26 August 2017

காதலாவது ,கத்தரிக்காயாவது எனலாமா இதை :)

தாலி இறங்க பூஜை ஏதாவது இருக்கா :)
              ''என் மனைவி சுமங்கலி பூஜை செய்கிறாள் ,உன் மனைவியையும் வரச் சொல்லேன் !''
               ''அவளாவது வருவதாவது ?தாலி இறங்கினாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவளாச்சே  அவ !'' 

சான்ஸ்  கிடைக்கும் போது விடுவாளா மனைவி :)             
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''

            ''விக்கல் நின்றதா ?''
             ''விக்கல் நின்னுடுச்சு ,நான் சொன்னதை உண்மைன்னு நினைச்சு,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !'' 

என்கவுண்டர் லிஸ்ட்டில் பெயர் வந்ததால் வந்த வினை :)               
           ''ரௌடிக்கு உங்க பொண்ணைக் கொடுத்தது தப்பா போச்சா ,ஏன் ?''
            ''உங்கப்பனிடம் சொல்லி ,எனக்கு  புல்லட் புரூப் சட்டை வாங்கி வான்னு பொண்ணை அனுப்பியிருக்கானே !''


தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் :)
        ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடிபடலையா ?''
        ''நல்ல வேளை,தொந்தி இருந்ததால் மூக்குலே மண்ணு கூடபடலே !''

காதலாவது ,கத்தரிக்காயாவது எனலாமா இதை :)
       தாஜ்மகாலை ...
      அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
      அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கைச்       சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
      பதினான்கு  முறை பிரசவித்து 
      முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
      மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470323

28 comments:

 1. ஹா ஹா ஹா... இன்று எதைச் சொல்ல எதை விட?? அனைத்தும் சிரிக்க வைத்தன.... இருப்பினும் மனைவி மார்கள் :) மேல உங்களுக்கு ஏதோ கொலை வெறி இருக்குது என மட்டும் தெரியுது ஒவ்வொரு போஸ்ட்லயும்:)

  ReplyDelete
  Replies
  1. கொலை வெறி இல்லை ,ஜஸ்ட் fun :)

   Delete
 2. முதல் ஜோக் அட்டகாசம்

  ReplyDelete
  Replies
  1. மனைவி அப்படி நினைக்கும் அளவுக்கு இவர் என்ன செய்தாரோ :)

   Delete
 3. தொந்தி இதற்காவது பயன்படுதே...

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ,இதை தூக்கிக் கொண்டு ஓடினார் என்பதை நம்ப முடியவில்லை ஜி :)

   Delete
 4. ‘அந்த குட்டியானை இருந்தாலும் ஒன்னுமில்லை... இறந்தாலும் ஒன்னுமில்லை’ன்னு சொல்லுவா...! அவள் நாத்திகவாதி... பூசனைகள் எல்லாம் பிடிக்காது...!

  ‘தலாக்’ சொல்லவிடாமத்தான் ‘லாக்’ பண்ணியாச்சே...! ‘சட்டம் அவன் கையில்’ ‘அவன் நான் இல்லை...!’


  ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.’ புல்லட் புரூப் கேட்டா அவன் என்ன ரௌடி...?

  விநாயக சதுர்த்தி அதுவுமா ‘கணபதி’ங்கிற ஒங்க பேரைக் காப்பாத்திட்டீங்க...!

  ‘நாற்பது வயதில் நாய் குணம்...’ வந்திடக்கூடாதின்னு முடிவுபண்ணிட்டாங்களோ...?! பதினாறு(ம்) பெற்று பெரு வாழ்வு வாழ நினைத்த மும்தாஜின் கனவு நனவாகமப் போச்சே...!

  த.ம. +1  ReplyDelete
  Replies
  1. முரட்டு குட்டி யானையோ :)

   முத்தலாக் இல்லைன்னா முத்த லாக் செய்ய வேண்டியது தானே :)

   முதுகில் சுட்டால் அதென்ன போலீஸ் :)

   கொலுக்கட்டையால் வந்த தொந்தியோ இது :)

   ஒரு சாம்ராஜ்ய கனவு சரிந்ததோ :)

   Delete
 5. தொந்தி உடையான் விழுவதற்கு அஞ்சான்!

  ReplyDelete
  Replies
  1. உட்காரவும் அஞ்சான் :)

   Delete
 6. தொந்தி காப்பாற்றியதே!!!ஹாஹாஹாஹாஹா..

  புல்லட் ப்ரூஃப்....ஹாஹாஹா...

  அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. ஆபத்துக்கு உதவும் தொந்தியோ :)

   விலை ஐம்பதாயிரமாமே :)

   Delete
 7. என்ன செய்தால் என்ன நடப்பதுதானே நடக்கும்
  காரியத்தில் கெட்டியான மனைவி
  பெண்ணின் தாலிக்காக இதையும் செய்யத்தான் வேண்டும்
  தொந்தியால் மூக்கு உடைபடவில்லையோ அப்போ தொந்தி
  எதையும் அதிகமாய் ஆராய்ந்தால் இப்படி எல்லாம் நினைக்கத் தோன்றும்

  ReplyDelete
  Replies
  1. இது பூஜை செய்பவர்களுக்கு தெரியவில்லையே :)
   சான்ஸ் கிடைத்தால் விடுவாரா :)
   ஆனால் ரொம்ப காஸ்ட்லி உடையாச்சே :)
   எதையும் தாங்கும் தொந்தியோ :)
   நதிமூலம் பார்க்கக் கூடாதோ :)

   Delete
 8. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. விக்கலால் வந்த வம்பை பார்த்தீங்களா ஜி :)

   Delete
 9. Replies
  1. ரவுடியின் ஆசை , நியாயமான ஆசைதானே :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தேன். த.ம. ஒன்பதாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. புல்லட் புரூப் சட்டை போட்டுக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா :)

   Delete
 11. தாஜ்மகாலை கல்லரைன்னு சொல்லியிருக்காங்களே.................

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் செத்த பிறகு வைத்த கல்லறை ,இவ்வளவு சிறிய வயதில் கல்லறைக்கு போய்விட்டாரே :)

   Delete
 12. ரசித்தேன்... மும்தாஜ் பேர் இருந்தாலே அவங்க பாவம்தான் போலிருக்கு. த ம

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு மும்தாஜுக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னால் நன்றாயிருக்கும் :)

   Delete
 13. Replies
  1. தாஜ் மகாலின் பின்னால் இருப்பது சோகம் தானே ஜி :)

   Delete
 14. அனைத்தையும் ரசித்தேன், தொந்தியுடையாரை சற்றே அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. இந்த காரணத்துக்க்காகத் தான், ஒரு வேளை தொந்தி வளர்க்கப் படுதோ :)

   Delete