25 July 2017

ஹீரோ முத்தக் காட்சியில் நிறைய 'டேக் 'வாங்குவாரோ :)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது :)
          ''இந்த ஏட்டையா பழமொழியை மாற்றி விடுவார் போலிருக்கா ,ஏன் ?''
           ''இடது கை வாங்குவதை வலது கைக்குத் தெரியாம வாங்குறாரே !'' 
உயிருக்கு உயிரான நண்பர்கள் :)
      ''ஹலோ ,யாரு தினேஷா ?''
       ''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் படிச்சுக்கிட்டிருக்கான் !'' 
       ''சாரி ,ராங் நம்பர் !''

ஹீரோ முத்தக் காட்சியில் நிறைய 'டேக் 'வாங்குவாரோ :)
           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பைப் போட்டு ,முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''
பெரிய வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு :)
           ''ஏன்யா ,பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு போலீஸ் வேலைக் கிடைத்தும் ஏன் அனுப்பலே ?''
          ''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது ,அது அவமானமாச்சே சார் !''

மரணமில்லா  கனவுக்கன்னிகள் :)
இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467306

24 comments:

 1. Replies
  1. ராங் நம்பரையுமா:)

   Delete
 2. வலது கைக்குத்தான் தெரியவில்லை. கேமிராவுக்குத் தெரிகிறது!

  ராங் நம்பர் இல்லை, ராங் பெர்சன்!

  முத்தக் காட்சியில் நடிக்க முடியாமல் பல்வலி இருந்திருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,கேமிரா இருக்கும் இடங்கள்தான் தெரியவில்லை :)

   அதானே ,அவனாவது படிக்கிறதாவது :)

   அதை அவரல்லவா சொல்லணும் :)

   Delete
 3. ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது’ன்னு இனி யாரும் சொல்லக்கூடாதின்னுதான்...!

  இன்னைக்குத்தான் இந்த அதிசயம் நடந்திருக்கு... படிக்கிறானேன்னு பாத்தா பலானதைப் படிச்சிக்கிட்டு இருக்கானே...!

  நடிகையும் டூப்தானாம்... ஹீரோ கோவிச்சுக்கிட்டு போனா போகட்டும்... ரெண்டு டூப்புக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆயிடுச்சு... பணமும் மிச்சம் இதுகலப் போட்டே நாம படத்தை எடுத்திடலாமுன்னு சொல்றாரு...!

  இது மாதிரி அங்க சம்பாதிக்க முடியாதில்ல...!

  கனவுக் கன்னிகளை கண்ணி வைத்துத்தான் பிடிக்க வேண்டுமோ...?!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. கொடுப்பது வலது கை ,வாங்குவது இடது கை ....எதிர் எதிர் துருவங்கள் ஒன்று சேரும் என்பது இதற்கும் பொருந்துமா :)

   இதுக்கு படிக்காமல் இருப்பதே மேல் :)

   டூப்புகள் படம் என்றாலும் படம் சக்கைப் போடு போடும் :)

   தொழில் எதுவானாலும் சம்பாத்தியம் தானே முக்கியம் :)

   தேவையே இல்லை ,இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே :)

   Delete
 4. ''இடது கையில் வாங்குவதை வலது கைக்குத் தெரியாம வாங்குறாரே !''//

  எப்படி வாங்கினா என்ன, எல்லாம் மனைவி கைக்குப் போறதுதானே!!

  ReplyDelete
  Replies
  1. அப்படி போனால் கூட நல்லதே ,டாஸ்மாக் பக்கம் போகாமல் :)

   Delete
 5. Replies
  1. ஹீரோ நிறைய 'டேக் 'வாங்குவது திட்டமிட்ட செயல்தானே :)

   Delete
 6. ரசித்தேன் ஜி!

  த.ம. ஏழாம் வாக்கு!

  ReplyDelete
  Replies
  1. கனவுக்கன்னிகளுக்கு மரணமில்லைதானே :)

   Delete
 7. டூப் போட்டது தவறுதானே ஜி

  ReplyDelete
  Replies
  1. மறைக்க நினைத்தது அதை விட பெரிய தவறு :)

   Delete
 8. பெரிய வள்ளல் நன்கு

  ReplyDelete
  Replies
  1. செய்றது திருட்டு ,அதில் பெருமிதம் வேற :)

   Delete
 9. தொகை கூடுதலாக கொடுத்திருந்தால் டூப் போட வேண்டிய வேலையே இருக்காதே.....ஃ

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஹீரோயின் சப்போர்ட்டரா :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஏட்டையா வாங்குவதை அதிகமாவே ரசிக்க முடிந்ததா ஜி :)

   Delete
 11. போலீஸ் வேலை செம

  ReplyDelete
  Replies
  1. ஏட்டையாவுக்கு கையிலேயே கண் இருக்குமா ?திணிக்கப் படுவதை தட்டாமல் வாங்கிக்கிறாரே:)

   Delete
 12. ஒரு கைக்கு இன்னொரு கை துணை வேண்டுமா
  அம்மாவுக்குத் தெரியாதது நண்பனுக்குத் தெரிகிறது
  ஹீரோயின் கவலைப் படவே இல்லை
  வேலை கிடைக்குமா என்று பார்க்கத்தான் அனுப்பி இருப்பார்
  நினைவில் வந்தாலும்கனவுக்கன்னிகளா

  ReplyDelete
  Replies
  1. புருஷன் பெண்டாட்டி என்றால் வேண்டும்தான் :)
   உயிருக்கு உயிரான நண்பனாச்சே :)
   ஹீரோவின் டார்ச்சர் இல்லாமல் போனதாலா :)
   கூட்டாளி அந்த டிபார்ட்மெண்டில் இருந்தால் நல்லது என்பதாலா :)
   எல்லோரும் நினைவுக்கு வரமாட்டார்களே :)

   Delete