18 August 2017

காதலி காலணியைக் கழட்டாததால் ,இந்த காலணி பரிசோ :)

ஒரு வேளை நம்பிக்கை இல்லா தீர்மானம் வரப் போவுதா :)
               ''சட்டசபையில் நிறைய இடங்களில் எதுக்கு முதல் உதவிப் பெட்டி வைக்கிறாங்க ?'' 
               ''வர்ற கூட்டத் தொடரில் நிச்சயம் கைகலப்பு நடக்கும்னு  ஒரு அனுமானம்தான் !''
மலேசியாவில் மட்டும் கபாலி ஏன் கெட்டவரானார் :)
               ''மலேசியா சினிமா சென்சார்  போர்டிலே இருக்கிறவங்க ,ரொம்ப ரோசக்காரங்களா, ஏன்  ?''

              ''கபாலி  போலீசில் சரண் அடைந்தார்னு, கிளைமாக்சில்  போட்டால்தான் இங்கே ரிலீஸ்  பண்ண முடியும்னு சொல்லிட்டாங்களாமே !''

அப்பனுக்கு  எதிரி வேறெங்கும் இல்லே :)           
               ''மாப்பிள்ளை ,வரதட்சணையா  கார் கேட்குறீங்களே ,என்ன தைரியம் உங்களுக்கு ?''
               ''எல்லாம் உங்க பொண்ணு கொடுக்கிற தைரியம் தான் ,கேட்கச் சொன்னதே அவங்கதானே !''

காதலி காலணியைக் கழட்டாததால், இந்த காலணி பரிசோ :)
          ''காதலிக்கு  கொலுசு வாங்கித் தரப்போறீயா ,ஏன் ?''
           ''தயங்கித் தயங்கி நான் காதலை அவளிடம் சொன்னப்போ ,காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''

குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை:)               
             ''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  காரணம்   லேண்ட் லைன் போன்னு எப்படி சொல்றீங்க ?''
              ''அது ,டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சுக்கிட்டே இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு :)
  சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
  தரித்திர நாராயணன்களும் உண்டு !

32 comments:

 1. இவன் குடிகாரன் ஆனதுக்கு கிரஹாம் "பெல்" தான் காரணமா ?

  ReplyDelete
  Replies
  1. குடிகார மட்டைக்கு கிடைத்த நொண்டிச் சாக்கு :)

   Delete
 2. தமிழ்மணத்தில் இணைத்து முதல் வோட்டும் போட்டுட்டேன்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் நல்ல சேவை தொடரட்டும் உண்மை நண்பரே :)

   Delete
 3. // ''மாப்பிள்ளை ,வரதட்சணையா கார் கேட்குறீங்களே ,என்ன தைரியம் உங்களுக்கு ?''
  ''எல்லாம் உங்க பொண்ணு கொடுக்கிற தைரியம் தான் ,கேட்கச் சொன்னதே அவங்கதானே ////

  ஓ அப்படியா விஷயம் மைண்ட் வாய்ஸ்

  ஹீஹீ என் பொண்ணு ரொம்ப ஸ்மார்ட்டுதான் அப்பாவிடம் பணம் கார் வாங்க பணம் கிடையாது அதனால எப்படியும் வாங்கி தரமாட்டார் அப்பா வாங்கி தரலைன்னு கண்ணீர் விட்டால் மாப்பிள்ளை கண்டிப்பாக வாங்கி கொடுத்துடுவாருன்னு என்று திட்டம் போட்டு கேட்டு இருப்பாள் இது கூட தெரியாத அசடாக என்னிடம் வந்து கேட்குது

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹ் மதுரை இப்ப நீங்க தான் அசடு!! மாப்பிள்ளை வாங்கிக் கொடுப்பாராக்கும்?? மாப்பிள்ளை என்ன முட்டாளா...அப்படியாடி தங்கம் உனக்குக் கார் கேக்குதோ...உங்க அப்பன் என்னிக்கு கார் வாங்கித்தராரோ அப்ப போதும்னு சொல்லிடுவாரு...ஹிஹிஹி

   கீதா

   Delete

  2. புது மாப்பிள்ளை அப்படி சொன்ன திண்னையிலதான் படுத்து தூங்கணும் அதனால் அப்படி எல்லாம் புது மாப்பிள்ளை சொல்ல மாட்டார்

   Delete
  3. இதில் ஜெயிக்கப் போறது யாருன்னு பொறுத்து இருந்துதான் பார்க்கணும் :)

   Delete
 4. கபாலி ரிலீஸ் ஜோக் குபீர் என சிரிக்க வைத்தது!

  டிரிங்க் டிரிங்க் சிரிப்பு!

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சென்சார் போர்டு தான்:)

   இப்போ இந்த டிரிங்க் இருக்கா :)

   Delete
 5. Replies
  1. கொலுசும் ரொம்ப அழகு தானே :)

   Delete
 6. ஆ... வெற்றி... வெற்றி... அணிகள் இணைந்து விட்ட பிறகு இதற்கு அவசியமில்லை... முதல் உதவிப் பெட்டியைக் கட்சி அலுவலகத்திலும்... தோட்டத்திலும் வையுங்க...!

  போலீசில் சரண் அடைவதுதானே கிளைமாக்ஸ்...!

  இப்பவே கிடைப்பதை சுருட்ட வேண்டுங்கிறாளே...!

  சிலம்பைத்தான் யாரும் போட்டு அதிகாரம் செலுத்துவதில்லையே... அதான்... கொலுசு...!

  அதான் லேண்ட்கே போறீங்களா...!

  சாமிக்கு பேரு வச்சது யாரு சாமியோ...?!

  த.ம.+1  ReplyDelete
  Replies
  1. இனிமேல் தானே வேடிக்கை இருக்கு :)

   வழக்கத்தை மாற்றலாமா :)

   நல்ல மகள்தானே :)

   அதெல்லாம் கண்ணகி காலம் :)

   சீக்கிரமே போறார் :)

   இந்த சாமி மேல் யார் கண்ணாவது படாதா :)

   Delete
 7. Replies
  1. கொலுசு அருமையிலும் அருமை தானே :)

   Delete
 8. ட்ரிங்க்.. ட்ரிங்க்... அருமை...

  கபாலி எனக்கு புரில

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இந்த பழக்கம் பிடித்தால் விடாதே :)

   குற்றவாளி தப்பிக்கக் கூடாது தானே :)

   Delete
 9. கபாலி ஹஹஹஹஹ்ஹ் கரீக்டுதானே அவங்க சட்டம் அது தானே!! இங்க போலவா??!!!

  டிரிங்க் டிரிங்க் ஹஹஹஹ அது செரி...ரிங்க் டோனை மாத்தச் சொல்லுங்கப்பா...இப்பல்லாம் லாண்ட்லைனுக்கும் ரிங்க்டோன்ஸ் வந்துருக்கே...

  ReplyDelete
  Replies
  1. நியாயமான சட்டம் தானே :)

   ரிங் டோன் மாறினாலும் குடிப் பழக்கம் விடுமா :)

   Delete
 10. Replies
  1. ரசித்தேன் இல்லையா அய்யா :)

   Delete
 11. வரதட்சிணயாகக் காராஅதுவும் பெண்களே கேட்கச்சொல்கிறார்களா நல்ல வேளைஎனக்குப்பெண்பிறக்கலை
  நான் படம் பார்க்கலை. ஆனாலும் கேடிகள் சரணடைதல் சரிதானே
  பாதசரம் ஏற்ற பரிசுதான்
  சாமிகளை ஏழையாக்குவதோ பணக்காரராக்குவதோ பக்தர்கள்தானே
  .

  ReplyDelete
  Replies
  1. அப்பன் வசதி தெரிந்து கேட்கும் பிள்ளைகளோ :)
   நியாயமும் அதுதானே :)
   செருப்பு கூட வாங்கித் தரலாமே :)
   உண்மை ,படி அளப்பதே பக்தர்களே :)

   Delete
 12. இந்த காலணி பரிசோ :)//

  கொலுசு போதுமா?!

  ReplyDelete
  Replies
  1. 'அது'க்கு மேலே என்ன போடணும் :)

   Delete
 13. அனைத்தும் நன்றாக உள்ளது

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளைக்கு வந்த தைரியத்தைப் பார்த்தீங்களே :)

   Delete
 14. ஆகா..நன்றி மறப்பது நன்றல்ல....காலணிக்கு காலணி பரிசு.....

  ReplyDelete
  Replies
  1. அப்படியே களுத்தணி ஒண்ணும் வேணும்னு கேட்டிருந்தா என்ன செய்திருப்பாரோ :)

   Delete
 15. அனைத்தும் ஆனாலும் வரதட்சணை மற்றும் குடிக்காரனின் சப்பைக்கட்டு ஆகிய இரண்டு நகைச்சுவை துணுக்குகளுக்கு மட்டுமே எனது வாக்கு!

  ReplyDelete
  Replies
  1. இருவருமே தப்பு செய்கிறார்களே அய்யா :)

   Delete