22 July 2017

காதலியின் கெடுவுக்கு காரணம் :)

படித்ததில் இடித்தது :)
                ''வேஷ்டி வாங்கிட்டேன் ,இங்கிலீஷ் நல்லா பேசப் பழகணும்னு ஏண்டா சொல்றே ?''
                 ''போறப் போக்கைப் பார்த்தால், இங்கிலீஷ் பேசத் தெரிந்து வேஷ்டி  கட்டினவங்களுக்கு மட்டும்தான் மாலில் அனுமதின்னு சொல்வாங்க போலிருக்கே !''
இடித்த செய்தியின் தொடுப்பு ....வேட்டிக்கு அவமரியாதை :(

காரம் பிடிக்கும் ,அதிகாரம் :)      
          ''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
         ''அவளுக்கு என்னை அதி 'காரம்'  பண்ணத்தானே  பிடிக்குது ?''

ஆத்திரப் படுவதிலும் நியாயம் இருக்கே :)
           ''பரோல்லெ  வெளியே போய் ,யாரைக் கொலைப் பண்ணிட்டு   வந்திருக்கே ?''
            ''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''

காதலியின் கெடுவுக்கு காரணம் :)
          ''என்னடா  சோகமா இருக்கே ,உன் காதலி  என்ன சொல்லிட்டு போறா ?''
         ''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என்  கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து  தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''

கொடாக்கண்ட மாமனாரும்  , விடாக்கண்ட மாப்பிள்ளையும்  :)
          ''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க Gமெயில் அனுப்பினது, வம்பாப் போச்சா ,ஏன் ?''
        ''விருந்தும் மருந்தும் மூன்று நாள்னு அனாமி பெயர்லே அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

பேதை தந்த போதையினால் மிதப்பா :)
விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467083

24 comments:

 1. சோலந்தூர் சோசியர் சோனைமுத்தை கொன்னுட்டாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. தப்பை செய்ஞ்சா தண்டனை அனுபவித்துதானே ஆகணும் ?காசிருந்தால் ஜெயிலில் கூட ஏசி வச்சிக்கலாம்..அது வேற விஷயம் :)

   Delete
 2. கோல்மால் பண்ண வேண்டியதுதான்...!

  அவளுக்குப் பல‘காரம்’ பண்ணப் பிடிக்காதாம்...!

  இனிமே யாரையும் ஏமாத்தக்கூடாதுன்னு போட்டுத்தள்ளிட்டேன்...! ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா... எண்ணிப் பாருங்கள்...!’

  எப்படிப் பாத்தாலும் கயிறுலதான்... உன் உயிரு போகப் போகுது...!

  ‘எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்...!’ எத்தன வருஷமானாலும் இதைச் தெரிஞ்சிக்காம நா வீட்ட விட்டு நகரமாட்டேன்...!

  ‘மனம் போன போக்கிலே கால் போகலாமா...?!’ மானம் போகுது... விமானம் தரையிறங்கிடுச்சு... இறங்கு...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. மாலில் அதுதானே நடக்குது :)

   சில காரமாவது பண்ணலாமே :)

   நல்ல காரியம் செய்தீங்க ,நன்றி :)

   மிரட்டினால் காரியம் ஆகாதோ :)

   வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆசையா :)

   போதை இன்னும் தெளியலையா :)

   Delete
 3. Replies
  1. வேட்டிக்கு வந்த சோதனை கொடுமைதானே :)

   Delete
 4. Replies
  1. மாப்பிள்ளைக்கு வந்த சோதனையுமா :)

   Delete
 5. //''நல்லா வருவேன்னு எனக்கு நேமாலஜிப் படி பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''//

  இவரைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்!!!

  ReplyDelete
  Replies
  1. கவலையை விடுங்க அவர்தான் போய் சேர்ந்து விட்டாரே :)

   Delete
 6. இப்படிபட்ட நல்ல காதலி..கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்....

  ReplyDelete
  Replies
  1. காதலி இப்படி மிரட்ட காதலன் என்ன காரியம் செய்தானோ :)

   Delete
 7. காரமும் அதிகாரமும்! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியான வாழ்க்கை இனிக்கத் தானே செய்யும் :)

   Delete
 8. மாப்பிள்ளையின் அடம் ஹஹ்ஹஸ்

  காரம்..அதிகாரம்..ஹஹஹ

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ரோஷக்கார மாப்பிள்ளையாச்சே :)

   அலங்'காரம்' பண்ணிக்கவும் பிடிக்கும் :)

   Delete
 9. அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. g மெயில் எதுக்கெல்லாம் உதவுது பாருங்க :)

   Delete
 10. மனைவியின் அதிகாரம் நல்லாத்தான் இருக்கு. த.ம +1

  ReplyDelete
  Replies
  1. அவரோட கணவருக்கு பிடிக்க மாட்டேங்குதே :)

   Delete
 11. மனைவிக்கு மறுபெயர் அதிகாரம்தானே

  ReplyDelete
  Replies
  1. அதையும் அன்பாய் நினைத்தால் வம்பில்லை :)

   Delete
 12. வாசித்து இரசித்தேன் சகோதரா
  தமிழ் மணம்- 15
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. கொடாக்கண்ட மாமனாரும்,விடாக்கண்ட மாப்பிள்ளையும் செய்வது சரிதானா :)

   Delete