31 August 2017

பார்வை ஒன்றே போதுமா :)

 நமக்கு வரவேண்டிய 15 லட்சம் எப்போ வரும் :)          

              ''பார்த்தீங்களா ,எங்க ஆட்சியிலே ரோஸ் ,பச்சை ,ஆரஞ்சுன்னு கலர்கலரா புது ரூபாய் நோட்டுக்கள் வந்துகிட்டே இருக்கு !''

               ''அது சரி ,கொண்டு வருவோம்னு சொன்ன 'கருப்பு' பணத்தை எப்போ கொண்டு வரப் போறீங்க ?''


தலையணை மந்திரம் எதுவரை வேலை செய்யும் :)

               '' வயது ஏற ஏற ஆண்கள்  தலையணை  இல்லாமல் படுப்பது நல்லதுன்னு   சொல்றாங்களே ,ஏன்  ?''

               '' தலையணை மந்திரம்  வேலை செய்யாத  நேரத்தில்  தலையணை  எதுக்கு ,தேவையில்லைதானே ?''

பார்வை ஒன்றே போதுமா :)   

               ''ஒரே பார்வையிலே ,அளக்காமலே சரியாக தைத்துக் கொடுத்து விடுவாராமே அந்த டெய்லர் !''

              ''நல்ல வேளை ,அவர் ஜென்ட்ஸ் டெய்லரானதால்  தப்பித்தார் !''


பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா :)

            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு அவர் ரொம்ப எச்சரிக்கையா  இருக்காரா,எப்படி  ?''

            ''டிவி இல்லாத வீட்டு வரன்கள் மட்டுமே வேணும்னு  தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ! ''


ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ :)

        ''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''

       ''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''

       ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''


ஸெல்ப் பேட்டரி மக்கர் பண்ணலாம் என்பதால் கிக்கருமா :)

  கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...

  அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 

  சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்த மருத்துவரையும் நம்ப முடியவில்லை ...

  நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது !


மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470647

36 comments:

 1. ''அது சரி ,கொண்டு வருவோம்னு சொன்னா கருப்பு பணத்தை எப்போ கொண்டு வரப் போறீங்க ?''
  " வரும் ஆனா வராது " ரசித்தேன் .

  ReplyDelete
  Replies
  1. ஏமாத்தணும்னா முதலில் ஆசையைத் தூண்டனும் என்பது இதுக்கும் பொருந்தும் தானே :)

   Delete
 2. தலையணை மந்திரம் ஹா ஹா ஹா.. அது எப்படி எனத் தெரிந்தால் போடாமல் விட்டிடுவோமா:)..

  பொண்ணுமேல அப்பாவுக்கு இருக்கும் பாசம் அற்புதம்!! அருமை! வொண்டஃபுல்!.. ஆஆஆஆஆஆஆசம்ம்ம்ம்ம்ம்:) ஹா ஹா ஹா:)..

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு எங்கே கத்துக்கணும் :)

   ஆனால், டிவி இல்லாத வீடு இருக்கா :)

   Delete
  2. யார் அந்த jessie,ஜோக்காளிப் பக்கம் வராமல் டிமிக்கி கொடுக்கிறார் ?தேம்ஸ் நதியோரத்தை சேர்ந்தவரா ,பார்த்து சொல்லுங்க அதிரா :)

   Delete
  3. Haa haa haa அதே அதே... இப்போதானே வரத் தொடங்கியிருக்கிறா... இருங்கோ மிரட்டிக் கூட்டி வருவேன் விரைவில்:)

   Delete
 3. TM 4 .வயது ஆக ஆக தலையணை மிக அவசியம் காரணம் தலையணை மந்திரம் வேலை செய்யாத நிலையில் பெண்கள் பூரிக்கட்டடையை கையில் எடுப்பதால் அதில் இருந்து தலை தப்பிக்க தலையனை மிக அவசியம்... அனுபவம் உள்ளவன் சொன்னால் கேட்டுக் கொள்ளனும் பகவான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தலையை வைக்க பயன்பட்ட தலையணை, இப்போ தலையைக் காப்பாற்றிக்க தேவைபடுவதை அறிந்தேன் ,இனி எந்த தலையணையையும் கண்டம் செய்யக் கூடாது போலிருக்கே :)

   Delete
 4. ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. கருப்பு பணம் வந்தால் நமக்கு வந்து சேருமா ஜி :)

   Delete
 5. அடுத்தது கருப்பு கலர்ல பணத்த அச்சடிக்கிறதுதான்... எப்படியும் கருப்பு பணத்த வெளிக்கொண்டு வரத்தான் போறோம்... நீங்க பார்க்கத்தான் போறீங்க...!

  கேரளத்துச் சாமியாரைக் கூப்பிடுங்க... தலையணை மந்திரத்த சொல்லித்தர வகுப்பு நடத்த ஒரு கோர்ஸ் ஆரம்பிக்கச் சொல்ல வேண்டியதுதானே...!

  நீங்க வேற வெளியில போர்ட பார்க்கலையா... ஆண்களுக்கு மட்டும் அனுமதியில்லைன்னு போட்டிருக்கே...!

  அப்ப இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்லைன்னு சொல்லுங்க...!

  ஜி.... ‘எஸ்’... டி...யையும் சேர்த்துத்தானே போடுவோம்...!

  ஒன்னுமே புரியல ஒலகத்திலே... என்னமோ நடக்கிது...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. கருப்பு பணத்தைக் கொண்டு வந்துட்டோம்னு சொல்லிக்கலாமோ :)

   அதில் சேர்ந்து ஏமாறவும் ஆளிருக்கே இங்கே :)

   அனுமதிக்க வேண்டாம் ,அளவெடுக்கச் சொல்லுங்க :)

   நிலைமையைப் பார்த்தா அப்படித்தான் தோணுது :)

   சிங்கிள் டீக்குமாஜி எஸ் டி:)

   மர்மமாய் எதுவும் நடக்கலியே :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தேன். மதுரைத் தமிழனின் அனுபவ மொழி கேட்டால் நல்லது!

  த.ம. ஏழாம் வாக்கு!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு எல்லோருக்கும் நல்லதுன்னு சொல்லுங்க :)

   Delete
 7. மோடி போன்றவர்களுக்கு தலையனை மந்திரம் போடுவது கஷ்டம்தானே ஜி

  ReplyDelete
  Replies
  1. அவரோட மோடி மந்திரத்தில் இன்னும் மயங்கிக் கிடக்கிறார்களே ஜி :)

   Delete
 8. சிறப்பு சிரிப்பு

  ReplyDelete
  Replies
  1. கருப்பு நோட்டைச் சொல்றீங்களா ஜி :

   Delete
 9. Replies
  1. டூ விலரில் இரட்டை வசதி இருப்பது நல்லது தானா அய்யா :)

   Delete
 10. அனைத்தையும் ரசித்தோம்....

  மதுரை தமிழனின் அனுபவம் பேசுகிறது ஹிஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. அது அவர் அனுபவம் மட்டும்தானா ஜி :)

   Delete
 11. கருப்பு பணம் பற்றிய நகைச்சுவை துணுக்கு சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. கருப்பு பணத்தை மீட்போம் என்று ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிந்து விட்டது ,அதையும் மீட்க முடியவில்லை ,காங்கிரஸ் காலத்து பெட்ரோல் விலையை விட இன்று அதிகமாகி விட்டது ,அதைக் குறைக்கவும் இவர்களால் முடியவில்லை !இது யாருக்கான ஆட்சி :)

   Delete
 12. Replies
  1. டீ விலை ஏறிக்கொண்டே போவதை ரசிக்க முடியுதா :)

   Delete
 13. பார்வையிலே படம் பிடிப்பவர் ..பிடித்த படத்தை மற்றவர்க்கு எப்படி போட்டுக்காட்டுவர் அய்யா...

  ReplyDelete
  Replies
  1. பக்கத்து பருவ மச்சான் ,பார்வையிலே படம் பிடிச்சான் ....அந்த மச்சானிடம் போய் உங்க சந்தேகத்தைக் கேளுங்க :)

   Delete
 14. '' தலையணை மந்திரம் வேலை செய்யாத நேரத்தில்//

  கண்ணீரால் சாதிப்பார்களே!

  ReplyDelete
  Replies
  1. மந்திரம் பரவாயில்லை ,கண்ணீர் ஆபத்தான ஆயுதமாச்சே :)

   Delete
 15. கலர் கலரா பணம் வருதே கருப்பு பணம் எப்போ வரும் ?

  ReplyDelete
  Replies
  1. அந்த கருப்பு பணமெல்லாம் வெள்ளையாக மாறி என் கைக்கு எப்போ வரும் :)

   Delete
 16. வரவேண்டிய 15 லட்சம் கருப்பாகவா வெள்ளையாகவா
  பூரிக் கட்டைக்குத் தப்பிக்க தலையணை தேவைதான் உபயம் அவர்கள் உண்மைகள்
  அவருக்குப் பார்வையால் அளக்க அனுமதி உண்டே
  பெண்ணின் ரசனை தெரியாத அப்பாவா
  இப்பொதெல்லாம் ஜிஎஸ்டியும் காரணமாகுமே
  எல்லாவற்றையும் எப்பொதும் நம்பும் நம்மவர்கள் இருக்கிறார்களே


  ReplyDelete
  Replies
  1. எப்படியோ வந்தால் சரி :)
   இந்த ஐடியா உங்களுக்கு ஏன் வரவில்லை :)
   அனுமதி இல்லாதவர்களும் அளக்கத்தானே செய்கிறார்கள் :)
   பெண்ணுக்கு பிடித்ததே சீரீயல்தானா :)
   ஆமாம் இது ஒரு சாக்கு :)
   எதைத்தான் நம்பாமல் போனார்கள் :)

   Delete