7 July 2017

பெண் என்றாலே பணக் கஷ்டம்தானா:)

            ''பொண்ணோட அப்பா ,பணக் கஷ்டத்தில் இருப்பார் போலிருக்கா ,ஏன் ?''
           ''கல்யாணப் பத்திரிக்கையில் 'உங்களின் வரவையும் ,உங்களால் வரவையும் எதிர்பார்க்கும் 'ன்னு போட்டிருக்காரே !''

வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
                 '' வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,கண்டிஷன் போடுறாளா, என்னான்னு ?''
                  ''வீடு  முழுவதும் ஏர் கண்டிஷன்  ஆக்கணுமாம் !''

இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் :)
            ''ஃபிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
           ''ஃபிரிஜ்ஜை  எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,வேற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
நிம்மதி ...இரு மனைவிகளால்  வருமா :)
            ''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கீயா ,எப்படி ?''
           ''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''

இரத்தம் தேவைப்படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !

மொபைல்வாசிகள் தமிழ்மண  வாக்களிக்க  இதோ லிங்க் ......http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465587

36 comments:

 1. ஹாய் ஜீ, வணக்கம் வணக்கம் செம பிசி... அதான் 2 நாளா வர்ல

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காக என்ன செய்து இருக்கிறேன் ,பார்த்தீங்களா ஜி :)

   Delete
 2. உங்களின் வரவையும் ,உங்களால் வரவையும் எதிர்பார்க்கும் 'ன்னு போட்டிருக்காரே !'' /// ஹா ஹா இந்த வாக்கியத்த நோட் பண்ணி வைக்கணும்... தேவைப்படும் :) :)

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தேவைப் படுமா :)

   Delete
 3. வேலைக்காரி கண்டிஷன் - பார்ராஆஆஆஆ...

  ReplyDelete
  Replies
  1. நீங்க இருக்கிற பிரான்ஸில் கூட இப்படி கண்டிஷன் போட ஆளிருக்காதே :)

   Delete

 4. ​"உங்கள் வரவையும், உங்களால் வரவையும்.."

  ஆஹா... சூப்பர்! மொய்விருந்து கூட இதற்காகவே நடத்தப்படுவதுதானே ஜி! நல்ல சொல்லாடல்.

  இருமனைவிகளுக்கான நொண்டிச்சாக்கையும், ஃப்ரிட்ஜ் வேறு மாடல் கேட்கும் கணவனையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. . மொய் விருந்து பத்திரிக்கையில் இப்படியே அடிக்கலாம் தானே :)

   Delete
 5. பெண்ணோட அப்பா விபரமானவர்தான்.

  ReplyDelete
  Replies
  1. இல்லைனா வரதட்சணைக் கொடுத்து கல்யாணம் பண்ண முடியுமா :)

   Delete
 6. ஜி..... எஸ்.டி. வேற... மலையாய்த் தெரியுதுன்னு பயப்படுறார்...!

  அதெல்லாம் செய்து கொடுத்திடலாம்... நான் ஒரு கண்டிசன் போடுவேன்... சரியா...?

  லைட்(டா)ட அணைக்க வேண்டியதுதானே...!

  மூனாவதா ஒருத்தி வந்து நிக்கிறான்னுதான் சண்டையாம்...!

  எல்லாப் பக்கமும் கடிவாங்க வேண்டியதானே இருக்கு...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. மலைபோல் வரும் துன்பங்கள் பனி போல் கரைந்து விடாதா :)
   அம்மாவிடம் கேட்டுச் சொல்றேனே :)
   அப்புறம் பிரிட்ஜ் வேலை செய்யாதே :)
   நியாயமான சணடைதானே :)
   கொசு விரட்டி வீட்டில் இல்லையா :)

   Delete
 7. Replies
  1. பிரிட்ஜ் நல்லாயிருக்கா :)

   Delete
 8. //உன் புருஷன் மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''//

  இதையெல்லாம் ஒரு தர்மபத்தினி வெளியே சொல்லலாமா?!

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வந்தா சொல்ல வேண்டியிருக்கே :)

   Delete
 9. அருமை தோழர்

  ReplyDelete
  Replies
  1. பணக் கஷ்டம் தீர நல்ல வழி தானே :)

   Delete
 10. ''ஃபிரிஜ்ஜை எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,வேற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
  ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி தானே :)

   Delete
 11. உங்களால் வருபவரையும் என்று இருக்கலாமோ
  மூலையைத் துடைக்க 11 லட்சம் கேட்கும் வேலைக்காரிகளும் இருக்கிறார்களே
  ஸ்விட்சை ஆஃப் செய்தால் லைட் எரியாது என்று சொல்லி விற்று விட்டால்.....
  மூன்றாவது ஒருத்தி வந்தால் என்பதால் சண்டையோ
  ஹை.... பல நாட்களுக்குப் பின் மீண்டும் கொசு.......

  ReplyDelete
  Replies
  1. அது சரியாக வராதே :)
   தாராளமா தரலாமே :)
   பல்புக்கு ஏது ஸ்விட்ச் :)
   உரிமைப் போரா :)
   கடி சரிதானே :)

   Delete
 12. சிரிக்க வைத்த நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. அசர வைத்த உங்கள் வாக்கு :)

   Delete
 13. நகைச்சுவையை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. மொய்க்கு நல்ல வரவேற்பு தானே :)

   Delete
 14. Replies
  1. உங்கள் ரசனைக்கு நன்றி கூற தாமதம் ஆனதுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் ஜி :)

   Delete
 15. முதல் ஜோக்கே அருமை

  ReplyDelete
  Replies
  1. இப்படி நாசூக்காய் கேட்பதும் ஒரு கலைதானே:)

   Delete
 16. மாப்பிள்ளையோட தாய் மாமனுக்கும் இப்போ பணக் கஷ்டம்தான் நண்பரே.....

  ReplyDelete
  Replies
  1. எந்த கஷ்டம் என்றாலும் கடன் வாங்கியாவது செய்தாகணும் ,இல்லைன்னா ,நாய்க்கு கிடைக்கிற மரியாதைக் கூட தாய் மாமனுக்கு கிடைக்காது :

   Delete
 17. Replies
  1. மெய்யைச் சொன்னதால் அது மெய் விருந்தும்கூட :)

   Delete
 18. மொய்..சொல்லாடல் அருமை ஜி....அனைத்தும் ரசித்தோம்.....

  ReplyDelete
  Replies
  1. ரசிக்க முடிந்தாலும் ,அந்த மொய்க்குப் பின்னால் இருக்கும் சோகம் ,பரிதாபப் பட வைக்கிறதே ஜி :)

   Delete