25 August 2017

பெண்டாட்டிக்கு பயப்படக் காரணம் :)

இனிமேல் வாய் திறந்து பரிசுன்னு கேட்கப் படாது :)            
            ''என்னங்க ,என் பிறந்த நாளுக்கு பரிசுன்னு சீட்டுக்கட்டு தர்றீங்களே,ஏன் ?''
             ''நிறைய டைமண்ட்ஸ் இருக்கிற பரிசு வேணும்னு நீதானே கேட்டே ?''

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா :)           
           ''என்னங்க , தூங்குறப்போ எதுக்கு கண்ணாடியை  போட்டுக்கிறீங்க
  ?''
            ''கனவுலே எல்லாமே கலங்கலாத் தெரியுதே !''
நல்ல வேளை,தமிழில் மொழிபெயர்க்கலே :)
         '' நம்ம சென்னை ஏர்போர்ட்டில்,மேற்கூரை ,கண்ணாடி எல்லாம் அடிக்கடி இடிந்து விழுதுன்னு சொல்றாங்க,நீங்களும் எதுக்கு இடிந்து போய் உட்கார்ந்து இருக்கீங்க ?'' 
         ''எல்லாம் இந்த போர்டைப் படித்துதான் !''
பெண்டாட்டிக்கு பயப்படக் காரணம் :)
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''

ராதா எப்பவுமே ராதாதான் :)
           ''ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியலே ,ஊர்லே இருக்கிற பொண்ணுங்க பேரை கேட்டா மட்டும் தலைக்கீழா சொல்லத் தெரியும் !''
            ''அதெல்லாம் இல்லை சார் !''
            ''என்னாஅதெல்லாம் இல்லே ?''
             ''ராதாவை  ராதான்னுதான் சொல்லுவேன் ...தாரான்னு சொல்லமாட்டேன் சார் !''

சினிமா மோகம் படுத்தும் பாடு :)
       சாத்தானின் சமையல் அறையை  ...
       கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
       ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
        ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 
---------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு ...கொடைக்கானல் குணா குகையின் உண்மையான பெயர் 'Devil's kitchen ,தமிழில் சாத்தானின்  சமையல் அறை ,சரிதானே ?

26 comments:

 1. ராதா எப்பவுமே ராதாதான் :) அருமை .

  ReplyDelete
  Replies
  1. சப்பாத்தி சப்பாத்திதான் என்றுதான் சொல்வார்கள் :)

   Delete
 2. அவங்களுக்கு டைமண்ட்ஸ் கொடுத்துட்டு இவர் ஜோக்கர் ஆயிட்டார்!

  ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. ஜோக்கர் எப்படி அடி வாங்கினாரோ :)

   Delete
 3. Replies
  1. கணவனுக்கு இது தேவையான பயம்தானே ஜி :)

   Delete
 4. உங்களால் தாமஸ் ஜூவல்லர்ஸ் பாதிக்கப்படும் போலயே ஜி

  ReplyDelete
  Replies
  1. ஜூவல்லர்ஸ் வியாபாரம் என்றைக்கு படுத்தது ,ஏழை இந்தியாவில் தங்க விற்பனைக்கு சரிவே இல்லையே :)

   Delete
 5. நீதான் வைரம் பாஞ்ச கட்டையாச்சே... அதான்...!

  கலர் கண்ணாடியா போடுங்க... அப்பத்தான் கலர்புல்லா தெரியும்...!

  ஆள் போனாலும் பரவாயில்லை... இந்த ஆடை போயிடக்கூடாதில்ல...!

  இதான் ஜென்மப்பாவம்கிறதோ...?! பாவம்...!

  ராதா ராதா... காதல் வ... ராதா...!

  சூசைடு பாயிண்டில் செத்தது எல்லாம் ஆவியா அங்கதான் சமையல் செய்து சாப்பிடுதாம்...! மிஸ்ட் ஆவிதான் எல்லாப் பக்கமும் சுத்துதே...! மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வைரம் பாஞ்ச கட்டை என்ன செய்யும்னு இனிமேல்தான் காட்டப் போறேன் :)

   கனவு ஏன் கருப்பு வெள்ளையில் மட்டுமே வருதோ :)

   வெளிநாட்டுக் காரங்க இதை படித்தால் என்ன நினைப்பார்கள் :)

   தப்பிக்க நினைத்தால் முடியுமா :)

   நீங்க கிருஷ்ணனா இருந்தா காதல் வரும் :)

   எந்த ஆவியாவது அவர்களைப் பேட்டி எடுத்து போட்டால் நல்லாயிருக்கும் :)

   Delete
 6. மிக மிக சுவையாக இருந்தது நகைச் சுவை
  ராதா - டெவில்ஸ் கிச்சன் - கனவு கண:ணாடி பேன்றவை.
  தமிழ் மணம் - 6
  https://kovaikkothai.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. கலவை சாதம் போல சுவையாய் இருக்கா :)

   Delete
 7. குணா குகை நன்று

  ReplyDelete
  Replies
  1. அழகான குகைதானே :)

   Delete
 8. சீட்டுக்கட்டில் ஹார்ட்ஸும் இருக்குமே
  கனவில் தெரியும் கனவுக்கன்னியை கற்பனைக் கண்ணில் பார்க்க முடியலையா
  இன்னுமா சரிசெய்யலை
  ஜோசியருக்கு பெண்டாட்டி கொடுத்ததொகை எவ்வளவு
  ராதா தலை கீழானால் தாராவா
  தெரியாத தகவல்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே இவர் இதயத்தைக் கொடுத்துதானே படாத பாடு பட்டுக் கொண்டிருக்கார் :)
   தூக்கத்திலும் கற்பனையா :)
   விசாரிக்கணும் :)
   அப்படியும் டீலிங்க் இருக்குமோ :)
   இல்லையா :)
   படமும் பார்க்க வில்லையா :)

   Delete
 9. ரசித்தோம் ஜி! அனைத்தையும்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப காஸ்ட்லி டைமண்ட் தானே :)

   Delete
 10. ஹா.....ஹா.....ஹா...எனக்கு பொண்டாட்டி பயமே...இல்லை..ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. இருந்து இருந்தால் அவர் பயந்து இருப்பார் ,உங்க சிரிப்பை பார்த்து :)

   Delete
 11. ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''//

  ‘ஏழேழு ஜென்மத்துக்குன்னு சொல்லலாமா!?

  ReplyDelete
  Replies
  1. ஏழு என்றாலே பயந்து கிடக்கார் :)

   Delete
 12. ராதா எப்பவும் ராதாதான்! :)

  ரசித்தேன்.

  த.ம. 13-ஆம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே ,ராதா இடத்தை அவர் மகள் வந்தும் நிரப்ப முடியாவில்லையே :)

   Delete
 13. Replies
  1. ஏழு ஜென்மம் உண்டா :)

   Delete