19 August 2017

இன்ப அதிர்ச்சி கொடுத்த மனைவி :)

             ''நேற்று ,பிறந்த நாள் அதுவுமா உன் மனைவி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டாரா ,எப்படி ?''
              ''என் சிரமத்தைக் குறைக்க வாஷிங் மெசின் வாங்கி விட்டாளே!''

ஒருதலைக் காதல் என்பது இதுதானோ :)
             ''நேற்று உனக்கு துக்க நாளா  போச்சா ,ஏண்டா  ?''
             ''நான் யார் கழுத்தில்  தாலிக் கயிறு  கட்டணும்னு  நினைத்திருந்தேனோ ,அந்த  பொண்ணே வந்து என் கையில்  ரக்ஷா பந்தன் கயிறைக் கட்டிட்டுப் போயிட்டாளே !''
'மார்க் 'கண்டேயன்  என்றும்  பதினாறுதானே :)
            ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
            ''எந்த பாடத்திலும் பதினாறு  மார்க்  மேலே எடுக்க மாட்டேங்கிறானே!''
                                 
ஜென்டில்மேன் இராவணன் ?:)     
           ''இராவணன்  சீதையை சரியாக 'பத்து மாதம்' சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?
          ''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
          ''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குணத்தை  மறக்கும் மனிதன் !
  பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
  சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
  'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
  எந்த வகையில் நியாயம் ?

26 comments:

 1. நெக்லெஸ் வாங்கி தறலினா பரவா இல்லை கழுத்துக்கு ஒட்டியாணமாவது வாங்கி கொடுக்கலாம் இல்லையா

  ReplyDelete
  Replies
  1. ஒட்டியாணம் இடுப்பில் இருந்தால் அழகாய் இருக்கும் ,கழுத்திலா :)

   Delete
 2. அவளோட சிரமத்தைக் குறைக்க முடியலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு... நானும் இன்ப அதிர்ச்சி கொடுத்தேன்... மீண்டும் கோகிலா முழுகாம இருக்கா...!

  தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு சந்தோசப்படு... நீ வணங்கிற தெய்வம் உன்னைக் கைவிடலை...!

  நீங்க பாருங்க... இவன் வருங்காலத்தில பதினாறும் பெற்று... பெறு வாழ்வு வாழ்வான்...!

  ‘ஏய்... முடிஞ்சா என்னைத் தொட்டுப்பாரு’ன்னு சீதையும் தொடலை... தொட்டால் பூ மலராது... என்பது தலைக்குத் தெரிமுல்ல...!

  ஆமால்ல... சரி அதை விடுங்க... ஒட்டியாணமாவது போடலாமுல்ல...!

  அந்தப் பூனை பால் குடிக்கும்... இந்தப் பூனை பால் குடிக்குமா...? இது பால் குடி மறந்த பூனை...!

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. சிரமத்தைக் குறைக்கிறதுக்கு கூட்டிட்டீங்களே:)

   அப்படி ஆறுதல் பட முடியலியே :)

   எந்த பதினாறோ:)

   அதுவும் பத்து தலையாச்சே :)

   ஒட்டியாணம் கூட கழுத்தை நெருக்குதாமே :)

   மறந்தால் அது பூனை ஆகாதே :)

   Delete
 3. என்றும் 16 வாழ்க வளமுடன்...

  ReplyDelete
  Replies
  1. இவரை வாழ்த்தியும் பிரயோசனம் இருக்காதே :)

   Delete
 4. ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. பால் குடிக்காத பூனை உண்டா ஜி :)

   Delete
 5. அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. கணவனின் கிண்டல் சரிதானே ஜி :)

   Delete
 6. Replies
  1. அவருக்கு துக்க நாள் ஆனதுமா :)

   Delete
 7. Replies
  1. 'மார்க் 'கண்டேயன் தேற வழி இருக்கா :)

   Delete
 8. எப்படி இப்படி தூள் கிளப்புகிறீர்கள்? அனைத்தையும் இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. காரணம் ,உங்களின் ஆதரவு தான் :)

   Delete
 9. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாக்கு பொன்னாகட்டும் :)

   Delete
 10. வங்கியில் குறைந்தது யார் பணம்
  ரக்ஷா பந்தன் அன்று காதலி முன் நிற்கக் கூடாது
  கதையில் மார்க்கண்டேயனுக்கு வயசுதான் என்றும் பதினாறு இவனுக்கு எல்லாமே பதினாறா
  சீதை அனுமதிக்க வில்லை என்றும் சொல்லலாம்
  நெக் இருந்தால்தானே நெக்லஸ் பாந்தமாக இருக்கும்
  எல்லா மனிதரும் சந்தேகப்படுவார்கள் என்பதை ஆட்சேபிக்கிறேன் சார்

  ReplyDelete
  Replies
  1. இல்லாவிட்டாலும் குறையாமலா இருக்கப் போகிறது :)
   தேடி வந்து கட்டினா என்ன செய்றது :)
   இவன்நவீன மார்க்கண்டேயன் ஆச்சே :)
   கற்பழிப்பு அனுமதியுடன் நடைபெறுமா :)
   அதுக்கு எங்கே போறது :)
   விதிவிலக்காய் சிலர் இருக்கத் தானே செய்வார்கள் :)

   Delete
 11. இராவணன் ஜென்டில்மேன்தான்

  ReplyDelete
  Replies
  1. இராவணன் நினைத்து இருந்தால் கதையே மாறியிருக்கும்தானே:)

   Delete
 12. Replies
  1. தாலிக் கயிறுக்குப் பதில் , ரக்ஷா பந்தன் கயிறு என்றால் சோகம்தானே :)

   Delete
 13. இரக்க முள்ள மனைவியை கொடுத்து வைத்தவர்...

  ReplyDelete
  Replies
  1. இவரை கணவரா அடைந்தவர் மட்டும் என்னவாம் :)

   Delete