4 July 2017

தூங்கியும் மனைவிக்குத் தொல்லைத் தருவதா :)

         ''உனக்கு  தூக்கம் வர்றவரைக்கும் நான் பேசிகிட்டே  இருக்கணுமா ,ஏன் ?''
        ''முதலில் நீங்க தூங்கிட்டா ,உங்க குறட்டைச் சத்தத்தால் எனக்குத் தூக்கம் வரமாட்டேங்குதே !''

பெண்களுக்கு இது ஒண்ணுதான் பாக்கி :)
          ''அவளுக்கு பணக்காரத் திமிர் அதிகம்னு ஏன் சொல்றே ?''
          ''தொண்டை அணி விழான்னு பத்திரிகை வைச்சிட்டுப் போறாளே !''
தொப்பை , பெண்களுக்கு  அழகாய் இருக்கலாம் :)
           ''நான் மப்டியில் இருந்தாலும் போலீஸ்னு தெரிய ,தலைக்கு போலீஸ்  கட்டிங் போட்டிருக்கேன் ..யாரும் என்னைப் பார்த்து பயப்பட மாட்டேங்கிறாங்களே ?''
          ''இப்படி டிரிம்மா வயிறு இருந்தா ,போலீஸ்னு யாராவது  நம்புவாங்களா ?''

முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி :)
          ''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
           ''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது  அபசகுனமாபடுதாம் பையனுக்கு !''

இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் :)
தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்ததாம் இந்தியா !


இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465293செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

39 comments:

 1. இந்தக் காலத்துல புருஷன்மார் மட்டுமா குறட்டை விடுறாங்க பகவான் ஜீ? என்ற கேள்வியோடு,

  இனிய இரவு வணக்கம் ஜீ... நலமோ?

  ReplyDelete
  Replies
  1. மனைவிக்குத் தொல்லை ,புருஷனால் தானே :)

   நலத்துக்குத் தான் நேற்றிரவு நல்ல கொர்கொர்:)

   Delete
 2. 'தொண்டை அணி விழா' ஆஹா ஆஹா நல்லா இருக்கே வசனம். 😊😊

  ReplyDelete
  Replies
  1. இத்தனை விழாவுக்கும் மொய் வைக்க எங்கே போறது ஜி :)

   Delete
 3. போலீசின் இலக்கணமே தொப்பை என்று ஆகிடுச்சுல்ல ஜீ :)

  ReplyDelete
  Replies
  1. வேலைக்குச் சேர்ந்த பின் இப்படியாகி போச்சு:)

   Delete
 4. மொபைல்வாசிகளுக்கான தமன்னா எங்க ஜீ?

  ReplyDelete
  Replies
  1. இதோ ,இப்போ இணைச்சாச்சு ஜி :)

   Delete
 5. வணக்கம் ஜி !

  என்னது தொண்டை விழாவாவா வா வா வா வா .................................................................

  இனிக் கொண்டை விழா மண்டைவிழா என்றும் வரும்போல
  நடக்கட்டும் ஜி
  ஆமா பொலிஸ் னா தொப்பை அவசியமாச்சே

  தமன்னா ஒன்று பாஸ்

  ReplyDelete
  Replies
  1. இருக்கிறவன் நடத்துறான் ,இல்லாதவன் மண்டையைப் பிய்ச்சுக்கிறான் :)

   தொப்பை இல்லா போலீசா ?நினைச்சுக் கூட பார்க்க முடியலயே:)

   Delete
 6. ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியா பணக்கார நாடு,இந்தியர்கள் ஏழைகள் என்பதும் உண்மைதானே ஜி :)

   Delete
 7. Replies
  1. தொண்டை அணி நல்லாவா இருக்கு :)

   Delete
 8. முதலில் நீ தூங்கிட்டா ஒ குறட்டைச் சத்தத்தால் எனக்குத் தூக்கம் வராதே... அப்ப என்ன பண்ணறது...?!

  தொண்டை செய்து பழுத்த பழம்...!

  வயிறு உள்ள போலிஸ் பிழைத்துக்கொள்ளுமுன்னு சொல்லுங்க...!

  தாலிய நல்ல நேரம் முடியறதுக்குள்ள நீங்க கட்டுறீங்களா... இல்ல நா கட்டட்டுமா... சுப்பிரமணி சாமி முன்னாடின்னு கேக்கிறாரே...ஐயரு...!

  ‘தென்னை இள நீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக...’செவ்வாயின் செவ்விள நீருக்குத்தான் சுவை அதிகமாமே...அதனால் இருக்குமோ...?!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. வேற வழியே இல்லை ,ஆளுக்கொரு அறையில் தூங்க வேண்டியதுதான் :)

   திங்கிறதைப் போய் தொண்டுன்னு சொல்லமுடியுமா :)

   வயிறு வளர்க்க மாமூல் வாங்கியா :)

   வில்லன்களா சுற்றியிருப்பாங்க போலிருக்கே :)

   சுவையா இல்லையான்னு ஆராய அவ்வளவு தூரம் போவானேன் :)

   Delete
 9. //சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு//

  ஐயருக்கு வேறு கல்யாணம் இருக்குமாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக அவர் குறிச்சுக் கொடுத்த நேரத்துக்கு முன்னாடியே தாலி கட்ட முடியுமா :)

   Delete
 10. பணத்திமிரு கூடுதலாகத்தான் தெரியுது ஜி

  ReplyDelete
  Replies
  1. இந்த தொண்டை அணியை எப்படி கழற்றி மாட்டுறது ஜி :)

   Delete
 11. Replies
  1. தொண்டை அணி கூட அழகுதானே ஜி :)

   Delete
 12. Replies
  1. ட்ரிம்மா இருக்கிற போலீஸை, உங்க வயசுக்கு நீங்களாவது பார்த்து இருக்கீங்களா அய்யா :)

   Delete
 13. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 14. இந்தியா பணக்கார நாடு இந்தியர்கள் ஏழைகள் என்று அந்தக் காலத்தில் வி கே கிருஷ்ண மேனோன் சொன்னதாகப் படித்த நினைவு அனைத்தையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. உலகத்தின் ஏழாவது பணக்கார நாடு இந்தியாவாம் ,ஆனால் ,பணம் யாரிடம் இருக்கிறது ?
   கஞ்சிக்கே வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில்தான், 5500 கோடியில் ஒருவரே வீடு (?) கட்டிக் கொண்டுள்ளாரே :)

   Delete
 15. தொண்டை அணி விழா புதுசா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. மொய் வசூலுக்கு ஒரு விழாவும் இல்லைன்னாலே, வசந்த விழான்னு அழைப்பாங்க ...இனி தொண்டை அணி விழா:)

   Delete
 16. நல்லாயிருந்தது. ஆனா தொண்டை படம்தான் பயங்கரம். த ம போட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் அணிந்து கொள்ளலாம் என்ற பயங்கர ஐடியா எப்படித்தான் வந்ததோ :)

   Delete
 17. கற்பனை கொடி கட்டி பறக்குது.

  ReplyDelete
  Replies
  1. தொண்டை அணியைப் பார்த்துச் சொல்றீங்க என்று நினைக்கிறேன் ,சரிதானா மேடம் :)

   Delete
 18. ரசிக்கும்படி அனைத்தும் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. தாலி கட்டும் நேரத்தில் நல்ல நேரம் முடியறதுன்னு சொல்லக் கூடாதுதானே ஜி :)

   Delete
 19. தொண்டை அணி விழா பயமுறுத்துதே....ஹஹஹ..

  ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. சோறு முழுங்கும் போது தொண்டை அணியும் உள்ளே போயிடுமோன்னு எனக்கு பயமாயிருக்கு ஜி :)

   Delete