13 July 2017

மணப்பெண் இவளானால் மணப்பவன் எவன் :)

இவர்தான்  முன் ஜாக்கிரதை முத்தண்ணாவோ:)           
           '' செல்போன் வைப்பரேசன் மோடிலே  இருந்தா ,எடுத்து விடுன்னு சொல்றீங்களே ..ஏன் தாத்தா ?''
            ''சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்கிக்கிற அளவுக்கு என் உடல் நிலை இல்லையே !''
மணப்பெண் இவளானால் மணப்பவன் எவன் :)
        ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கீயா ?''

        '' உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு நீங்கதானே  சொல்லி இருந்தீங்க !''
காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி ,காக்காவுக்கு புரியுமா :)
         ''காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு  தெரியாது போலிருக்கா  ,ஏன் ?'' 
          ''அது பொன் குஞ்சை அடகு வைத்ததா தெரியலையே  !''

கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க :)
       ''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000 ரூபாய் கடன் கேட்கிறே ?''
       ''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் அதிலும்...:)
செருப்பிலேகூட வலது ,இடது வேறுபாடு இருந்தால் தான்  ஜோடிப்பொருத்தம் ..
மனிதரில் மட்டும் ஆணுடன்  ஆணும் ,பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்ன பொருத்தம் ?

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466167

32 comments:

 1. "அடக்கமான பெண்" சரிதானே....

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளையும் அடங்கி விடுவார் :)

   Delete
 2. Replies
  1. ஜோடிப் பொருத்தம் சரிதானே :)

   Delete
 3. அவசர உதவியை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பில் சொன்னது தானே நடக்கும் :)

   Delete
 4. ''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''//

  சில நேரங்களில் சில புத்திசாலிகள்!!!

  ReplyDelete
  Replies
  1. காரியம் ஆகணுமே :)

   Delete
 5. அனைத்தும் ரசித்தேன். த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. சின்ன அதிர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா ஜி :)

   Delete
 6. வைபரேசன் எடுத்திட்டேன்னு ஏன்டா பொய் சொல்றாய்...?! தாத்தா போய்ச் சேரட்டுமுன்னு நெனக்கிறீயா...?!

  அடக்கம் அமரருள் வைக்கத்தான் ஒங்க மகனைத் தேடி வந்திருக்கேன்...!

  ‘பொன் குஞ்சு’ன்னு நா எப்ப சொன்னேன்...?! சும்ம கிடக்கிற என்ன ஏன்டா வம்புக்கு இழுக்குறீங்க...!

  100-க்கு போன் பண்ணு 1000 கிடைக்கும்...!

  ஆகா என்ன பொருத்தம்... இந்தப் பொருத்தம்...?!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. தாத்தா சொத்து ஏதும் இருக்குமோ :)

   அப்படியே அவன் ஆத்தாவையும் கூட்டிட்டுப் போயிடு ,எனக்கும் நிம்மதி :)

   கடன் வாங்காம நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா :)

   என்ன கிடைக்கும் தடியடியா :)

   இயற்கைக்கு விரோதம் இல்லையா இது :)

   Delete
 7. Replies
  1. ஜோடிக்குள்ளும் பிளஸ் மைனஸ் தேவைதானே :)

   Delete
 8. Replies
  1. உங்கள் ரசிப்பே என் மகிழ்ச்சி :)

   Delete
 9. Replies
  1. அடக்கமான பெண்ணையும் தானே :)

   Delete
 10. அவசர உதவி 108 - நல்லா இருந்தது. ஜோடிப் பொருத்தம்-இருக்கறதுனாலதான அவங்க சேர்றாங்க? த.ம.

  ReplyDelete
  Replies
  1. வம்சவிருத்தியாகுமா இந்த பொறுத் தத்தால் :)

   Delete
 11. அவசர உதவி அருமை.

  ReplyDelete
  Replies
  1. இந்த காலை 100க்கு forward செய்து விடப் போகிறார்கள் :)

   Delete
 12. அவசர உதவி ஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி....

  ReplyDelete
  Replies
  1. உதவின்னு வம்பை விலைக்கு வாங்குகிறாரோ :)

   Delete
 13. அவசர உதவி இதுகூட நல்ல யோசனைதான் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. உதவியை கேட்டு வாங்கிக்குங்க ,என் பெயரை மட்டும் சொல்லிடாதிங்க :)

   Delete
 14. வைப்ரேஷன் மோடை நீக்கினால் செல்போனின் மணி சத்தம் கேட்குமே பரவாயில்லையா
  அடக்கமான பெண் என்றால் கைக்கு அடக்கம் என்று அர்த்தமா
  காக்கா முட்டையை அடகு வைத்து ஏமாந்தவரின் பொன் மொழியா / கேள்வியா
  ஜோடிப்பொருத்தம் அருமை

  ReplyDelete
  Replies
  1. அதனால் பாதிக்காதாம் :)
   வாய் அடக்கம் அதை விட முக்கியம் :)
   சேட்டு ஏமாறுவாரா :)
   வாழ்க பல்லாண்டு :)

   Delete
 15. கன்னிப்பேய் என்றால் அடக்கமான பெண் என்று அர்த்தமோ...????

  ReplyDelete
  Replies
  1. கல்யாணத்துக்கு கன்னி வேண்டாமா :)

   Delete
 16. எதையும் ஜோக் ஆக்கிவிடும் திறமை உங்களுக்கு மட்டுமே உண்டு

  ReplyDelete
  Replies
  1. செல்போன் வைப்பரேசனைச் சொல்றீங்களா ஜி :)

   Delete