27 June 2017

தொப்பைக்கு 'goodbye' எப்போது :)

குடிப்பது மனிதன் ,நாய்ங்களுக்கும் சேர்த்து திட்டா :)
         ''குடிகாரனைக் கண்டா மட்டும் எல்லா நாய்ங்களும் குரைக்குதே ,ஏன்  ?''
         '' குடிகார நாயேன்னு திட்டுவதற்கு அவங்கதானே காரணம் !''

எரிவதைப்  பிடுங்கினால் கொதிப்பது அடங்குமா :)         
              ''என் பையன் தினசரி ஊர் வம்பை 'விலை'க்கு வாங்கிட்டு வர்றான் ,என்ன செய்றது ?''

              ''நாலு நாள் பாக்கெட் மணியை நிறுத்திப் பாருங்க !''

மந்திரியை தாரிலே முக்கி எடுத்தாலும்  தவறே இல்லை :)
       ''  மந்திரி என்ன சொன்னார் ... அவர் மேலே செருப்பை எறியுறாங்களே ?''
        ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''

நன்றி மறக்காத டாக்டர் :)
           ''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லாம் யாரு ?''
         '' டாக்டரிடம்  காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவர்கள்  !''

தொப்பைக்கு 'goodbye 'எப்போது :)
தொப்பை விநாயகர் சிலைகூட ...
கடலில் உடனே கரைந்து விடுகிறது !
கடற்கரை ஓரத்தில் வேர்க்க வேர்க்க ஓடுபவர்களின் 
தொப்பைதான் கரைவதாக தெரியவில்லை !
இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1464627செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

33 comments:

 1. ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் இன்று மீதான்ன்ன் 1ச்ட்டூஊஊஊஊ:)..

  குடிக்காத நாயும் திட்டு வாங்குவது பாவம்தானே:).. தொப்பைக்கு குட்பாய் சொல்வது நடக்கிற காரியமோ?:)

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி :)

   தொப்பைக்கு குட்பாய் சொல்வது நடக்கிற காரியமோ?:)நடக்கிற காரியம் இல்லைதான் ,நடக்க வேண்டிய காரியமே இங்கே நடக்க மாட்டேங்குதே ,இதைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களிடம் கேட்டிருக்கிறேன் ,அதைப் பாருங்கள் ....asha bhosle athiraSun Jun 25, 11:02:00 am
   #இப்போ எனக்கொரு சந்தேகம் ,எனக்கு மட்டும் ஏன் தேம்ஸ் நதியோர ஓட்டு ஒண்ணே ஒண்ணுதான் விழுது ?#

   Delete
  2. பகவான் ஜீ... இருக்கிறதை விட்டுப்போட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படக்குடா தெரியுமோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இனிக் கொஞ்ச நாளைக்கு இந்த ஒரு வோட்டும் விழுமோ என்பது அந்தப் பகவானுக்கே வெளிச்சம்:) ஹா ஹா ஹா பாய்.. பாய்... ஹையோ இது வேற பாய்ய்ய்ய்ய்ய்:).

   Delete
  3. யாருக்கும் விழவில்லைஎன்றால் நான் ஆசைப் படப் போறேன் :)

   நீங்களும் என்ஜாய் ,அஞ்சுவும் என்ஜாய்தானா கொஞ்ச நாளைக்கு :)

   Delete
  4. #பாய்.. பாய்... ஹையோ இது வேற பாய்ய்ய்ய்ய்ய்:).#
   தொப்பைக்கு குட்பை சொல்லச் சொன்னா ,நீங்க எனக்கு குட்பை சொல்றீங்களே ,நியாயமா :)

   Delete
 2. ஹல்லோ ஜீ.!

  இன்று எல்லா ஜோக்குகளுமே சூப்பர்ர்ர்ர்ர்..!

  மந்திரி ஜோக் - ஹாஹா

  அப்புறம் தொப்பைய குறைக்கலாம் ஜீ.. என்கிட்ட சூப்பர் ஐடியாக்கள் இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஐடியாவை எடுத்து விடலாமே ஜி :)

   Delete
 3. பாக்கெட் மணி - செம ஜோக் :) :)

  ReplyDelete
  Replies
  1. விலைக் கொடுத்து வாங்குவது அந்த பணத்தால் தானே :)

   Delete
 4. வணக்கம் ஜி !

  சிரிக்கவும் சிந்திக்கவும் எல்லாப் பதிவுகளும் காரணாமாகின்றன !
  அதிகம் பிள்ளைகள் கெடுவதற்கு கைசெலவுக்கான பணமே மூலாதாரம்
  அருமை ஜி அத்தனையும்
  நன்றி
  தமன்னா +1

  ReplyDelete
  Replies
  1. சம்பாதிக்க தொடங்கும் முன்பே இளம்தலைமுறை கஞ்சாவுக்கும் ,மதுவுக்கும் அடிமையாக காரணம் பாக்கெட் மணிதான் என்பதால் பெற்றோர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது :)

   Delete

 5. கடற்கரை தொப்பை ஜோக் சூப்பர்.

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மண் கரைவதைப் போல ,தொப்பையையும் கரைக்க முடிந்தால் எவ்வளவு வசதி :)

   Delete
 6. குரைக்கிற நாய் கடிக்காதிங்கிறது தெரியுமுல்ல...!

  பாக்கெட் மணியை நிறுத்தினா வீட்டு மானத்த வித்திட்டு... பிச்சை எடுக்க ஆரம்பிச்சிடுவனே...!

  மந்திரி செருப்பை பொறுக்கிட்டு இருக்காரு... நல்ல வருமானம் கிடைக்குமாம்...!

  விலை மதிப்பில்லா உயிருக்கே விலை வைத்து விட்டாரே...!

  கருவோடு வந்தது... தெருவோடு போனது...!

  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. அமைதியா வந்து கடிக்கிற நாயை நான் பார்த்ததே இல்லையே :)

   அளவா கொடுத்தா போதும் :)

   இதையுமா ஏலம் விடுவார் :)

   அந்த விசுவாசம்தானா:)

   தெருவோடு போனாலும் ,திரட் மில்லில் ஏறி நின்ற இடத்திலேயே ஓடினாலும் தொந்தி மட்டும் கரையவே இல்லை :)

   Delete
 7. நாய்களுக்கும் ஒரு மனசு இருக்குதுல...

  ReplyDelete
  Replies
  1. ரோசக்கார நாய்ங்க வேற :)

   Delete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. தொப்பை குறையாதோ

  ReplyDelete
  Replies
  1. குறையுற மாதிரி தெரியும் ,ஆனா குறையாது :)

   Delete
 10. வணக்கம்
  ஜி
  சொல்லிய ஒவ்வொரு கருத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழைத் தாரும் அருமைதானே :)

   Delete
 11. ஆனால் குடிகாரர்களுக்கு நாய்கள் மேலலாதிப்பிரியம் கண்டிருக்கிறேன்
  ஊர்வம்பு பத்திரிக்கையா விலை கொடுத்து வாங்க
  முன்பேசெருப்பு எறியப்பட்ட மந்திரிதானே
  நன்கொடையும் கொடுத்து உயிரையும்விட்டவர்கள்?
  தொப்பை ஏன் குறைக்க வேண்டும் ஒரு பெரிய மனிதத்தனம் தருகிறதே

  ReplyDelete
  Replies
  1. மதுவின் வாடை நாய்ங்களுக்கு பிடிக்குமோ என்னவோ :)
   பாக்கெட் மணி மேக்ஸ் மெனி பிராப்ளம்ஸ் :)
   சரியாக சொன்னீங்க ,அவரே அவரே :)
   இந்த நன்கொடைக்கு உயிரோடு இருந்தாலாவது வரி விளக்கு பெறலாம் :)
   எல்லோருக்கும் அப்படி பொருத்தமா இல்லையே :)

   Delete
 12. ''நாலு நாள் பாக்கெட் மணியை நிறுத்திப் பாருங்க !''//

  ‘பிக்’பாக்கெட் அடிப்பானோ?!

  ReplyDelete
  Replies
  1. போதைக்கு அடிமை ஆகியிருந்தால் அதையும் செய்வான் :)

   Delete
 13. Replies
  1. தொப்பையும் அழகுதானா ஜி :)

   Delete
 14. முதலும் முடிவுமான அனைத்தும் அருமை

  ReplyDelete
  Replies
  1. கடற்கரையோர சிந்தனை சரிதானே ஜி :)

   Delete
 15. வாழைத்தார் அஹஹஹஹ்...தொப்பையையும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. மந்திரி அடி வாங்கியதை ரசிக்க வில்லையா ஜி :)

   Delete