14 July 2017

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி நிச்சயமா :)

'ஜோக்' ஃபால்ஸ் :)
             ''இவ்வளவு தூரம் வந்தாச்சு ,ரொம்ப உயரத்தில்  இருந்து தண்ணீர் கீழே விழுகிற 'ஜோக்' ஃபால்ஸ்யைப் பார்த்துட்டு போகலாமே ?''
             ''என்ன பெரிய உயரம் ,வானத்தில் இருந்து  மழை நீர் கீழே விழுகிற உயரத்தை விடவா ?''     
        (இப்படி கேட்டவர் ,ஒரு எளிமையான ஒரு தலைவர் !யாரென்று உங்களுக்குத் தெரியுமா ?தெரியாட்டி பரவாயில்லை ,விடையைக் கீழே பார்த்து தெரிஞ்சிக்குங்க :) 
     
ஸ்பூனால் சாப்பிடுவதா  இட்லி :)      
           '' மினி இட்லி  ஆர்டர் பண்ணாதேன்னு ஏன் சொல்றீங்க, தாத்தா ?''
            ''எங்க காலத்திலே இட்லி மேலே சாம்பாரைக் கொட்டிகிட்டு சாப்பிட்டோம் ,இப்போ என்னடான்னா  ...கப்பு சாம்பார்லே  இட்லியை மிதக்க விட்டு கொண்டு வர்றாங்களே !''

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி நிச்சயமா :)
          ''அழகிப் போட்டியில் ,லிப் ஸ்டிக் பூசுன அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே  உங்களாலே சொல்ல முடிந்தது ?''
          ''வாய் 'மை'யே ஜெயிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கே !''
அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாட்சி வேணும் :)
              'அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு அக்னாலேஜ்மென்ட் கேட்குறீங்க ?''
             ''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு யாரும்  சொல்லக்கூடாதில்லே ?''

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?
      எந்த விசேசம் என்றாலும் ...
      பியூட்டி பார்லருக்கு சென்று 
     ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 
     அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில் 
     அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது ...
     பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !

விடை ....நம்ம தேசத் தந்தை காந்திஜிதான் :)

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466269

30 comments:

 1. எப்படித்தான் இவ்வளவு
  யோசிப்பீங்களோ
  வாய்மை வெல்லுவதைச் சொன்னேன்

  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. சத்தியமேவ ஜெயதே என்றால் எந்த கற்பனையும் வரவில்லை :)

   Delete
 2. Replies
  1. காந்திஜியின் கேள்வி நியாயமானது தானே ஜி :)

   Delete
 3. Replies
  1. தலைவிரிக் கோலத்தை ரசிக்க முடியுதா :)

   Delete
 4. ‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரு...!’ அதான்... மேலுலகம் போய் பாத்துக் கொண்டிருப்பாரோ... அண்ணல்?!

  தரைமே பிறக்க வைத்தாய்... எங்களைக் கப்பு சாம்பார்லே இட்லியை மிதக்க விட்டாய்...!

  ‘சத்திய(மா) சோதனை’யா...? வாய்மை வெல்லுவது எப்போ...?

  மெய்யா மொய் நோட்டு இருந்தாப் பாருங்க... எதுக்கு கஷ்டப்பட்டு உக்காந்து நா எழுதிக்கிட்டு இருக்கேன்...!

  அய்யோ... சிக்கிக்கிச்சு... சிக்கிக்கிச்சு... தலைவிரி கோலத்திற்கு எவ்வளவு சிரமம் தெரியுமா...?!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. அண்ணல் ,இன்னல்கள் அனைத்தையும் வெற்றி கொண்டவராச்சே :)

   நெய் இட்லின்னு பெயரும் வைத்தாய் :)

   லட்சினைதான் அது லட்சியம் அல்லவே :)

   அதை ஒரு ஜெராக்ஸ் போட்டுக்கலாமே :)

   சிக்கலைத் தீர்க்கவும் பணம் செலவாகுமே :)

   Delete
 5. ஆயிரக்கணக்கில் செலவு செய்து அலங்கோலமாகவே வெளியே வருகிறார்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. வெளியே வருவது பாட்டியாக இருக்கலாம் ,சைட் அடிக்காதீங்க என்று கிண்டல் செய்கிறார்களே :)

   Delete
 6. ரசித்தேன்....

  தமிழ் மணம் ஏழாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாக்கு போட்டு ரசித்தமைக்கு நன்றி ஜி:)

   Delete
 7. //அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே உங்களாலே சொல்ல முடிந்தது ?''//

  அழகிகளை ரசிச்சி ஜொள்ளு விடுற இவரெல்லாம் ஒரு தலைவரா?!

  ReplyDelete
  Replies
  1. மக்கள் எவ்வழி தலைவன் அவ்வழி என்றாகிப் போச்சே :)

   Delete
 8. Replies
  1. காந்திஜியின் நகைச்சுவையையும் தானே :)

   Delete
 9. Replies
  1. வாய்மையே வெல்லும் சரிதானே அய்யா :)

   Delete
 10. அனைத்தும் அருமையாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஜோக் பால்ஸ் காண்பதும் சுகம் தானே :)

   Delete
 11. முதல் ஜோக்கா இல்லை நிஜமா ஜோக் ஃபால்ஸ் ஒரு ஜோக் ஃபால்சாகி விட்டதே
  படுத்துட்டு போர்த்தினா என்ன போர்த்திட்டு படுத்தா என்ன
  லிப்ஸ்டிக் வாய் மை நல்ல மொழிமாற்றம்
  இருந்தால்தானே மொய்க்கு மொய் கேட்க முடியும்
  பாட்டி சொல் தட்டுவதற்கே

  ReplyDelete
  Replies
  1. காந்திஜி இப்படி சொல்லி இருப்பார் னு நம்ப முடியலையா :)
   ருசி கண்ட நாக்குக்கு இது தெரிய மாட்டேங்குதே :)
   உதட்டுக் குச்சின்னா பொருத்தம் இல்லையே :)

   Delete
 12. அப்படியா...!!!!வாயே வெல்லும்..உண்மைதான் எங்க ஏரியாஅண்பெண்வாயிலிருந்து வரும் வாரத்தைகளே! அதை உறுதி படுத்தியிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. உங்க அனுபவம் ரொம்ப மோசமாயிருக்கே :)

   Delete
 13. Replies
  1. காந்திஜி சொன்னதில் தப்பு இல்லையே :)

   Delete
 14. ஆள் அடையாளம் தெரியாது மாயம் செய்யும் அழகு நிலையமே மாயமா ஆஆஆஆ...

  இறுதி உன்னில் வீழ்ந்தேநை மிகவும் ரசித்தோம்ஜி..அருமை...

  ReplyDelete
  Replies
  1. அதை செய்த எங்களுக்கு இதை செய்யவும் தெரியும் என்கிறார்களோ :)

   வயசில் இப்படி விழுவது நடப்பது தானே :)

   Delete
 15. பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?//
  பார்க்கவே அழகு.

  ReplyDelete
  Replies
  1. மனதில் தோன்றிய அந்த பிம்பத்தை நானும் ரசித்தேன் :)

   Delete