26 July 2017

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் :)

 'பல்பு 'வாங்கியதால் வந்த ஞானம் :)
               ''இனிமேல் முதல் நாள் முதல் ஷோ போகவே கூடாதுன்னு ஏன் சொல்றே ?''
                 ''முத்தக் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டு ஏமாற்றி விட்டார்களே !''
'பல்பு 'தந்த முத்தக் காட்சிகள் .....

அவரவர் நியாயம் :)   
           ''கஷ்டப் பட்டு சம்பாதிக்கிற பணம்தான் நிலைக்கும்னு உனக்குத் தெரியாதா ?''
             ''அதனால்தானே பூட்டியிருக்கிற வீட்டையும் ,பீரோவையும் கஷ்டப் பட்டு உடைச்சு சம்பாதிக்கிறேன் ?''

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் :)
         ''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா போயிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய் விட்டானே !''

' தேவதை ' மனைவி 'தேவைதானா ' மனைவி ஆனதேன் :)
          ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
          ''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு :)
சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !
அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?
       கமெண்ட்டுக்கு  கமெண்ட்  ...
இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...
chandrasekaran narayanaswami
உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
Ashok Kumar
 கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)
Bagawanjee KA
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் வரும்பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !
Ashok Kumar
 ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467388

24 comments:

 1. முதல் ஷோதான் போகக்கூடாது. ஆனா, முதல் கமெண்ட், ஓட்டு போடலாம்.

  ReplyDelete
  Replies
  1. அதான் thooya நட்புக்கு இலக்கணம் :)

   Delete
 2. Replies
  1. கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும் என்று சொல்லும் விளம்பரம் நினைவுக்கு வருதா :)

   Delete
 3. ‘லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா. என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா காதில் மெல்ல காதல் சொல்ல...’ எதிர்பாராத முத்தம்...!

  பணம் நிலைக்காம போகும்போதே புரியஞ்சிக்க... கஷ்டப் பட்டு சம்பாதிக்காத பணம்தான் நிலைக்காதுன்னு உனக்குத் தெரியாதா ?

  நர்ஸ்ஸோட வயிறு தள்ளிக்கிட்டு வர்றப்பவே தள்ளிவிடப் பாத்திங்க... யாரோ பாவம்... இனிமேலாவது அவளுக்கு ஒரு வாழ்க்கை அமையட்டுமே...!

  அப்புறம் ஏங்க ஒங்களக் கண்டா குரைக்க மாட்டேங்கிது... இனம் இனத்தோடு சேர்ந்திடுச்சா...?!

  சித்தார்த் எல்லாம் கல்யாணம் பண்ணித்தானே புத்தனாக முடிகிறது...!

  ‘பிக் பாஸ்’தானே...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் ரசிக்கிற மனநிலையில் நம்மாளு இல்லையே :)

   உழைத்து சம்பாதித்த பணம்தான் உருப்படியாகும்னு சொல்லலாமா :)

   எங்கிருந்தாலும் வாழ்க :)

   இதுக்கு பேயே தேவலே :)

   இல்லைன்னா நித்தி மாதிரி ரிவர்ஸ் கியர் போடவேண்டி வருமே :)

   peak பாஸ் :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன், முத்தத்தை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. அதிலும் அந்த கிளி முத்தம் சூப்பர் தானே :)

   Delete
 5. Replies
  1. முத்தம் ரசிக்க வைக்கிறதா :)

   Delete
 6. பீரோவை உடைக்கிறது கஷ்டமான வேலைதானே ஜி

  ReplyDelete
  Replies
  1. அதுவும் குறுகிய நேரத்தில் என்றால் சும்மாவா :)

   Delete
 7. முதல் காட்சி! வடைபோச்சே த ம 10

  ReplyDelete
  Replies
  1. முத்தக் காட்சி இல்லாமல் போனதும் வடை போன மாதிரிதானே :)

   Delete
 8. ரசித்தோம் முதல் காட்சியை...ஸாரி ஸாரி முத்தக் காட்சிகளை!!! நாலு கால்கள் எப்போதுமே அழகுதான்!!!

  ReplyDelete
  Replies
  1. கமலின் முத்தக் காட்சி என்றால் நம்பி போகலாமோ :)

   Delete
 9. சில காட்சிகள் எத்தனை முறை போய்ப் பார்த்தாலும் வராது .
  எப்படி சம்பாதித்தாலும் நில்லாது ஓடிடும்பணமே
  நர்சின் வயிறு தெரிய ஆரம்பிக்க எவனோ தள்ளிக் கொண்டு போனது டாக்டருக்கு நல்லதுதானே
  சாமி பூதம் எல்லாம் உண்ர்வா நம்பிக்கையா
  கோணலானாலும் என்னோடதாக்கும் உண்மை தானே

  ReplyDelete
  Replies
  1. பல்பு தந்த காட்சிகள் வந்த தாமே :)
   நல்ல வழியில் போனால் சரிதானே:)
   அதுக்கு காரணம் அவன்தானா :)
   குருட்டு நம்பிக்கை தான் :)
   நீங்களே வச்சுக்குங்க :)

   Delete
 10. அவரவர் நியாயத்தில் அவர் சொல்வது சரியே!

  ReplyDelete
  Replies
  1. திருடனுக்கும் நியாயமா :)

   Delete
 11. Replies
  1. நாயையும் பேயயையுமா :)

   Delete
 12. அழகான முத்த காட்சிகள் நன்று

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அவர் இதை எதிர் பார்க்காமல் ஏமாந்து போயிட்டாரே :)

   Delete