27 August 2017

சைட் அடிக்க 14 நொடி போதுமா :)

சைட் அடிக்க 14 நொடி போதுமா :)
            ''ஒரு பெண்ணை பதினான்கு நொடி தொடர்ந்து பார்த்தாலே சட்டப்படி  தப்பு ,ஒரு கண்ணை வேற மூடி மூடித் திறந்தியாமே  ,ஏன் ?''
             ''கண்ணை  மூடித் திறந்தா ஒரு நொடியாமே , கணக்கு தெரியணும்னுதான் , அப்படி செஞ்சேன் !''
இது உண்மைதானா :)              
            ''என்னங்க ,  என்னைக் கண்டதும் நாய்ங்க எல்லாம்    குரைக்குதே,ஏன் ?'' 

           ''  பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியுமாமே  ,அதனால் ஆயிருக்கும் !''

பெயர் ராசியில்லாம போயிடுச்சே :)
         ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
         ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''

புதிய காதலரா ,பழைய கணக்கை முடிப்பார் :)
              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ' ஐஸ் வாங்கின கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் :)
 தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
 சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
 பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
 பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?

28 comments:

 1. நான் சிரிச்சிட்டுப் போறேன் என பகவான் ஜீ இடம் சொல்லி விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).

  ReplyDelete
  Replies
  1. எதை நினைச்சி சிரிச்சீங்கன்னு கேட்கிறாரே :)

   Delete
  2. ஹையோ என்னாச்சு பகவான் ஜீ.. யாரோ மைனஸ் வோட்டும் போட்டிட்டினமோ.. கை மாறித்தட்டுப்பட்டு விட்டதோ?.. கவனிச்சீங்களோ மேலே...

   Delete
  3. யாராவது தன்னிலை விளக்கம் சொன்னால் தவிர மைனசுக்கு காரணம் தெரியாது போலிருக்கே ,அந்த நல்ல மனம் வாழ்க :)

   Delete
 2. முதல் ஜோக் முன்னாடியே வந்துட்டுதோ? மற்றவற்றையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. நேற்று பதிவு போட இரவு ரொம்ப தாமதமாகி விட்டது ,முதல் ஜோக்கை டிங்கரிங் செய்வதற்குள் தூக்கம் அசத்தி விட்டது ஜி :)

   Delete
 3. Replies
  1. மனு நீதி சோழன் செய்தது சரியா :)

   Delete
 4. மனுநீதிச்சோழன் பொருததமானவர்தான்.

  ReplyDelete
  Replies
  1. மன்னா இவரை மன்னியுங்கள் :)

   Delete
 5. ‘ஒரு பக்கம் பாக்குறா... ஒரு கண்ணை சாய்கிறா... அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா ....!’ கண்ணை மூடித் திறந்தா ஒரு மாத்திரையா...?! இல்ல ஏமாத்திரியா...?! கண்மூடிப் பழக்கம் மண்மூடிப் போக...!

  அப்புறம் ஏங்க நீங்க மட்டும் குரைக்கமாட்டேங்கிறீங்க...?!

  ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது... சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது’

  அவன் போனா என்ன...? இப்பத்தான் இவனுக்கு ஐஸ் வச்சாச்சே...!

  இந்தியர்கள் முட்டாள்கள் என்பது தொண்ணூறுசதம் உண்மை இல்லாமல் இல்லை... இது நூற்றுக்கு நூறு உண்மை...!

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. வாலிபம் இருக்கும் நாள் வரையிலும் மண் மூடி போகாதே இந்த பழக்கம் :)

   பழக்கமான பேயைப் பார்த்து குரைக்கத் தோணலே :)

   இவரா பெரிய மனுஷன் :)

   இவன் கணக்கே இனிமேல்தானே :)

   இதை அவரே ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாறோ :)

   Delete
 6. அடடா....சைட் அடிக்கிற.இந்தக்கணக்கு தெரியாம.....போச்சே................

  ReplyDelete
  Replies
  1. தெரியாம போனதும் நல்லது தான் :)

   Delete
 7. ' ஐஸ் வாங்கின கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''//

  சுண்டல் வாங்கின கணக்கைச் செட்டில் பண்ணிட்டானோ?!

  ReplyDelete
  Replies
  1. அது அவன் பாடு !


   இங்கே த ம கணக்கில் உதைக்குதே ,நம்ம தோட்டத்தில் நுழைந்த கருப்பாடு யார் என்று தெரியுமா ஜி :)

   Delete
 8. Replies
  1. இன்னிக்கு நல்ல ஓய்வா ஜி :)

   Delete
 9. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. கேரளாவில் தான் இந்த நொடிக்கணக்கு ஜி :)

   Delete
 10. ரசிக்கும்படி இருந்தது.

  அது ஏன் 14 நொடி கணக்கு? அப்போ கணக்கு வச்சுக்கிட்டு 12 நொடி பார்த்தால் தப்பில்லையா?

  ஜோக்குல ஏன் என்.ஆ.ஐக்களைக் கொண்டுவர்றீங்க? அவங்களை ரெண்டுவிதமாப் பார்க்கலாம். (1) உள்ளூர்ல வேலை கிடைக்காம வெளியூர்ல வேலை தேடினவங்க (2) இந்தியால உள்ள மத்தவங்களை கடாசிட்டு, அவங்களை மட்டும்தான் வெளியூர்க்காரங்க வேலைக்கு எடுத்துருக்காங்க. எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படி % சொல்லிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. என்ன கணக்கு கேரளா போலீசிடம் தான் கேட்கணும் ,இந்த சட்டம் வந்தது அங்கேதான் :)

   என் ஆர் ஐக்கள் வாழ்க்கையில் பல தியாகங்களைச் செய்து முன்னுக்கு வர நினைப்பவர்கள் என்பதால் புத்திசாலிகள் என்ற கணக்கில் கொண்டுவந்தேன் :)

   Delete
 11. தேவர்கள் கண்களை மூடவே மாட்டார்களாம் அவர்கள் சைட் அடித்தால்பிடிபட முடியாதே
  பேய்கள் நாய்கள் கண்களுக்குத் தெரியும் யார் விட்ட புருடா இது
  அவருக்கு நீதி கொடுக்கத்தாந்தெரியுமாம்

  இன்னும் எத்தனை பேர் வரிசையில் வருவார்களோ
  அவர்கள் பணம்பண்ணத்தெரிந்த புத்திசாலிகள்

  ReplyDelete
  Replies
  1. தேவர்கள் சைட் அடிக்க கொடுத்து வைத்தவர்களா :)
   எந்த நாய் சொல்லிச்சோ :
   நிதி வாங்கத் தான் தெரியும்னும் சொல்லலாம் :)
   இனிமேல் தான் தெரியும் :)
   அதைதான் நானும் நினைத்தேன் :)

   Delete
 12. அருமையான பதிவு த.ம

  ReplyDelete
  Replies
  1. அடி முதல் முடி வரை படித்தீர்களா ஜி :)

   Delete
 13. அனைத்தையும் இரசித்தேன்! சிரித்தேன்!!

  ReplyDelete
  Replies
  1. ஊழல் பேர்வழிக்கு பெயர் மனு நீதி சோழனாம் ,ரசிக்க முடியுதா :)

   Delete