24 August 2017

மோகம் இப்படியும் மறக்க வைக்குமோ :)

           ''என் கணவருக்கு வடகம் என்றால் உயிர்னு, உனக்கு எப்படி தெரிந்தது ?''
           ''ராசியைக் கேட்டா கூட வடகராசின்னு சொல்றாரே !'' 

ரதியை எதிர்பார்த்து ஏமாந்த மன்மதன் :)
             ''இவ்வளவு அசிங்கமா ஒரு பொண்ணை  வச்சுகிட்டு ,எங்களை எதுக்கு பெண் பார்க்க  வரச் சொன்னீங்க ?''

             ''அழகான மணப்பெண் தேவைன்னு விளம்பரம் கொடுத்த மன்மதன் யார்னு  பார்க்கத்தான்  !'' 

இவர் மனோதத்துவ டாக்டர்  ஆச்சே :)             
              ''அழகான பெண் வேலைக்கு தேவைன்னு எதுக்கு டாக்டர் கேட்கிறீங்க ?''
             ''நான் பீஸ் கேட்டா , நூறு ரூபாய் தரவும் அழுவுறாங்களே!''

டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ :)
            ''காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திக்கிட்டியே ...இப்போ விட்டுட்டு போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
             ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''
இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா :)
             ''என்  புருஷன் சரியான அல்பம்...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
              ''ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
              ''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,நியாயம்தானே :)
      வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
      ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
      காரணம் என்னவென்றால் ...
      தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
      மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT ! 

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க்...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1470177

36 comments:

 1. ''என் கணவருக்கு வடகம் என்றால் உயிர்னு, உனக்கு எப்படி தெரிந்தது ?''
  ''ராசியைக் கேட்டா கூட வடகராசின்னு சொல்றாரே !''
  ஒரு வேளை ஜெமினிகணேசனா இருப்பாரோ ?

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு பிடித்தது சாம்பார் தானே :)

   Delete
  2. வடகம் இல்லாத சாம்பாரா ?

   Delete
  3. பருப்பு இல்லாமல் சாம்பாரா என்றுதானே சொல்வார்கள் :)

   Delete
 2. மண்"மதன் எப்படி இருந்தாரு..... ?

  ReplyDelete
  Replies
  1. மண்ணை மாதிரி தான் :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன் ஜி. செருப்பு ஜோக் ஸூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அல்பம் தான் உங்களுக்கு பிடிக்குமா:)

   Delete
 4. வட கறின்னாலும் அவருக்கு உசுராம்...! ஹரே ராம்...!

  மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே,...!

  அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ? கரைப்பார் கரைத்தால்தான் கல்லும் கரையுமே...!

  இப்ப விட்டிட்டு போனவன் ரெண்டாவது... மூனாவது ஆள் கிடைக்காமலா போயிடுவான்... ஆரோ... எவரோ... எத்தனை பேர மாத்தினாலும் பேர மட்டும் மாத்திரதா இல்ல...!

  ‘செருப்பு பிஞ்சுடும்...’ எங்கேயோ கேட்ட குரலா இருக்கே...!

  எல்லாத்தையும் மூளைச் சலவை செய்து வச்சிருக்கீங்க...!

  த.ம.+1


  ReplyDelete
  Replies
  1. ராம் எதுக்கு இங்கே வந்தார்ன்னு தெரியலே :)

   வேறெதைக் கிள்ளச் சொல்றே :)

   பெண்ணுக்கு பெண்ணே பேராசைக் கொள்ளும் பெண் கிடைப்பாளா :)

   அது சரி நாட்டிலே சுரேஷ்களுக்கா பஞ்சம் :)

   செருப்பைப் பறி கொடுத்தவர் குரலாய் இருக்குமோ :)

   அப்படின்னா இது உண்மையில்லையா :)

   Delete
 5. Replies
  1. இவர் மனோதத்துவ டாக்டரின் ஐடியா சரிதானா ஜி :)

   Delete
 6. மன்மதன் யார்ன்னு பார்க்கும் ஐடியா சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நம்ம அதிரடி அதிராவின் ஐடியாவையும் செயல்படுத்திப் பாருங்களேன் :)

   Delete
 7. ஓட்டு போட்டாச்சுன்னு வருது. நான் அப்பாலிக்கா வரேன்

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு ராஜிக்கு மட்டும் இப்பூடி ஆகுது??:)... நீங்க சைன் இன் பண்ணியபடியே இருப்பின்.. ஒரு தடவை சைன் அவுட் பண்ணி மீண்டும் சைன் இன் பண்ணிப்பாருங்கோ..

   Delete
  2. அப்பாலிக்கா வராம இருந்திடக் கூடாது ....அழுதிடுவேன் :)

   Delete
  3. உங்க ஐடியாவை நானும் கடைப்பிடிக்கலாம்னு இருக்கேன் :)

   Delete
 8. அடடா என்னாச்சு பகவான் ஜீ ? வரவர வோட் குறையப் பார்க்குதே.. விடாதீங்க.. ஓடுங்கோ.. நீங்க ஓடுவது பத்தாது ஸ்பீட்டைக் கூட்டுங்கோ...

  அதுசரி இப்போ சொப்பனசுந்தரியை ஆரு வச்சிருக்கா?:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சூஊஊஊஊஊ மகுடம் ஆரிடம் இருக்கு எனத்தான் கேட்க வந்தேன் நம்புங்கோ..:)

  ReplyDelete
  Replies
  1. வாரக் கடைசியில் ,கூட்டிக் கழிச்சுப் பார்த்தா வோட் அதிகமாய்த்தான் இருக்கும் :)

   மகுடத்தை நண்பர் கில்லர்ஜீயிடம் கொடுத்துள்ளேன் ,இரவு சரியாக 12 மணிக்கு ஒப்படைத்து விடுவார் :)

   Delete
 9. அந்தக் கணவருக்கு இன்னும் மளலைப் பேச்சு மாறவில்லைப்போலும்:)..
  மன்மதனுக்கு இந்த ஆப்புத்தேவைதான்:)
  டொடர் ஜோக் புரியல்லே நேக்கு:(..

  ஒருவருக்கு ஒருவர் எனும் காலம் இப்போ மலையேறி விட்டதால்.. பெயரைப் பச்சை குத்துவது இனிமேல் தவிர்க்கவேண்டும் என கவுண்மெண்ட்டிடம் இருந்து சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்... ஏனெனில் ஒருவரின் பெயரை உடம்பில் பச்சை குத்துவது என்பது இலகுவானதல்ல... அவ்ளோ தூரம் மனம் விரும்புவதாலேயே எது நடந்தாலும் நடக்கட்டும் எனக் குத்துகிறார்கள்... முடிவு யார் குற்றமோ சேர முடியாமல் போகும் பட்சத்தில் மாட்டுப்பட்டு விடுகிறார்கள்...

  நல்ல கணவர்:).. எப்படியாவது மாட்டேன் எனச் சொல்லாமல் மனைவிக்கு செருப்பு எடுத்துத்தாறேன் என ஒத்துக் கொண்ட அந்த நல்ல குணத்தை நான் ரசிக்க்கிறேன்:).. ஹா ஹா ஹா பொஸிடிவ்வா திங் பண்ணோனும்:)..

  உடல்.. மூளை.. நீங்க சொல்வது உண்மைதான் பகவான் ஜீ.. அப்போ மீ வரட்டா..

  ஊசிக்குறிப்பு... எனக்கு பதிலுக்கு “ஜி” எல்லாம் போட்டிடாதீங்க... :)

  ReplyDelete
  Replies
  1. இன்னும் வடாம் தின்னும் ஆசையே விடவில்லை :)
   நொந்து போய் ஃஹாப் அடித்து கவுந்து இருப்பாரா :)
   ஜொள்ளுப் பார்ட்டிக்கு மட்டும்தான் புரியும் :)
   இதை ,பச்சைத் துரோகம்னு சொல்லலாமா :)
   ஆனால் செயல் நெகடிவ்வா இருக்கே :)
   மூளை வேலைக்கு நமக்குத்தான் ஒண்ணும் கிடைக்கலே :)
   ஏன் ஜி என்றால் ஆண்பாற் சொல்லா :)

   Delete
 10. கடக ராசிக்காரருக்கு நண்டு பிடிக்க வேண்டுமா
  வந்தவர் மன்மதனா
  ஃபீஸ் யாருக்கு டாக்டருக்கா அழகான நர்சுக்கா
  அதற்குத்தான் ஏதாவது கடவுள் பெயரை பச்சை குத்திக் கொண்டிருக்கலாம் காதலன் பெயரும் கடவுள் பெயரும் ஒன்றாயிருந்தால்
  நல்லநாள் வரும்வரை காத்திருக்க வேண்டும் இது பழைய ஜோக் போல் இருக்கிறதே
  இப்படியுமொரு வியாக்கியானம்

  ReplyDelete
  Replies
  1. பிடிக்கத் தெரியாது ,ருசிக்கத் தெரியும் :)
   கொடுக்கிறவன் இதை யோசிக்கணும் :)
   அடக் கடவுளே ,இது தெரியாம போச்சே :)
   தேய்ஞ்சு போன செருப்புதான் :)
   அப்படின்னா ,அது தப்பா :)

   Delete
 11. மனோதத்துவ டாக்டர் ஆண்களின் மனதை அறிந்தவர் அல்லவா? அதனால் தான் அவ்வாறு விளம்பரம் தந்திருக்கிறார். அனைத்தையும் இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. இதை மற்ற டாக்டர்களும் பின்பற்றலாமே :)

   Delete
 12. மன்மதன் - ரதி இருவருக்கும்
  உடலில்லையே
  எப்படிப் பார்த்திருப்பார்கள்?

  தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உடல் இல்லையேல் அவர்கள் ரதி மன்மதனே இல்லையே :)

   g பிளச் சில் பகிர்ந்து விட்டேன் :)

   Delete
 13. அனைத்தும் நன்று. ஒரு வாரம் சென்னை பயணம். பொறுத்து கொள்வீர்

  ReplyDelete
  Replies
  1. சென்னை சென்று அண்டராய்ட் செல் வாங்கி அதில் கலக்க வாழ்த்துகள் :)

   Delete
 14. செருப்பு ஜோக் ஹாஹாஹாஹா அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பழசு என்றாலும் சுவை தானே :)

   Delete
 15. மன்மதன் யாராக இருக்கும் சூப்பர் ஜீ! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மன்மதனைப் பார்க்காமல் இருப்பதே மேல் :)

   Delete
 16. வடகம் என்றால் மீதமாகிப் போன சொத்த சின்ன சின்ன பொடியா வெயில்ல காய வைக்கிறாங்களே அதுதானுங்களா.....

  ReplyDelete