11 August 2017

ராஜாவின் (சந்தேகப் ) பார்வை ராணியின் மீதா :)

சந்தேகம் வந்தா தப்பில்லையே :)
             ''அய்யா சாவிலே மர்மம் இருக்குன்னு சொல்றாங்களே ,ஏன் ?''
              ''எந்த நோய் நொடியும் இல்லாத அவர்வீட்டிலே பெண்டாட்டியோடு  ,சண்டே அன்னைக்கு சண்டை போட்டார் ,மண்டே அன்னைக்கு மண்டைப் போட்டார்ன்னா சந்தேகம் வரத் தானே செய்யும் ?''

பெயர் பொருத்தம் சரியில்லையே :)
           ''இறுதி ஊர்வலம் போய்கிட்டு இருக்கு ,உனக்கென்னடா யோசனை ?''
            ''மயானம் வரைக்கும் போற  இந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் ,இந்த வண்டிக்கு எதுக்கு சொர்க்க ரதம்னு பெயர் வச்சிருக்காங்க ?''

மாமல்லனைத்  தெரியும் :)
            ''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிகிட்டே  இருக்கு  !''                                                 
            ''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''

உண்மையில் அந்தக் காலம் தேவலையே :)
           ''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
            ''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு  திருமணம் ஆகாத குழந்தை வயிற்றிலே குழந்தையாமே  !''
ராஜாவின் (சந்தேகப் ) பார்வை ராணியின் மீதா :)
            ''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
            ''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''

வசதிகள் போக்குமா உடலின் அசதியை :)
  மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
  கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
  வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
  தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே  மாவு...   
  டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து  நிற்க முடியாமல் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469038

28 comments:

 1. இந்த சாவுல எனக்கும் சந்தேகம் இருக்கு ஜி

  ReplyDelete
  Replies
  1. cbi விசாரணை தேவைன்னு மறியல் பண்ணுவோமா ஜி :)

   Delete
 2. சண்டேல சண்டை! மண்டேல மண்டை!! சந்தேகமே தான்.

  த.ம. மூன்றாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. சாகிற வயசும் இல்லையே அவருக்கு :)

   Delete
 3. சண்டே சண்டை, மண்டே மண்டை என்றால் செவ்வாய் அன்று வாயை மூடிட வேண்டியதுதான்!

  நல்லவன் போனால் அவனுக்கு சொர்க்கம். கெட்டவன் போனால் மிச்ச பேருக்கு (பூமியே) சொர்க்கம்!!

  ReplyDelete
  Replies
  1. வாய்க்கரிசி போட்ட பின்னால்தானே :)

   ஆனால் இருவரும் போக மட்டும் சொர்க்க ரதமா:)

   Delete
 4. சாமி... எனக்கொரு உம்மை தெரிஞ் சாகனும்.... இவங்க வெட்டிங்கே சந்தேகம்தான்... வெட்னஸ்டே உடற்கூறு போட்ட அறிக்கையைக் காட்டுங்க...!

  ரதி தேவி ரதம் ஏறி வந்தாள்... மூதேவி... இது சொர்க்கத்தின் திறப்பு விழா... பேருக்கு ஏதாவது வச்சுத்தானே ஆகனும்...!

  உங்கள உள்ள தள்ள வந்து பிறந்திருக்கான்... தெய்வம் நின்று கொல்ல வந்திருக்கு...!

  ‘சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி...!’

  ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் வேறொரு மகராஜன்... கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்...!’

  கட்டையில போறவனே... உன்னை எரிக்கச் சோம்பல்...மின்மயானம் வந்தது... சாம்பல்... சாம்பல்...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் ...கொலையும்செய்வாள் பத்தினி ,கேள்விப்பட்டதில்லையா :)

   ஓடுவது அழகு ரதம் தேடுவது இளமை சுகம்னு பாடிட்டுக் கிடக்க வேண்டியதுதானே )

   பெயரே உங்களுக்கு எதிராய் சாட்சி சொல்லும் :)

   அந்த பின்னலில்தான் அவிழ்க்க முடியாத சிக்கல் ஆயிடிச்சே :)

   வழி கேட்டதுதான் ராஜா காதில் விழுந்து விட்டதே ,அவரே ஒரு வழி பண்ணுவார் :)

   மின்மயானம் வந்தது ,அதுக்கு தேவையான மின்சாரம் இல்லையாமே :)

   Delete
 5. நல்ல ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. அசதியை போக்கியதா இந்த ஜோக்குகள் :)

   Delete
 6. Replies
  1. இன்று எல்லாமே சந்தேக மார்க்கமாவே இருக்கா ஜி :)

   Delete
 7. சண்டே சண்டை, மண்டே மண்டை, செவ்வாய் வாய் கப்சிப்,

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. டிவுஸ் டே ,அவர் பிவுஸ் ஆன டேன்னு சொல்லலாமா ஜி :)

   Delete
 8. அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாமே. என்னவொரு நீதி?!

  காறி துப்பிக்கலாம் போல இருக்கு

  ReplyDelete
  Replies
  1. 98குழந்தைகள் தீ விபத்தில் பலியான வழக்கில் ,குற்றவாளிகளை விடுவித்து விட்டதாமே உயர் நீதிமன்றம் ,இதுவும் என்ன நீதியோ :(

   Delete
 9. Replies
  1. உங்க பத்தை நானும் ரசித்தேன் :)

   Delete
 10. சண்டேயில் சண்டை போட்டா..மண்டேயில் மண்டையைப் போட்டாரா? நன்று

  ReplyDelete
  Replies
  1. இந்த சண்டை ரொம்ப காலத்துக்கு முந்தியே ஆரம்பித்து விட்டது ஜி :)

   Delete
 11. எழுதிய கமெண்டுகள் எங்கோ தவறு செய்ததால் காணாமல் போய் விட்டது

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை ,நாளை பார்த்துக்கலாம் :)

   Delete
 12. எனக்கும் அந்தப்புரத்திலே..சந்தேகம் இருக்குது நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஏன் சந்தேகம் வருது ,அந்தப்புரம் எந்த புரம் என்றாவது உங்களுக்குத் தெரியுமா :)

   Delete
 13. சொர்க்கத்தில் இடம் இல்லையென்றாலும், போகும் போது சொர்க்க ரத்தில் போகட்டும் என்று பெயர் வைத்தார்களோ!

  ReplyDelete
  Replies
  1. அது சரி, சொர்க்கத்தில் என்னை ஏன் கொண்டுபோய் சேர்க்கலைன்னு போனவர் வந்து கேட்கவா போறார்:)

   Delete
 14. Replies
  1. சொர்க்க ரதம் தெரியுது,சொர்க்கம் இருக்கா அய்யா :)

   Delete