6 August 2017

மல்லுவை மணந்ததால் வந்த குழப்பம் :)

  சித்திரை திருவிழா ஞாபகம் :)               
                 ''அழகரை  ஏண்டா பரிமேழகர்னு சொல்றே ?''
                 ''அவர்தான் குதிரையின் மேலேறி வர்றாரே !''
துட்டை எவன் கொடுப்பான் :)           
                ''இந்த சேலை, பார்டரில் மாங்காய் டிசைன் கொடுத்துள்ளார்கள்,சேலைக்கு மேட்சிங்கா ஜாக்கெட் பிட் கொடுத்துள்ளார்கள் ,சிகப்பு பார்டருக்கு ரோஸ் பாடி கலரை கொடுத்துள்ளார்கள் ...இப்படி வர்ற டி வி விளம்பரத்தைப் பார்த்து  ஏன் சிரிக்கிறீங்க ?''
              '' இதை வாங்க ,யாருக்கு யார்  காசைக்  கொடுத்துள்ளார்கள்  என்பதையும் சொன்னால் சரியாக இருக்குமே !''
                                                        
அகலக்கால் வைச்சா  சிக்கல்தான் :) 
            ''ஓடுற பஸ்ஸிலே ,கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
            ''அகலக்கால் வைச்சு, டிக்கெட் கிழிச்சு கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி போட்டுகிட்டாராமே!''

இவருக்கு பேய் பயம் இருக்கும் போலிருக்கே :)
           ''என்னங்க ,இந்த லாட்ஜிலே அறைகள் சுத்தமாத் தானே இருக்கு ...ஏன் இங்கே தங்க வேண்டாம்னு சொல்றீங்க ?''
           ''எல்லா அறைகளிலும் சீலிங் ஃபேன்களைக் கழற்றிவிட்டு பெடஸ்டல் ஃபேன்களை மாட்டி இருக்கிறதைப் பார்த்தால்,விபரீதமா ஏதோ நடந்த மாதிரி தோணுதே !''

மல்லுவை மணந்ததால் வந்த குழப்பம் :)
        ''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா  தெரிஞ்சதா, எப்படி?''
        ''அவன்  ,மலையாளம்  என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''

தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் :)
        திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
         வால் கிளாக் பெண்டுலம் போல் 
        அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
        இரு பெண்மணிகளின் தயவால் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468520

28 comments:

 1. இப்பொழுதெல்லாம் தனிக்குடித்தனம் போனால்தான் பெண் தருவாங்களாம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இதுவும் சரிதான் ,எதையுமே முதலில் பேசிக் கொள்வது நல்லது தானே ;)

   Delete
 2. Replies
  1. பரிமேழகர் சரிதானே :)

   Delete
 3. Replies
  1. அகலக் கால் வைத்தால் தப்புதானே :)

   Delete
 4. ‘அழகா கள்ளழகா ஆச வச்சேன்... கண்ணழகா ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா... ?’ பரிமேலழகர் உரை செய்வாய்...!

  சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா...? - இதுதானோ...?!

  சீட்டை கிழிச்சிக் கொடுக்காததற்காக அவரோட சீட்டை கிழிச்சிட்டீங்களே...!

  இப்பல்லாம் இங்க யாரும் நாண்டுக்கிட்டு சாகிறது இல்ல... சொன்னா நம்புங்க...!

  ‘ஆழக்கடலில் தேடிய முத்து ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு எங்க ராஜாக்கண்ணு ...!’ தாலாட்டு மலையாளத்தில் பாடி இருப்பார்களோ...?!

  ‘தாலாட்டுப் பாட தாயாகவில்லை...!’அவரோட தாய் விடுவதாக இல்லை...!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. கண் அசைவைக்கூட புரிந்து கொள்ளாத உன்னால் எப்படி உரை எழுத முடியுமோ :)

   ஒரு ஆசையா ,ஓராயிரம் ஆசை இருக்கே :)

   வாங்கிப் போட்டுகிட்ட காசில் பிழைச்சுக்கட்டும்னுதான் :)

   சொல்லாதீங்க ,சீலிங் ஃபேனை மாட்டுங்க :)

   இந்த பாடல் அவ்விட தேசத்திலும் உண்டோ :)

   அப்புறம் எப்படி ,பேரனைப் பார்த்த பிறகு கண் மூடுவாங்களாம் :)

   Delete
 5. Replies
  1. தாய் ,தந்தை மொழி அருமை தானே :)

   Delete
 6. ரசித்தேன்.

  த.ம. ஏழாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. பெண்டுல அசைவு அருமை யா :)

   Delete
 7. Replies
  1. பரி மேல் அழகர் சரிதானே ;)

   Delete
 8. பரி மேலழகரையும் அனைத்தையும் ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. பரீமேழகர் அருள் கிடைத்ததா :)

   Delete
 9. குதிரைமேல் வரும் அழகர் சரிதானே ( பரி மேலழகர் )
  எப்படிச் சொல்ல முடியும் அத்தனை ஏமாளிகளின் பெயர்களையும்
  அகலக் கால் வைத்தும் நடுநிலை தவறி விட்டாரா
  தந்தை மொழிகூட கேட்கிறார்களா
  சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் மாமியார் எந்தப் பெண்வேண்டாமென்கிறாள்

  ReplyDelete
  Replies
  1. இனி இப்படியும் அழைக்கலாம் தானே :)
   கணவன் என்று பொதுவாய் சொல்லிடலாமே :)
   சரியாக சொன்னீர்கள் :)
   கேட்கும் முன்னரே சொல்லி விட்டானே :)
   பாசத்தைக் காட்டினால் சம்பலாமே தேவையில்லையே :)

   Delete
 10. ரசித்தேன்.

  தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் - நம்பற மாதிரி இல்லையே. கூட்டுக்குடித்தனம் கணவனுக்கு நல்லதாச்சே. அவனுக்கு சாப்பாடு எப்படியும் கிடைக்கும். யார் தயவுலயும் இருக்கவேண்டாம். இருவரும் அவங்க கட்சில வச்சுக்க போட்டிபோடுவாங்க.

  த ம

  ReplyDelete
  Replies
  1. தாயா தாரமா ,ஜெயிக்கப் போறது யாரு ,இந்தப் போட்டியில் :)

   Delete
 11. ஓகோ...பய..டேட்டாவை படித்தப்பின் மல்லுவை மணந்ததால் வந்த குழப்பம் தீர்ந்ததா???

  ReplyDelete
  Replies
  1. பயடேட்டா இப்படி போட்டு பயபிள்ள மானத்தை வாங்கிட்டானே :)

   Delete
 12. வால் கிளாக் பெண்டுலமாய் ஆணின் வாழ்க்கை நன்று

  ReplyDelete
  Replies
  1. இந்த பெண்டுலம் ஆடிக் கொண்டே இருக்கக் காரணம் இரண்டு சாவிகள் :)

   Delete
 13. Replies
  1. நேற்றிரவு அழகரைப் பற்றி எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை ,இன்றிரவு அழகர் கோவிலில் பணியில் இருக்கிறேன் அய்யா :)

   Delete
 14. 7 ம் தேதி பதிவு எங்கே?

  அழகர் கோவிலில் பணியா? பரிமேலழகர் கோவிலில் பணியா?

  :))

  ReplyDelete
  Replies
  1. புது ப்பெயர் சூட்டிய என்னை பார்க்க நினைத்ததாலோ என்னவோ திடீரென்று அங்கே பணி பார்க்க வேண்டியதாய் போனது :)

   Delete