16 August 2017

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை நீச்சல் உடையா :)

ஆபீஸுக்கு சைக்கிளில் செல்வதே நல்லதோ :)         
             ''என்ன சொல்றே ,கார் வாங்கினாலும்  மறுபடியும் சைக்கிள்தான் ஓட்ட வேண்டியிருக்குமா ?''
             ''கொஞ்ச நாள்லே தொப்பை வந்துடும் ,அதைக் கரைக்க ஜிம்மிலே சைக்கிளிங் பண்ணவேண்டி வரும்னு சொன்னேன் !''

இவன் காதுலே தீயை வைக்க :)                        
                 ''தீக்குச்சி கேட்டீங்க ,லைட்டரே தந்தாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''

                 ''காது குடைய லைட்டர் எதுக்கு ?''
                                     
 அப்பன்காரன் இப்படியா சொல்வது  :)
            ''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''
            ''தண்டச் சோறுன்னா !''

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை  நீச்சல் உடையா :)
            ''அட பரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு கோவில் கட்ட வேண்டாம்னு  ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''
            ''அடநீங்கவேற !நீச்சல்உடையிலே இருக்கிறமாதிரி சிலைன்னு சொன்னது, அவங்களுக்கு பிடிக்கலையாம் !''
பல கணவர்மார்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது :)
          பல கோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் கணவன்மார்களுக்கு  பொறாமை இல்லை ...
         அது மனைவிமார்களை  பயமுறுத்தும் வித்தையை  கற்று வைத்திருக்கிறதே ,என்பதால்தான் !

26 comments:

 1. சைக்கிள் ஓட்டினால் தொப்பை குறைவது மட்டுமில்லை இனிப்புக்காரர்களுக்கும் மிகவும் நல்லதுதான்....

  அனைத்தும் ரசித்தோம் ஜி!!

  ReplyDelete
  Replies
  1. நல்லதுதான் ,நோய் வந்த பிறகுதானே தீர்வைத் தேடுவோம் :)

   Delete
 2. தீக்குச்சி எதற்கு கேட்கிறார்கள் என்று தெரிய வேண்டாமோ! நிலாச்சோறும் தண்டச்சோறும் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. கேட்பவர்கள் சொல்லிக் கேட்க வேண்டாமா :)
   சோறிலும் இரண்டு வகையா :)

   Delete
 3. ர்சித்தேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. கரப்பான் பூசசிக்கு பயப்படுவது உண்மைதானே :)

   Delete
 4. கற்காலத்திற்குப் போக வேண்டியதுதான்... கார்காரரே...!

  குத்தூசி இருக்கு... குடைய வேண்டுமா...?!

  தண்டச்சோறுன்னு... இனி அப்பா சொன்னா டேக் இட் ஈஸி பாலிஸி...!

  கோவில் கட்ட வேண்டாமாம்... எல்லாம் கர்ப்பக்கிரகத்தில நுழையப் பார்ப்பாங்களாம்... அடக்கிரகமே...! எதிர்நீச்சல் போட்டே வாழ்க்கையில முன்னுக்கு வந்தவங்களாம்...!

  கரப்பான் பூச்சிக்குத்தான் எல்லாமே தெரியுமாம்...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. நடராஜா சர்வீஸ் மாதிரி எதுவும் வராது :)

   ஏன் கடப்பாறையை கொண்டு வர வேண்டியது தானே ;)

   இதென்ன பிரீ பாலிஸியா :)

   அதுக்காக சிலையை பொட்டலிலா வைக்க முடியும் :)

   அதுக்கு என்ன தெரியும் ,நமக்கு தான் அருவருப்பாய் தெரிகிறது :)

   Delete
 5. ஜி... ஓட்டு விழுந்ததா ?

  ReplyDelete
  Replies
  1. விழுந்துள்ளது ஜி :)

   Delete
 6. எனக்கு கரப்பான் பூச்சியை பார்த்து பயமில்ல

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானான்னு மாமாகிட்டே கேட்டு விடுகிறேன் :)

   Delete
 7. Replies
  1. எது அருமைனு அடுத்த முறை சொல்ல வில்லை என்றால் டெலிட் செய்து விடுவேன் :)

   Delete
 8. Replies
  1. இந்த சோறு ருசிக்காதே அய்யா :)

   Delete
 9. இரசித்தேன்! தீக்குச்சி மற்றும் தண்டச்சோறு துணுக்குகள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வேலை வெட்டி இல்லாத தண்டச் சோறுக்கு, காதை நோண்ட தீக்குச்சி தேவைதானே :)

   Delete
 10. அனைத்தும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. நடிகையின் முடிவு சரிதானே ஜி :)

   Delete
 11. Replies
  1. கரப்பான் பூச்சியால் செய்ய முடிந்ததை கணவனால் செய்ய முடிவதில்லை ,சரிதானே ஜி :)

   Delete
 12. தலையைப் பிசைந்து கருத்தளிதிருந்தேனே அதுவும்டெலீட்டா

  ReplyDelete
  Replies
  1. போனால் போகட்டும் விடுங்க ,நாளைக்கு பார்த்துக்கலாம் :)

   Delete
 13. இருக்கிற எந்த சாமியும் நீச்சல் உடையில் இல்லையோ...?????????

  ReplyDelete
  Replies
  1. இதுவரை எந்த சாமியும் நீந்தி கரை சேரவில்லை போலிருக்கே :)

   Delete