12 July 2017

மாமியார் வீட்டில் இருக்க நினைப்பது தவறா :)

படித்ததில் இடித்தது :)
          ''பெண்டாட்டியை எதுக்கு என் வீட்டு 'இலுமினாட்டி'ன்னு சொல்றே ?'' 
           ''இந்த வீட்டிலே எல்லாவற்றையும் அவதானே முடிவு செய்யுறா !'' 
இடித்த செய்தியின் தொடுப்பு ....உண்மையில் இந்த உலகை ஆள்வது இலுமினாட்டிகள் தான் !
இப்படியும்  சந்தோஷம் வருமா :)     
             ''வேலைக்கே லாயக்கில்லைன்னு மேனேஜர் உன்னைச் சொன்னாரே ,வருத்தமாயில்லையா ?''

            ''உன்னையும் அப்படி சொல்றதைக்  கேட்க சந்தோஷமா இருக்கே  !''

மாமியார் வீட்டில் இருக்க நினைப்பது தவறா :)
           ''வீ ட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?''
            ''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் வீட்டு'லேதான்  இருக்கேன்னு திருட்டுப் பயலுங்க  வந்து நிற்கிறாங்க !''

நடிகைக்கு  எந்த கூச்சமும் இருக்காதா :)
          ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
           ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''

நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...:)
              ''முதலாளிக்கு நண்டுன்னா  பிடிக்கும் !''
              ''பிறகேன் ,தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச்  சொன்னா மட்டும் ,பிடிக்க மாட்டேங்குது ?''

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466050

32 comments:

 1. பர்மனண்டு சூப்பர்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. நண்டு மத்த நண்டை ஏற விடாதில்ல...!
   என்று சொல்லியிருக்கும் மணவை ஜேம்ஸ் ஜியின் கருத்தும் சூப்பராயிருக்கே:)

   Delete
 2. இந்த இல்லுமினாட்டிகள் பற்றிய தகவல் உண்மையிலேயே குழப்பும் ஒன்றுதான்!

  பல் கூச்சம்... ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஒரு காலத்தில் இந்த உலகமே ஒற்றைக் கண்ணன் ஆட்சியின் கீழ் வரும் என்பதெல்லாம் வெறும் கற்பனையே :)

   வரும்தானே :)

   Delete
 3. Replies
  1. நண்டு கறியும் சூப்பர் தானே :)

   Delete
 4. 'இலுமினாட்டி'கள் உள்ளே தள்ளு...வெளியே இழு!

  யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்...!

  திருடன் கையில் சாவியைக் கொடுக்க வேண்டியதுதான்...!

  இதைச் சொல்ல ஏன் கூச்சப் படுறீங்க...?!

  நண்டு மத்த நண்டை ஏற விடாதில்ல...!

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. எதை எங்கே தள்ளுறது ,இழுக்கிறது என்றே புரியலியே :)

   நல்ல கொள்கை தான் :)

   வெளங்கிடும் :)

   அதானே ,முழுக்க நனஞ்ச பிறகு ....:)

   இது உண்மைதானா :)

   Delete
 5. நடிகைக்கு எந்த கூச்சமும் இருக்காதா :)//

  கூச்சம் நாச்சமெல்லாம் இருந்தா நடிகை ஆக முடியுமா?!

  ReplyDelete
  Replies
  1. துணியே துணையில்லையா :)

   Delete
 6. நடிகை என்றாலும் அவளும் பெண்தானே...

  ReplyDelete
  Replies
  1. அதனால்தானே மொய்க்கிறார்கள் :)

   Delete
 7. Replies
  1. உண்மையில் வீட்டோடு மாப்பிள்ளையாய் வர தகுதியானவர் தானே :)

   Delete
 8. நிஜமாவே இலுமினாட்டிகளின் ராஜ்ஜியம்தான் நடக்குதா

  ReplyDelete
  Replies
  1. அருமையான கற்பனை தான் :)

   Delete
 9. என்னைக்கு பொண்ண கட்டி கொடுத்தமோ...அன்னைக்கே தொலஞ்சது...பிற்நத வீட்டு வருமானம் சேமிப்பு, சொத்து பத்து... எனது அனுபவம்,...

  ReplyDelete
  Replies
  1. வலிப் போக்கனுக்கே இந்த வலியா :)

   Delete
 10. Replies
  1. நண்டு ருசி கண்டவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள் :)

   Delete
 11. Replies
  1. இல்லாள் ,இலுமிநாட்டிதானே :)

   Delete
 12. இப்படியும் சந்தோஷம் வருமா :)
  வருகிறதே ! சிலருக்கு.

  //தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச் சொன்னா மட்டும் ,பிடிக்க மாட்டேங்குது ?''//
  எப்படி பிடிக்கும்?
  போனஸ் போன்ற பல சலுகைகள் வழங்க வேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என்று ன் நினைக்கிறாரோ :)

   கொடுக்க மனசு வராதே :)

   Delete
 13. இல்லுமினாட்டிகள் குறித்து சதிகார உலகமென்னும் பதி எழுதி இருந்தேன் படித்தீர்களா
  அற்ப சந்தோஷம்
  வீட்டோட மாப்பிள்ளைக்கு ராஜ மரியாதை சாவிக் கொத்து பத்திரம்
  நடிகைகளும் பெண்கள் தானேகூச்சம் நடிகர்களுக்கு இல்லையா

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ,தேடிப் படிக்கிறேன் :)
   தன் பணத்தையே கொள்ளை அடிப்பானோ :)
   நடிகைக்கே இல்லை ,நடிகருக்கு இருக்காதே :)

   Delete
 14. இலுமினாட்டிகள் என்று ஒரு குழு இருக்கிறது என்று சொல்லப்பட்டுவந்தாலும் அது உண்மையா பொய்யா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது இல்லையோ ஜி??!! அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் கூட பேய் பிசாசு மாதிரி கற்பனை என்றுதான் தோன்றுகிறது ஜி :)

   Delete
 15. பல் கூச்சம் நன்றாகத்தான் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. நல்லாத்தான் இருக்கும் ,அது நமக்கு வந்தால்தானே தெரியும் :)

   Delete
 16. ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க!'' என்றால்
  செஞ்சோடைன் வாங்கிப் பல் துலக்கச் சொல்லி இருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. செஞ்சோடைன் பேஸ்ட்டுக்கு நாம ஏன் விளம்பரம் செய்யணும்னு நினைத்திருப்பார் :)

   Delete