18 July 2017

காட்டன் சேலைக்கு அழகு ,கஞ்சிதானே :)

இவருக்காகப்  பழமொழியே மாறிப் போச்சே :)           
           ''உப்பில்லாப் பண்டம் தொப்பையிலேன்னு  ஏன் சொல்றீங்க?'' 
          ''உப்பைச் சேர்த்துக்கக் கூடாதுன்னு டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணியிருக்காரே !''

எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம்தான் :)        
           ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வருதே !''

            ''அந்த மருந்துக்கு காரணமான  ஃபாஸ்ட் புட் ,ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''

 காட்டன் சேலைக்கு அழகு ,கஞ்சிதானே  :)              
           ''கஞ்சிக்கே வழி இல்லாதவ ....காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாது என்பது சரி , காட்டன் புடவைக்குமா ?''
          ''கஞ்சி போடாத  காட்டன் புடவையை கட்டிக்கிட்டா நல்லா இருக்காதே !''
தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு :)
          ''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
          ''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''

இதுக்குத்தானா மலிவு விலை மருந்தகம்  :)
சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466722

36 comments:

 1. தலைச்சாயமும் ரேஸன் கடையும்
  வித்தியாசமான சிந்தனை
  மிகவும் இரசித் "தேன் "
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தேனை நானும் ரசித்தேன் :)

   Delete
 2. Replies
  1. பாஸ்ட் ஃபுட் வரும் வேகம் பாஸ்ட் தானே :)

   Delete
 3. ​அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு தொப்பையும் ஒரு குப்பைத் தொட்டிதானே :)

   Delete
 4. Replies
  1. டோர் டெலிவரி ரொம்ப மோசம்தானே :)

   Delete
 5. ‘நீ உப்பு போட்டுத்தான் சாப்புடுறீயா...?’ன்னு கேக்கிறாங்களோ...!

  ஹாட் அட்டாக் அடுத்த செகன்ட்டே வருகின்றதே...!

  ‘பருத்தி வீரா’யின்னு பட்டம் கொடுத்திடுவோம்...!

  இதுகுத்தான் வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதேன்னு சொன்னா கேக்கணும்...!

  சீனிவாசன்னு பேரு வேற...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. விஷயம் தெரியாதவங்களா இருக்கும் :)

   வராவிட்டல்தான் அதிசயம் :)

   வீரான்னா பெண்பாலா :)

   அந்த நாட்டுக்கு மட்டும்தான் சரியா வேலைச் செய்யுமோ :)

   அதான் சீனி வாசனையே பிடிக்கலையோ:)

   Delete
 6. Replies
  1. உல்டா பழமொழியைத் தானே :)

   Delete
 7. விக்"கூடவா நரைக்கும் ?

  ReplyDelete
  Replies
  1. ஒரிஜினலை நரைக்கும் போது ....:)

   Delete
 8. // ''உப்பில்லாப் பண்டம் தொப்பையிலேன்னு//

  குப்பையில் போட்டா வீணாப்போகும். தொப்பையாவது வளரட்டுமே!!

  ReplyDelete
  Replies
  1. அதானே உப்பில்லா பண்டம் வரலைன்னு குப்பை வருத்தப் படப் போவுதா :)

   Delete
 9. ஓட்டு போட்டாச்சி! கைமாறு உண்டா

  ReplyDelete
  Replies
  1. நம்ம நட்பு ,கைமாறு மறவாத நட்பாச்சே :)

   Delete
 10. கஞ்சி போட்டாதான் காட்டன் நல்லாயிருக்குமுன்னா...காட்டன் சட்டை,காட்டன் பேண்ட்க்கு எல்லாம் கஞ்சி போட்டா அணியுறாங்க...?????

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது ,துவைக்கவே தேவை இல்லாதவையாச்சே :)

   Delete
 11. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. உப்பில் இருந்து சீனி வரைக்குமா :)

   Delete
 12. Replies
  1. இது விளம்பரம்தான் என்றாலும் பரவாயில்லை :)

   Delete
 13. அனைத்தும் அருமை. ரேஷன் கடை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. ரேஷன் கடையில் சீனி சிந்தி இருந்தாலும் எறும்பு வருவதில்லை ,ஏனோ அது புரியவில்லை :)

   Delete
 14. தொப்பையில் குப்பைகள்தானா
  இந்தக் காஞ்சி கஞ்சி புட்வை எல்லாம் பெண்கள் சமாச்சாரம்
  முடியைக் கலர் செய்வதும் ஸ்டைலே
  சீனி இலவசமா

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தானே ஆக்கிவைத்திருக்கிறோம்:)
   பார்ப்பது மட்டும் ....:)
   நல்ல ஸ்'டைல்'தான்:)
   கொடுத்தால் ,இன்னும் எரிச்சல் தரும் :)

   Delete
 15. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. இந்த இடுகைக்கு ஆதரவு வாக்களித்தவர்கள் என்று ஒரு காலம் இருப்பதை மறந்து விட்டீர்களே ஜி :)

   Delete
 16. காட்டன் சேலைக்கு அழகு ,கஞ்சிதானே :) //
  உணமை .
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. அந்த கஞ்சி காட்டன் சேலைக்கு அழகு ,வஞ்சிதானே :)

   Delete
 17. பாஸ்ட் புட் சாப்பிட்டா பாஸ்ட்டாதான் வரும் ஜோக்கல்ல தத்துவம்

  ReplyDelete
  Replies
  1. அப்படி வந்தால் அது ஆபத்தான தத்துவம் ஆச்சே :)

   Delete
 18. நகைச்சுவைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கஞ்சி போடாத காட்டன் புடவை பாழ்தானே :)

   Delete