30 July 2017

இவர் வேகம் யாருக்கு வரும் :)

இப்படி கடித்தால் எப்படி பேசுவது :)
              ''மூணு  வருசமா இந்த கோவிலுக்கு நான் வந்து கிட்டிருக்கேன் !''
              ''ஏன் இவ்வளவு கஷ்டப் படுறீங்க ,வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கோவிலுக்குப் போக வேண்டியதுதானே ?''

இடுப்புக்காக குடமா ,குடத்துக்காக இடுப்பா :)
           ''பிரம்மன் கூட ஆணாதிக்கவாதின்னு  ஏன் சொல்றீங்க ?'' 
            ''தண்ணீர்குடம் வைப்பதற்கென்றே உருவான மாதிரி இருக்கே , பெண்ணின் இடுப்பு  !''  
திருஷ்டிப் பூசணிக் காய்க்கு பதிலாய் :)
            'புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,எங்க அம்மா போட்டோவை   'ஸ்க்ரீன் போட்டோவாய் 'வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

இவர் வேகம் யாருக்கு வரும் :)        
             ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரே நேரத்திலா ...அப்படியென்ன செய்வீங்க ?''
             ''  தினசரி ...காலண்டர் தாளை கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் :)
            'கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
            ''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....:)
சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467751

24 comments:

 1. சொந்தக் காசில் சூனியம்
  மிகச் சரியே...
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. அதுவும் அளவுக்கதிகமான செலவு :)

   Delete
 2. Replies
  1. தண்ணீர்க் குடத்தைத் தானே :)

   Delete
 3. அரசியல் தலைவர் மீதான (அவ)நம்பிக்கையை ரசித்தேன். தேதித்தாள் கிழிப்பவர் காத்திருந்து டிசம்பர் 31 ஆம் தேதி மொத்தமாகக் கிழிக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. தலைவருக்கு சாவியே தேவைஇல்லை என்பது வேறு விஷயம் :)
   சோம்பேறியிலும் கொஞ்சம் இவர் நல்ல சோம்பேறி :)

   Delete
 4. தலைவர் அவ்வளவு நல்லவரா ?

  ReplyDelete
  Replies
  1. பூட்டிய கோவிலுக்குள் நுழையத்தான் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும் :)

   Delete
 5. ''பிரம்மன் கூட...//
  அவரே ஒரு குயவன்தானே!!... “....நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி....”!!!

  ReplyDelete
  Replies
  1. போட்டு உடைத்தாண்டி என்று முடிக்க வேண்டியது தானே :)

   Delete
 6. ரசித்தேன்.

  த.ம. ஏழாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டப் பட வேண்டியது பிரம்மாவா ,பானை செய்த குயவனா :)

   Delete
 7. 'கோவில் உண்டியல்' ஜோக் அருமை. த ம.

  ReplyDelete
  Replies
  1. உண்டியலை உடைப்பதாய் வேண்டிக் கொண்டிருப்பாரா :)

   Delete
 8. பாவம் பிரம்மன் அவரை வம்புக்கு இழுத்து விட்டீர். மகளிர் அமைப்புகள் பிரம்மனுக்கு எதிராக கோஷமிடப்போகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. கோஷமிட மாட்டார்கள் ,தாய்மையின் படைப்பு வெளியே வர உதவுவது இடுப்பின் அமைப்புதானே :)

   Delete
 9. தலைவர் ரொம்ப நல்லவர் போல.. டூப்ளிகேட் சாவியை ரசித்தோம்!!!

  ReplyDelete
  Replies
  1. அவரைப் பற்றிய கணிப்பிலேயே தெரியுதே ,எவ்வளவு நல்லவரென்று :)

   Delete
 10. வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற கோவில் பிள்ளையார் கோவில்... களவாடிட்டு போயிட்டாங்க...!

  ‘தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது...!’

  ஒன்னோட படத்தை வச்சிருக்கேன்... பத்தாதா...?!

  நல்லா கிழிச்சீங்க... நல்லா வாயில வந்திடப் போவுது...!

  உண்டி அல் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்...!

  காசில்லாமல்தான் காதல் திருமணம்...!

  த.ம. 13

  ReplyDelete
  Replies
  1. பிள்ளையாரை சிலையை களவாடித்தான் புது கோவிலில் வைக்கணுமாமே :)

   மனசு ஏன் தவிக்கணும் ,வரண்டுக் கிடக்கிற நாக்குதானே தவிக்கணும் :)

   உங்க அம்மாபோல வருமா :)

   இன்னும் என்ன வரணும் :)

   சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் ,அது இவனுக்குத் தெரியாதா :)

   வாழ்க்கை வெளங்கிடும் :)

   Delete
 11. Replies
  1. நினைச்சாலே புல்லரிக்குதா:)

   Delete
 12. இருக்கும் இடம்விட்டு இல்லாத இடம் தேடுவாரடி குதம்பாய்.....
  தண்ணீர்குடமெடுத்து போகும் காலமெல்லாம்போச்சே
  காழ்ப்பு எப்படி எல்லாம் வெளியாகிறது
  ஸ்ரீராம் சொல்வதும் சிந்திக்க வைக்கவில்லையா
  பூட்டிய கோவிலா அல்லது பூட்டிய உண்டியலா எது தலைவருக்குப் பிடிக்கும்
  காதல் திருமணம் அவ்வளவு மோசமா

  ReplyDelete
  Replies
  1. தூரத்தில் இருக்கும் சாமிக்கு மட்டும்தான் சக்தி இருக்கா:)
   போனாலும் மறக்க முடியலியே :)
   காலத்துக்கு ஏற்ற மாதிரி :)
   வருடம் முடிந்ததும் ஏன் கிழிக்கணும் ,எறிந்தே விடலாமே :)
   எதுவாக இருந்தாலும் உடைக்கத் தான் பிடிக்கும் :)
   ஒரு, ம் சேர்த்து இருக்கேனே :)

   Delete