10 August 2017

நடிகையின் பிறப்புரிமையில் தலையிடலாமா :)

பார்த்ததில் இடித்தது :)
                  ''திருவிழாவில் ,பஞ்சுமிட்டாய் விற்கிறவங்களை மட்டும் கவனித்துப் பார்த்துகிட்டே இருக்கீங்களே ,ஏன் ?''
                  ''பஞ்சு மிட்டாயை தூக்கக் கூட நம்மாளுங்களாலே முடியலியா , விற்கிறவன் எல்லாமே வடக்கத்திகாரனாவே இருக்கானே !''
ரயிலில் இருந்த பல கோடி கொள்ளையாமே :)              
              ''கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும் என்பதை  ரயில் கொள்ளைக் காரங்க  நம்பவில்லை போலிருக்கா  ,ஏன் ?''

             ''அவர்களே , ரயிலின் மேற்கூரையைப் பிரித்துக் கொள்ளை அடித்திருக்கிறார்களே !''
   (இந்த கொள்ளை நடந்து இன்றோடு ஒரு வருடமாகி விட்டது ,ஆனால் ,கொள்ளை அடித்தவர்கள் பிடிபடவில்லை :)

குடிகாரன் பேச்சு காலில் விழுந்தாலே போச்சு :)                     
               ''இனிமேல் குடிக்க மாட்டேன்னு உன் கால்லே விழுந்து சொன்ன , புருஷனை மன்னிக்க முடியாதுன்னு ஏன் சொல்றே ?''
               ''என் கொலுசைக் காணாமே!''
இலவச சினிமா இந்த தியேட்டரில் :)
          '' அடப் பாவி ,உனக்கு  மயக்க மருந்து கொடுத்து  ஒரு மணி நேரமாச்சே,  மயக்கம் வரலையா ?''
            ''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''

நடிகையின்  பிறப்புரிமையில் தலையிடலாமா :)
          ''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
           ''டைவர்ஸ் நீங்க என்ன கேட்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''

கரெண்ட் பில் எப்படி குறையும் :)
  உடனே குப்பையில் எறியவேண்டியதை
  நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
  நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!  

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468935

34 comments:

 1. ஆம் எப்பவும் முன் மொழிவது
  நடிகையாகத்தான் இருக்கணும்
  அதுதான் கெத்து
  கொலுசு விஷயம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. நடிகை விவாகரத்து என்றுதானே தலைப்பு செய்தியில் வர வேண்டாமா :)
   மிஞ்சி நிற்பது மிஞ்சி மட்டும்தானே :)

   Delete
 2. Replies
  1. உங்க வாக்குக்கும் ,த ம வாக்குக்கும் நன்றி ஜி :)

   Delete
 3. வடநாட்டான் பலசாலியோ ஜி

  ReplyDelete
  Replies
  1. பலசாலியோ இல்லையோ இங்கே வந்து பிழைக்கிறானே ,புத்திசாலி தானே :)

   Delete
 4. விக்கறவன் எல்லாம் வடக்கத்தி ஆளா இருக்கானே..... :( நம்ம ஆள் பாட்டிலும் கையுமா இல்ல இருக்கான்....

  த.ம. நாலு.

  ReplyDelete
  Replies
  1. சரியாக பாயிண்டை பிடிச்சீட்டிங்க ஜி :)

   Delete
 5. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. இலவச சினிமா எப்படி ஜி :)

   Delete
 6. வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது… இதுதானோ…?!

  கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சால் கொடுக்குங்கிறத தெரிஞ்சி வைச்சிருக்காங்களோ…?! முதலாமாண்டு நினைவுநாள் கொண்டாட வேண்டியதுதான்…!

  நல்ல வேளை நெஞ்சில விழுந்து சொல்லலையே… தாலியே போயிருக்கும்…!

  நர்ஸ் வந்த அவசரத்தில… நர்ஸ்ஸோட சரசம் பண்ணறதுக்கு… அவுங்களுக்கு கொடுக்க வைச்சிருந்த பாலை எனக்குக் கொடுத்திட்டீங்க டாக்டர்…!

  பேருக்குத்தானே உங்களை புருசனா வச்சிருக்கேன்…! இதுக்கு போயி ஏன் அலட்டிக்கிறீங்க…!

  உடனே தூக்கி எறிய வேண்டியது 'பிரிட்ஜ் ' தானே…!

  த.ம.+1


  ReplyDelete
  Replies
  1. உண்மையில் அதுதான் இப்போது நடக்கிறது :)

   இவ்வளவு கோடி போனதே கண்டு பிடிக்கப் படலைன்னா...:)

   அந்த அளவுக்கு மோசமான ஆளில்லை :)

   பால்லே என்ன கலந்து இருந்தாரோ :)

   ஊருக்கு வேற ஆளா :)

   மனசு வர மாட்டேங்குதே :)

   Delete
 7. விற்கிறவன் எல்லாமே வடக்கத்திகாரனாவே இருக்கானே !''//

  நம்ம ஆட்களுக்கு உறைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. வேலை கிடைக்கலைன்னு பிச்சை எடுக்கிறானே நம்மாளு :)

   Delete
 8. பிறப்பு உரிமை!கொலுசு!த ம 8

  ReplyDelete
  Replies
  1. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்ன தலைவர் நினவுக்கு வருக்கிறாரா :)

   Delete
 9. டைவர்ஸ் கேட்பது ஆணாதிக்கம்..டைவர்ஸ் கொடுப்பது பெண்ணுரிமை என்று கொள்ளலாமா...???

  ReplyDelete
  Replies
  1. நடிகைகளுக்கு வேண்டுமானால் நீங்க சொல்றது பொருந்தும் :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. வடக்கத்தி ராஜ்யம் ஆகிவருவது சதியா சரியா ஜி :)

   Delete
 11. Replies
  1. ரயில் கொள்ளையை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 12. ஃப்ரிட்ஜ் செம

  ReplyDelete
  Replies
  1. ஆரோக்கிய கேடுதானே பிரிட்ஜ் :)

   Delete
 13. Replies
  1. உங்க நாட்டில் சிங்கள ராஜ்யம் போல் ,தமிழகம் வடக்கத்தி ராஜ்யம் ஆகி வருது ஜி :)

   Delete
 14. ஹா ஹா ஹா

  https://www.youtube.com/watch?v=JYAraNxeR1Q

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி ஜி!

   தொடுப்பை பார்த்து சொல்கிறேன் :)

   Delete
 15. பஞ்சு மிட்டாய் அவ்வளவு எடையுள்ளதா ?

  ReplyDelete
  Replies
  1. தமிழன் தூக்க முடியாத அளவுக்கு :)

   Delete
 16. //கரெண்ட் பில் எப்படி குறையும் :)
  உடனே குப்பையில் எறியவேண்டியதை
  நான்கு நாட்கள் கழித்து தூக்கி எறியவும்
  நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '! //
  கொள்வார் இல்லை அதனால் குப்பைக்கு, குப்பையில் இருக்கும் ஜீவராசிகளுக்கு.

  ReplyDelete
  Replies
  1. அந்த ஜீவராசிகளுக்கும் , நல்லா இருக்கும் போதே போட்டால் புண்ணியமாவது கிடைக்குமே :)

   Delete
 17. புத்திசாலிகள்
  எதற்கும் நேரம் என்ற ஒன்று உண்டே
  மன்னிக்க இவள் என்ன சீதையா அவன் என்ன ராமனா
  மயக்கமா எனக்கா நாடகம் அன்றோ நடக்குது
  நடிகை என்றால் டைவொர்ஸ்தனா
  அப்போ இந்த ஃப்ரிட்ஜ் தான் கரண்ட் பில்லுக்குக் காரணமா

  ReplyDelete
  Replies
  1. பிழைக்கவந்தவர்கள் புத்திசாலிகள் என்றால் இங்கிருப்பவர்கள் ...:)
   கொள்ளையனைப் பிடிக்கவும் நேரம் வரணுமா :)
   மன்னிக்கப் பிறந்தவளா சீதை :)
   நாடகத்தின் பெயர் மோகன அலைகளா :)
   நடப்பில் அப்படித்தானே இருக்கு :)
   ஒரு நாளைக்கு மூணு யூனிட் செல்வாகுதே :)

   Delete