30 August 2017

மனைவி கத்த ஆரம்பிச்சதும் :)

படித்ததில் இடித்தது :)
                ''இருபதாண்டு சிறைத் தண்டனை என்றதும் அந்த சாமியார் நீதிபதியிடம் கதறி அழுதாராமே,உண்மையா ?''
                 ''ஒரு வேளை ,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலாவது  என்னை அடைக்க உத்தரவிடுங்கள்' என்று  கேட்டு கதறி அழுதிருப்பாரோ ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....பாலியல் பலாத்கார வழக்கில் சாமியாருக்கு பத்தாண்டு சிறை :)
உங்கள் கணவர் எப்படிப் பட்டவர் :)
                      ''திடீர்னு வந்து ,நீ மனுசனா ,பெரிய மனுசனா ,ஞானியா ,வாழும் கடவுளான்னு  ஏண்டா கேட்கிறே ?''

                     ''இதோ ,இதைப் படிச்சு பாரேன் !''
மேற்படி  தத்துவத்துக்கு  சொந்தக் காரரான  g + நண்பர் ராஜ் குமாருக்கு நன்றி !

கனவிலே இவர் வரணும்னு சொல்லாமல் போனாரே :)
           ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
           ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
          '' ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... :)
        ''ஆறு கண்மாய்களில்  தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
        ''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''

கறி  ஃசாப்டா  இருக்கும் காரணம் :)
        ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
  ''My crow soft பிரியாணி கடைதான் !''

இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் :)
          அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
         அர்த்தம் இருக்கணும் ...
         ' தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
         'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
 எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470584

27 comments:

 1. டாக்டர் கனவுகளை சிப்ட் மாற்றி விடுவாரா ?

  ReplyDelete
  Replies
  1. அவர் அனுபவத்தில் இப்படி ஒரு நோயை பார்த்ததில்லை என்கிறாரே :)   Delete
 2. நகைச்சுவை அருமை .
  பறந்துவரும் கரண்டியை லாவகமாக பிடிப்பவனை எப்படி அழைப்பது கேட்டு சொல்லுங்களேன் ஜீ .

  ReplyDelete
  Replies
  1. கரண்டியான் என சொல்லலாமே :)

   Delete
  2. ஹ ஹா .. உங்களுக்கே உரியதான ஸ்டைலில் பதிலளித்திருக்கிறீர்கள்

   Delete
 3. கடையின் பெயர் நல்லாத்தான் இருக்கு.. பிரியாணி கறுப்பா இருக்குமோ?:)

  ReplyDelete
  Replies
  1. கருப்போ சிகப்போ நாக்குக்கு ருசியாய் இருந்தால் சரிதானே :)

   Delete
 4. அரசியல் ஜோக் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு குழப்பமா இருக்கே ,இன்னைக்கு எது அரசியல் ஜோக் :)

   Delete
 5. இரண்டு பேரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தலா பத்தாண்டு... பத்து பத்துன்னு பத்தட்டும்...! தற்பொழுது ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களுக்கான தண்டனை கொடுக்க வேண்டுமல்லவா...? பத்தாது... இது பத்தாது...!

  காது கேட்காது... மாற்றுத்திறனாளி...!

  ‘ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹா.... ஹா.... தினம் ஆராதனை...’ ஏ... ஏ...கனவா கலர் கலரா வரட்டும்.

  கரைப்பார் கரைத்தால் பிள்ளை யாரும் கரைவாரோ...?!

  காக்கா பிடிச்சாச்சு... காக்கா இனி கத்தாது....!

  தர்மம் ‘தலை’யெல்லாம் காக்க வேண்டாம்...! விவேகமா பேசுவேனாக்கும்...!

  த.ம.+1

  ReplyDelete
  Replies
  1. செத்தது எல்லாம் ,அவனை தலையில் சுமக்கிற முட்டாள்கள் தானே ,சாவட்டும்:)

   வாழும் கடவுள்னா சொல்றீங்க :)

   கலரில் எங்கே கனவு வருது :)

   அதான் கரைந்து இப்படி அழைக்கிறாங்க:)

   காக்காவுக்கு கொஞ்சமாவது சாப்பிட வச்சீங்களா :)

   புளு சட்டைக் காரர் மாதிரியா :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தேன். த. ம. பிறகு.

  ReplyDelete
  Replies
  1. த. ம. பிறகுன்னு சொல்லிட்டு இந்த நிமிடம் வரவில்லை ,இதை எங்கே புகார் செய்வதென்றும் தெரியவில்லை :)

   Delete
 7. சாமியாருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை.
  கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் அமைதி இல்லம் தான்.

  மக்கள் நம்பிக்கியயை பயன்படுத்திக் கொண்டு பிழைப்பவர்கள் பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நானே கடவுள் என்றவர் கதறி அழலாமா :)

   Delete
 8. Replies
  1. உங்க ஊர்லேயும் இருக்கா அய்யா :)

   Delete
 9. வெளிச்சத்துக்கு வந்த இரு வழக்குக்கு தலா பத்து ஆண்டு தண்டனை வாரமல் இருக்கும் வழக்குகள் எத்தனையோ
  அனுபவ எழுத்துகளோ
  இரவுக் கனவு மட்டும் பலிக்குமா
  பிழைக்கத்தெரிந்தவர்கள்
  விவேக்கின் ஜோக் நினைவுக்கு வருகிறது காக்கா பிரியாணி
  ஏட்டிக்குப் போட்டி

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் வரப்போகும் வழக்குகளும் எத்தனையோ :)
   இந்த நாலில் அடங்காத கணவன்மார்களும் இருக்கிறார்களா :)
   அதானே ,பகல் கனவு பலிக்காதுன்னு மட்டும் ஏன் சொல்றாங்க :)
   இதுக்கும் பணம் பறிகொடுப்பவர்கள் இருக்கக்கூடும்:)
   வயிற்றில் சத்தம் கேட்குமே அதுவா :)
   இவரோடு குப்பைக் கொட்டுவது மனைவிக்கு சிரமம்தானே :)

   Delete
 10. ரசித்தேன். த. ம.9

  ReplyDelete
  Replies
  1. மனைவி கத்த ஆரம்பிக்கும் முன்பே பூரிக் கட்டை பறந்து வருமோ :)

   Delete
 11. தத்துவம் சொன்ன ராஜ்குமாருக்கும் அதை அறியத் தந்த உங்களுக்கும் என் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தத்துவம் சரிதானே :)

   Delete
 12. மனுசன்,ஞானி, கடவுள் எல்லாம் தமிழ் நாட்டுலதான் இருக்காங்கே என்பதை தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன் தலைவரே.......

  ReplyDelete
  Replies
  1. இது உலகம் முழுமைக்கும் பொருந்தும் தத்துவம் ,தமிழ் நாட்டுக்கு மட்டும் என்று குறுகிய வட்டம் போடுகிறீர்கள் :)

   Delete
 13. பரப்பன அக்ரஹாராவை ரசித்தோம்....

  அனைத்தையும் ரசித்தோம்...ஜி

  ReplyDelete
  Replies
  1. பணம் கொடுத்தால் குற்றவாளிக்கு எல்லா வசதியும் செய்து தரும் சிறைச்சாலை வேறேதும் இருக்கா :)

   Delete