிய குழி வெட்டுறீங்க ?''
            ''என்ன செய்றது ,செத்த அந்த கோழி உங்க வயிற்றிலே இருக்கே !''

 நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)           
             ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
            ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

 வெங்காயம் நறுக்கித் தந்த வெறுப்போ :)
            ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா கிடக்கு  ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
            ''கொஞ்சம் பொறுங்க ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''

சினிமா கவர்ச்சி யாரை விட்டது :)
சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற 
கோபக்கார கவிஞனைக் கூட பாடல்  எழுதவைத்து 
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462706செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

39 comments:

 1. முதன் முதலில் பார்த்தேன். காதல் வந்ததே....:)

  ReplyDelete
  Replies
  1. அது என் யோகம்தான் ஜி :)

   Delete
 2. ஆஹா..இன்றும் நானே முதலாவது. சிட்டுவேசன் சோங் பாடினது நல்லதாப் போய்ச்சு :) :)

  ReplyDelete
  Replies
  1. இந்த ஸாங் எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)

   Delete
 3. ஜீ, தம லிங்கில் ஏதோ சிக்கல் போல... யான் பின்னே கழியும் :)

  ReplyDelete
  Replies
  1. தூக்கக் கலக்கத்தில் நான் செய்த தப்புதான் ,காலையில் சரி பண்ணிட்டேன் ஜி :)

   Delete
 4. அட கோழிக்கு வந்த தொல்லையை)) அருமை ஜீ! நலம்தானே?

  ReplyDelete
  Replies
  1. நலம்தான் ஜி ,கோழிக் கறி சூப்பர் தானே :)

   Delete
 5. /// ''வயிற்றில் வளரும் சிசு ஆணா ,பெண்ணான்னு நாங்க சொல்லக்கூடாது !''
  ''சரி சொல்ல வேண்டாம் ,நாங்களே பார்த்துக்கிறோம் ..இன்னும் கொஞ்சம் நல்லா போகஸ் பண்ணுங்க !''///

  ஹா ஹா ஹா... பேசாமல் போக நினைச்சாலும்.. சில கொமெடிகள்.. பேச வைத்துவிடுகின்றன.

  எங்கள் உறவினர் ஒரு குடும்பத்துக்கு, அப்பெண் குடும்பத்தில் மூத்த மகள்.. அப்போ முதலாவது பேரக்குழந்தை வயிற்றில் இருந்தபோது.. 3 மாதத்தில் கணவனும் மனைவியுமாக ஸ்கான் பண்ண ஹொஸ்பிட்டல் போகிறோம் என வெளிநாட்டிலிருந்து ஃபோன் பண்ணி, இலங்கையில் இருந்த பெண்ணின் தாய்க்கு.. சொல்லி விட்டு ஹொஸ்பிட்டல் போனார்கள்.

  அவவோ கொஞ்சம் அவசரக்குடுக்கை (பெண்ணின் தாய்).. அப்போ அவவுக்கு பொறுமை இருக்கவில்லை... ஹொஸ்பிட்டலால் திரும்பி வந்திருப்பினம் என .. கோல் பண்ணியிருக்கிறா... திரும்பி வந்திருந்த மருமகன் ஃபோனை எடுத்திருக்கிறார்ர்..

  மாமியாருக்கோ ஆசையை அடக்க முடியாமல்.. கேட்டிட்டா மருமகனிடம்...

  “தம்பி ஸ்கான் பண்ணியாச்சோ? என்ன குழந்தை ஆணோ பெண்ணோ?:)”

  அதுக்கு மருமகனும் நல்ல கொமெடியாகப் பேசக்கூடியவர்... அவர் சொன்னாராம்ம்..

  “அது மாமி, ஸ்கான் பண்ணினார்கள், ஆனா குழந்தை நப்கின் கட்டியிருந்தது.. அதனால என்ன குழந்தை எனக் கண்டுபிடிக்க முடியவில்லை” என.. ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. நானே hay பீவரில் தும்மிக்கிட்டிருக்கேன் இந்த பூனை இப்போ பார்த்து சிரிக்க வைக்குது பாருங்க :)

   Delete
  2. வயிற்றில் இருக்கும் போதே இப்படி வெட்கப் பட்டா வெளியில் வந்து எப்படி வாழப் போவுதோ :)

   Delete
  3. சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு பூஜார் நம்பிக்கை :)

   Delete
 6. அனைத்தும் அருமை .சினிமா கவர்ச்சி வேதனையான உண்மை

  ReplyDelete
  Replies
  1. அதில் வரும் காசு வேறு எதிலும் வராதே :)

   Delete
 7. அட ஆமா கொஞ்சம் போகஸ்
  பண்ணினா நாமளே பத்துக்களாமே
  அதுக்கு சட்டம் தடுக்காது இல்லையா
  நல்ல யோசிக்கிறீங்க
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. சட்டத்தை நீதிபதியே மீறும் நாடாச்சே நம்ம நாடு :)

   Delete
 8. வணக்கம் ஜி !

  அத்தனையும் அட்டகாசம் ஆனாலும் கடைசி சிந்திக்க வைக்கிறது சினிமா எதுவும் செய்யும் என்று !

  பகிர்வுக்கு நன்றி ஜி
  தமன்னா வாக்கு மேலும் ஒன்று !

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு முதல்வராகும் ஆசையையும் வரவழைக்குதே சினிமா :)

   Delete
 9. சொல்லாதே யாரும் கேட்டால்...!

  ஜெயிச்சா கோடிதான் சம்பாதிப்போமா... புரியாம பேசாதிங்க தலைவரே...!

  ‘கொன்றால் பாவம்... தின்றால் போச்சு..’ சொலவடை இருக்கேன்னுதான்...!

  கொஞ்சம் மேலே போட்டுத்தாங்கன்னு சொல்றேன்... இதக்கூட புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்களே...!

  முதலாளி எப்பவும் நல்லாச் சாப்பிடுவாரு... நல்லதைத்தான் சாப்பிடுவாரு...!

  ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு...?’ கவி ‘கோ’விச்சிக்கிட்டு போயிட்டாரு...!

  த.ம. 6


  ReplyDelete
  Replies
  1. பெண் பிள்ளை வைத்திருப்போர் தாங்கமாட்டார் :)

   தலைவருக்கு அருகதை இல்லாத ஆளாயிருக்காரே :)

   கொன்னதும் நீங்கதான் ,தின்னதும் நீங்கதானே :)

   ஆட்டோ வாங்க லோனா :)

   ஊரை ஏமாற்றி இப்படிச் சாப்பிடலாமா :)

   தன்மானத்தோடு வாழ்ந்ததால் தான் அவர் கவிக் 'கோ':)

   Delete
 10. ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் ஹோட்டல் முதலாளிக்கு சுயநலம் அதிகம்தானே :)

   Delete
 11. Replies
  1. கோழியை கொன்றவரை இவர் கொன்று விடத் துடிப்பதை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 12. அவுகதானே சொல்லக்கூடாது இவுக பார்க்கலாம்ல...

  ReplyDelete
  Replies
  1. யாரோ பார்க்கலாம் ,சுமக்கிறவங்க பார்க்கக் கூடாதா :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. Replies
  1. நகைங்க மேலே கொடுத்த லோன்,சரிதானே :)

   Delete
 15. போகஸ் பண்ணினா அவங்களே பார்த்துப்பாங்க, நல்ல ஜோக்கு

  ReplyDelete
  Replies
  1. எதை போகஸ் பண்ணச் சொல்றாங்க :)

   Delete
 16. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. சினிமா கவர்ச்சியை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 17. செத்துப்போன கோழியும்
  ஆறடி நிலமும்
  அழகாயிருக்கே!

  ReplyDelete
  Replies
  1. செத்துப்போன கோழியுமா :)

   Delete
 18. தமிழ் மணம் - 15
  மிக நன்று சகோதரா...
  ரசித்தேன்
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. இன்று வந்திருக்கீங்க ,இன்றைய பதிவுக்கு வரலாமே சகோ :)

   Delete
 19. ஸ்கேனை புரிந்து கொள்ள வேண்டுமே அதிராவின் பின்னூட்டம் ரசிக்க வைத்தது
  தேர்தலில் நிற்காமலேயே பணம்சம்பாதிக்கிறார்களே
  கோழி நகைமேல் முதலாளி வீட்டுக்கு சாப்பிடப் போதல் பல முறை வாசித்தது
  சினிமாக் கவர்ச்சி பாட்டெழுதுவதிலா

  ReplyDelete
  Replies
  1. நானும் அதை ரசித்தேன் :)
   யோகம்னா இவர்களுக்கே பொருந்தும் :)
   நீல நிற ஜோக்கை வாசித்து இருக்க மாட்டீர்களே :)
   வெறுத்தோரையும் இழுத்து விடும் ஆற்றல் அதற்குண்டு :)

   Delete